மின்வாரிய கள உதவியாளர் பணிக்கான பதிவுமூப்பு பட்டியல் தூத்துக்குடி மாவட்ட இணையதளத்தில் வெளியீடு

தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிர்மானக் கழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கள உதவியாளர் பணிக்கான பதிவுமூப்பு பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிர்மானக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கள உதவியாளர் (F‌i‌e‌l‌d A‌s‌s‌i‌s‌ta‌n‌t) பணி காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் மாநில அளவிலான பதிவுமூப்புப் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.
எனவே, கள உதவியாளர் பணி காலியிடத்துக்கு ஐடிஐ - எலக்ட்ரீசியன் மற்றும் ஐடிஐ - வயர்மேன் கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்களின் வயது வரம்பு மற்றும் பதிவுமூப்பு குறித்த விவரங்கள் அனைத்தும் தூத்துக்குடி மாவட்ட இணையதளத்தில் (w‌w‌w.‌t‌h‌o‌o‌t‌h‌u‌k‌u‌d‌i.‌n‌ic.‌i‌n) வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடத்துக்கான கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் பதிவுமூப்புக்குள் இடம் பெற்றிருப்பதை உறுதிசெய்து கொள்ளுமாறும், பதிவுமூப்புக்குள் இருந்து பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களின் அனைத்துக் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் பிப். 15 ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் ஆஜராக வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...