மின் வாரியத்தில் 1,950 பேருக்கு வேலை விரைவில் வெளியாகிறது அறிவிப்பு (தினமலா் செய்தி)

மின் வாரியத்தில், புதிதாக, 1,950 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. 
                              தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், பொறியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதில், 50 ஆயிரம் இடங்கள் காலி. இதனால், மின் உற்பத்தி, வினியோகம் உள்ளிட்ட பணிகளில், ஒருவரே, பலரது வேலையை செய்ய வேண்டியுள்ளது. இதையடுத்து, 1,950 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான, நிதி ஒதுக்கீடு குறித்து, உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தற்போது, அந்தப் பணியும் முடிவடைந்ததால், ஊழியர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.

                         இதுகுறித்து, வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர் என, 1,950 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு, தீபாவளி முடிந்த, 10 நாளில் வெளியிடப்படும். 2016 மார்ச்சில், ஊழியர்கள் தேர்வு முடிக்கப்பட்டு விடும்' என்றனர்.

No comments:

மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )

  மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...