பெறுநர். 28-03-2016
தொழிலாளர் ஆணையர் அவர்கள்,
தொழிலாளர் துறை,
சென்னை – 600 006.
மரியாதைக்குரிய அம்மையீர்,
பொருள் : தமிழ்நாடு மின்சார வாரியம் – எழுத்துப்பிரிவு அல்லாத
இதர
தொழிலாளர்கள் மற்றும் எழுத்துப்பிரிவு தொழிலாளர்களுக்கு
சான்றிடப்பட்ட
நிலையாணைகளில் சில கூறுகளுக்கு,
திருத்தங்களை, தொழிலகப் பணிகள் (
நிலையாணைகள் )
சட்டம் 1946 பிரிவு 10
(2)-ன்படி முன்மொழிவது தொடர்பாக.
-2-
தமிழ்நாடு
மின்சார வாரிய, எழுத்துப்
பிரிவு அல்லாத இதர
பணியாளர் களுக்கு 27-10-1965ல் ஒப்புதல் அளிக்கப் பட்ட நிலையாணை விதிகளும், தமிழ்நாடு
மின்சார வாரிய பிரிவு கணக்குப் பணியாளர்களுக்கு
01-08-1969ல்
ஒப்புதல் அளிக்கப் பட்ட நிலையாணை விதிகளும்
தற்சமயம் நடைமுறையில்
உள்ளன.
எழுத்துப் பிரிவு அல்லாத இதர தொழிலாளர்களுக்கு விடுப்பு(LEAVE) சலுகையைப் பற்றி நிலையாணைவிதி 19லும், எழுத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கு விடுப்புச் சலுகையைப் பற்றி நிலையாணைவிதி 13
(i) க்கான A இணைப்பிலும், அலுவலக உதவியாளர்கள் மற்றும் தபேதார்களுக்கு நிலையாணைவிதி 13க்கான B இணைப்பிலும், வரையறை செய்யப்பட்டிருக்கிறது.
பல்வேறு
விடுப்புகளில், அரைமாத சம்பளத்துடன் கூடிய, 6 மாதங்களுக்கான, சொந்த அலுவலுக்கான
ஈட்டா விடுப்பினை எடுத்துக்கொள்ளலாம் என்பதும் ஒன்றாகும். இந்தச் சலுகை எழுத்துப் பிரிவு அல்லாத இதர
தொழிலாளர்களுக்கும், எழுத்துப்பிரிவில் அலுவலக உதவியாளர் மற்றும் தபேதார்களுக்கும்
ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள நிலையாணைகளில் வழங்கப் படவில்லை. எனவே
தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று நிர்வாகத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே ஊதிய உயர்வு மற்றும் வேலை பளு சம்மந்தமாக தொழிலாளர் ஆணையர் முன்பு 21-10-1985 அன்று தொழிற் தகராறு சட்டம் பிரிவு 12(3)ன் கீழ் ஏற்பட்ட ஒப்பந்தம் பிரிவு 11ல் கீழ்கண்ட ஷரத்து சேர்க்கப் பட்டது.
“
LEAVE ON PRIVATE AFFAIRS TO THE REGULAR WORK ESTABLISHMENT WORKMEN “
Leave
on Private Affairs on half Pay for six months in all and three months at any
one time with be allowed to the employees borne on the
Regular Work Establishment in revised scale of
pay of and above Rs.620-20-720-25-845-30-995.
In the case of Office
Helpers and Duffadars and Regular Work Establishment workmen in
the scale of pay Rs.510-10-560-15-635-20-735-25-860, Leave on Private Affairs
on half Pay will be subject to the
following.
a)
Eligibility after 15 years of regular
service only
b)
After 15 years of service but below 25 years
of service – three months
c)
After 25 years of service, the spell of
leave not availed during 15-25 years and another three months. “
இந்த ஒப்பந்த ஷரத்து வாரிய உத்தரவு B.P.Ms. (FB) No. 94, ( Secretariat Branch) Dated 20-11-85 –ன்படி
அமுல்படுத்தப்பட்டு வருகிறது.. இந்த உத்திரவில் மேலே குறிப்பிடப்பட்ட விடுப்புச்
சலுகையினை நிலையாணை விதிகளில்
சேர்ப்பதற்கான திருத்தம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தாலும் இதுநாள்
வரையிலும் திருத்தப்படாமலேயே இருக்கிறது.
-3-
மேற்கண்ட ஈட்டாவிடுப்புச் சலுகையானது பணியாளர்கள் தங்களது பணிக் காலத்தில் விடுப்பு எடுத்துக் கொள்வதற்கு மட்டுமே வழங்கப் பட்டது. விடுப்பை பணமாக்கிக் கொள்வதற்கான சலுகை என்பது அப்போது எழவில்லை.
ஏனெனில் மின்வாரியத்தில் ஈட்டா விடுப்பினை பணமாக்கிக் கொள்வதற்கான சலுகை 1996-ம் ஆண்டு
இறுதியில்தான் வாரிய உத்திரவு எண் 75, நாள் 06-11-1996ல் அமுல் படுத்தப் பட்டது. இதுவும் ஓராண்டுக்குப்பின் வாரிய உத்திரவு எண் 76, நாள் 11-09-1997ல் நிறுத்தப் பட்டுவிட்டது.
பின்னர் நீண்ட நெடிய
சட்டப் போராட்டத்தினைத் தொடர்ந்தும், தொழிற் சங்கங்களின் முறையீட்டினை ஏற்றும், 14
ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஈட்டாவிடுப்பினை பணமாக்கிக் கொள்ளும் சலுகை வாரிய ஆணை (PER)
CMD TANGEDCO PROCEEDINGS NO.52 , DATED THE 14TH FEBRUARY, 2014.-ல்
வழங்கப்பட்டது. இதன்படி ஏற்கனவே ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 10 தவணைகளில் பணம்
வழங்கப்பட்டது, பணியிலிருப்பவர்களுக்கு ஓய்வு பெற்ற நாளில் தொடர்ந்து விடுப்பிற்கான தொகை வழங்கப்
பட்டு வருகிறது.
இந்நிலையில் வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெறும் அலுவலக உதவியாளர்கள், தபேதார்கள் மற்றும் குறைந்த ஊதியத்தில் (ரூ.5400-20200
+G.P.1900) பணியாற்றும் காவலர்கள், துப்புறவாளர்கள், கள உதவியாளர்கள் முதலிய 21 பிரிவு களத்தொழிலாளர்களுக்கு மட்டும் 15 ஆண்டுகள் நிரந்தரப் பணி முடித்தப்பின், 15 முதல் 25 ஆண்டுவரை 3 மாதமும், 25 ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்தப் பின் மேலும் 3 மாதமும் பணமாக்கும் சலுகை வழங்கப் படும் என்று கூறப் படுகிறது.
இதனால்
கடைநிலை ஊழியர்கள் பெரிதும் பாதிப்புகுள்ளாகிறார்கள். குறிப்பாக 15 ஆண்டுகளுக்குள் இறந்துவிட்டால் / ஓய்வு பெற்றுவிட்டால் அவர்களுக்கு ஈட்டா விடுப்பினை பணமாக்கும் சலுகை கிடையாது என்று கூறப்படுகிறது. மேலும் 25 ஆண்டுகளுக்குள் ஓய்வு பெற்றாலோ இறந்து விட்டாலோ 3 மாத விடுப்பைதான் பணமாக்க முடியும் என்று
கூறப்படுகிறது. .
அலுவலக உதவியாளர்கள், தபேதார்கள் மற்றும் கடைநிலையில் உள்ள களப் பிரிவு ஊழியர்கள் விடுப்பு எடுப்பதை கட்டுபடுத்திட வேண்டும் என்பதற்காக வரையறுக்கப்பட்ட விதிகளை அவர்கள் ஓய்வு பெறுகின்ற அல்லது இறந்துவிடுகின்ற
-4-
நேர்வுகளில் பெறுகின்ற, ஈட்டா விடுப்பை பணமாக்கும் சலுகைக்கு எதிராகப் பயன்படுத்துவது நியாயம் அல்ல.
எனவே மின்வாரியத்தில் பணிபுரியும் இதர ரூ.5,400-20,200-+ G.P.2200 ஊதியம் பெறும் தொழிலாளர்கள் பெறுகின்ற பலனை அலுவலக உதவியாளர்கள், தபேதார்கள் மற்றும் கடைநிலையில் உள்ள களப்பிரிவு ஊழியர்களும் பெறுகின்ற வகையிலும், தொழிலாளர்களின் இடையே பாரபட்சம் நீக்கும் வகையிலும், எழுத்துப்பிரிவு அல்லாத தொழிலாளர்களுக்கான நிலாயாணைவிதிகளில் பிரி 19(ii) ல்
UNEARNED LEAVE ON
PRIVATE AFFAIRS
PERMANENT WORKMEN - SIX MONTHS – HALF PAY –
என்று சேர்த்திட வேண்டும்.
எழுத்துப்பிரிவு தொழிலாளர்களுக்கான
நிலாயாணை விதிகளில் பிரிவு 2.13 (i)– ல் தற்போதிருக்கும்N”FOR OFFICE HELPERS AND DUFFEDARS” என்ற தலைப்பின் கீழ் 2. UNEARNEUNED
LEAVE என்ற உபதலைப்பின்
கீழ் 2 (iii) ஆக
LEAVE ON PRIVATE AFFAIRS -
PERMANENT WORKMEN - SIX MONTHS – HALF PAY –
என்று சேர்த்திட
வேண்டும். UNEARNED
நிலையாணைவிதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியதற்கான சூழ்நிலை,
நியாயங்கள் மற்றும் காரணங்களை நாங்கள் முன் வைத்துள்ளோம்.
இதன்மீது தாங்கள் விசாரணை செய்து,
இரண்டு நிலையாணை விதிகளிலும் நாங்கள் முன்மொழிந்திருக்கும் திருத்தங்களை செய்து,
சான்றிதழினை வழங்கிடுமாறு வேண்டுகிறோம்.
மின்சாரவாரிய நிர்வாகத்தின் முகவரி
மற்றும் நிர்வாகத்துடன் கலந்து கொள்ளும் தொழிற்சங்கங்களின், பெயர் மற்றும் முகவரி
கொண்ட பட்டியலை இத்துடன் இணைத்துள்ளோம். LEAV
தங்கள் உண்மையுள்ள
பொதுச்செயலாளர்
No comments:
Post a Comment