அனைத்து வீட்டு மின் இணைப்புக்கும் 100 யூனிட் மின்கட்டணம் இலவசம்

ஜெயலலிதா கையெழுத்திட்ட 5 திட்டம்: 80 லட்சம் பேருக்கு இனி மின் கட்டணம் கிடையாதுதமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதன் மூலம், சுமார் 80 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்று திங்கள்கிழமை மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

இதைத்தொடர்ந்து, வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 5 முக்கியத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு கையெழுத்திட்டார். அதன்படி மே 23-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.


இரண்டு மாதத்திற்கு 100 யூனிட் பயன்பாட்டாளருக்கு  கட்டணம் முற்றிலும் இல்லை-
200 யூனிட் வரையிலான பயன்பாட்டாளருக்கு   கட்டணம் ரூ.170


No comments: