மின்வாரியத்தில் திருமணமான பெண்ணிற்கு கருணைப் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு ( தினமலா் செய்தி)

மதுரை: 'திருமணம் முடிந்துவிட்டதாகக்கூறி, கருணைப் பணி நியமனம் வழங்க மறுப்பது தவறு,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை உமாமகேஸ்வரி தாக்கல் செய்த மனு:எனது தந்தை மின்வாரியத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணிபுரிந்தார். 2011 அக்.,24 ல் இறந்தார். கருணைப் பணி நியமனம் கோரி, மின்வாரிய மதுரை கண்காணிப்பு பொறியாளரிடம் மனு அளித்தேன். அவர், 'உங்களுக்கு திருமணமாகி விட்டது,' என நிராகரித்தார். இதை ரத்து செய்து, பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார். நீதிபதி டி.ஹரிபரந்தாமன்: திருமணமான பெண் வாரிசுகளுக்கும், கருணைப் பணி வழங்கும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, சூழ்நிலைக்கேற்ப மாற்றம் கொண்டுவருவது மக்கள் பயனடையவே. குறிப்பிட்ட கால நிர்ணயம் வரையறுத்து, அதற்கு முன் திருமணம் முடிந்தவர்களுக்கு கருணைப் பணி உண்டு. அதற்கு பின், திருமணம் முடிந்தவர்களுக்கு கருணைப் பணி வழங்க முடியாது என்பது, ஒருவரை ஒருவர் வேறுபடுத்துவதாகும்.மனுதாரர் உடன் பிறந்தவர்களில் 2 பேரும் பெண்கள். திருமணம் முடிந்துவிட்டதாகக்கூறி, பணி வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல. பணி வழங்குவது பற்றி தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார். மனுதாரர் வழக்கறிஞர் வி.முனியசாமி ஆஜரானார்.

No comments: