Tnebaesu சுற்றறிக்கை – 08 / 2015 நாள் : 20-08-2015 and சுற்றறிக்கை – 09 / 2015 நாள் : 22-08-2015

தமிழ்நாடு மின்கழகக் கணக்காயர் களத் தொழிலாளர் சங்கம்     
பதிவு எண் (2472)              அங்கீகாரம் பெற்றது.
தலைமை இடம் : சென்னை


k.சந்திரசேகரன்B.A.,                                                   r.சந்திரசேகரன்                                      
  தலைவர்                                                                     பொதுச்செயலாளர்  
                           
Union Office : Hall No.7,M.L.D.C.Building TNEB COMPLEX, Anna salai, Chennai – 600 002.
சுற்றறிக்கை 08 / 2015                                                                          
                                                                நாள் : 20-08-2015
அன்புடையீர்
                                . கடந்த மாதம் 06 /2015 நாள் 04-07-2015 சுற்றறிக்கையில் இளநிலை உதவியாளர் / நிர்வாகம் மற்றும் இளநிலை உதவியாளர் / கணக்கு உள்முகத் தேர்வுக்கு கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி என்பதற்குப் பதிலாக பட்டப் படிப்பு என்று மாற்றி அமைத்த வாரிய நிர்வாகத்தின் 24-05-2014 தேதியிட்ட உத்திரவிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நமது சங்கம் 03-07-2015 அன்று தடை உத்திரவு பெற்றது பற்றி அறிவித்திருந்தோம். இதற்கிடையில் நிர்வாகம் சுமார் 900 பொறுப்புக்களை நிரப்பிட  ஏற்கனவே கொடுத்திருந்த கெடு 06-07-2015  15-0வணக்கம்7-2015  தேதிகளின்படி பட்டம் பெற்றிருக்கும் சுமார் 100 பேரிடம் மட்டுமே இளநி/லை உதவியாளர் உள்முகத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வந்திருப்பதாக அறிகிறோம். இந்நிலையில் நிர்வாகத்தின் அணுகுமுறை எப்படியிருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
                                எஸ்.எஸ்.எல்.சி  கல்வித் தகுதி பெற்று இளநிலை உதவியாளர் உள்முகத் தேர்வுக்கு செல்ல விரும்பும் உறுப்பினர்களிடமிருந்து வழக்கு செலவாக தலா ரூ.2000/- த்தினை விரைவில் வசூலித்து மத்திய சங்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.

                                கடந்த சுற்றறிக்கையில் நாம் தெரிவித்தப்படி 1.) பகுதி நேர தொழிலாளர்களுக்கும் குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.1,50,000/- உண்டு என வாரிய உத்திரவு 23-07-2015ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2.) வாரிசு வேலைக்கு பட்டப் படிப்பில் முதல் வகுப்பு பெற்றவர்களுக்கு மட்டும்தான் இளநிலை உதவியாளர் நியமனம் என்ற விதியைத் தளர்த்தி 2ம் வகுப்பில் தேர்வு பெற்ற பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கிட வாரிய உத்திரவு    27-07-2015ல்  பிறப்பிக்கப் பட்டுள்ளது.

                                களப்பிரிவு தொழிலாளர்களின் இருவழிப்பாதை பதவி உயர்வு முறையினை மாற்றி அமைப்பது சம்மந்தமாக இன்னமும் சம்மேளனம், நமது சங்கம், தொ.மு.ச. மற்றும் மத்திய அமைப்பு ஆகிய சங்கங்களிடையே கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்று வருகிறது. ஒருமித்த கருத்தினை உருவாக்கி நிர்வாகத்திற்குத் தெரிவித்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். 
                  
             மின்சார சட்டதிருத்த 2014 மசோதா பாராளுமன்றத்தில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட்டு 13 வரை எந்த தேதியில் வேண்டுமானாலும் அறிமுகப் படுத்தப் படலாம் என்ற உத்தேசத்தில் மசோதா அறிமுகப் படுத்தும் நாளன்று மின்சாரத் தொழிலாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்வதென்று முடிவெடுத்து அதற்கான தொழிலாளர்கள் ஆதரவை திரட்டிட சம்மேளனம், நமது சங்கம், தொ.மு.ச. மற்றும் மத்திய அமைப்பு, ஐ.என.டி.யூ.சி, பொறியாளர் சங்கம், மற்றும் பொறியாளர் கழக அமைப்புகளின் சார்பில் மாநிலம் முழுவதும், வாயிற்கூட்டம், ஆர்ப்பாட்டம், துண்டறிக்கை வெளியீடு, போஸ்டர் அச்சடிப்பு, தொழிலாளர்கள் நேரடி சந்திப்பு என்ற கூட்டு இயக்கங்களை நடத்திய அனைத்து சங்க பொறுப்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம். கூட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக வேலூர் மத்திய அலுவலகத்திற்கு வெளியே 06-08-2015 அன்று மாலை 05.00 மணியளவில் நடைபெற்ற பெருந்திரள் தொழிலாளர் கூட்டத்தில் பொதுச்செயலாளர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

                                ஜூலை மாதம் 27, 28 தேதிகளில் மின்துறையில் ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பொருளாதார மற்றும் தொழில் நுட்ப உதவியுடன் அமுல்படுத்தப் படும் மின் திட்டங்களில் அவர்கள் விதிக்கும் நிபந்தனைகள் அதனால் மின்சார அமைப்பில் கட்டாயமாக நிறைவேற்றப்படும் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதித்திட பி.எஸ்.ஐ. சார்பில் ஒரு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. சென்னை வட்டங்களில் பணியாற்றும் நமது சங்க உறுப்பினர்கள் 14 பேர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

திரு.A.V. ரவி அவர்கள்புதிய தலைமைப்பொறியாளர் /பணியமைப்பாகவும், திரு.M.பாண்டி அவர்கள் இயக்குனர் விநியோகமாகவும்,                 திரு.K.சிவப்பிரகாசம் அவர்கள் இயக்குனர் உற்பத்தியாகவும்,               திரு.S.சம்பத்குமார் அவர்கள் இயக்குனர் ப்ராஜெக்ட்ஸ் ஆகவும்,                   திரு.R.பாலாஜி அவர்கள் வாரிய செயலாளராகவும், பொறுப்பேற்றுள்ளனர்.    உயரதிகாரிகளை மரியாதை நிமித்தமாக நமது சங்கத்தின் சார்பில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்.  
   
                                அட்டைப்பட்டியல் பணியாளர்கள் பிற்பகல் 3.30 மணிக்கு பணிமுடித்து விட்டு “டாடா” காட்டிவிட்டு செல்வதாகவும் எனவே ktndkfமேலும் 1 மணிநேரம் உயர்த்தி பிற்பகல் 3.30 மணி வரை வசூல் பணியினை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஓரு சங்கம் வாரியத் தலைவருக்கு கடிதம் கொடுத்துள்ளது. அதனை ஏற்றுக் கொள்ள திட்டமிட்டு, தொழிற்சங்கங்களுக்கு தொழிற்தகராறு சட்டம் பிரிவு 9Aன்படி நோட்டீஸ் கொடுக்கவுள்ளதாக அறிகிறோம்.  தேர்ச்சி பெற்ற வாரிய அதிகாரிகள், முதிர்ச்சி பெற்ற தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து பேசி அட்டைப் பட்டியல் கேடர், பணி அளவு, பணி நேரம், இதர பணி நிலைகள் ஆகியவைகளையெல்லாம் ஆழமாகவும், தீவிரமாகவும் பரிசீலனை செய்து ஒப்பந்தத்தின் மூலம், 3 தலைமுறைகளுக்கு மேலாக செயல் பட்டு வரும் நிலையில்,  இப்பணித் தொகுப்புக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் விவரம் தெரியாமல் கொடுக்கும் கடிதத்தின் அடிப்படையில், வசூல் நேரத்தை உயர்த்திட 9A நோட்டீஸ் கொடுக்க முற்படுவது தவறான அணுகுமுறையாகும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம். வேலை நேரத்தை காலை 8.30 மணிமுதல் 12.30வரையும் மதியம் 1.30 மணி முதல் 3.30 மணி வரை என்றும் வசூல் மையம் 2.30மணிவரை என்றும் நிரணயிக்கப் பட்டதென்றால் 2.30 மணிமுதல் 3.30 மணிவரை கைகட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தமா? அன்றைய தினம் வசூல் செய்த பணத்தை எண்ணுவதற்கும், கணக்கை TALLY செய்வதற்கும், P.C.B.எழுதி, பணத்தை பாதுகாப்பிற்கு ஒப்படைத்து பின்னர் வங்கி ஏஜென்டிடம் பணத்தைக் கொடுப்பதற்கும், இதர இடங்களில் செலான் தயார் செய்து வங்கியில் பணத்தைச் செலுத்த ஏற்பாடு செய்வதற்கும்
நேரம் வேண்டாமா? இவை எல்லாம் அலுவலக வேலையல்லவா?. அட்டைப் பட்டியல் ஊழியர் எவரும் 3.30மணிக்கு “டாடா” காட்டிவிட்டு செல்வதில்லை. மாறாக மடியில் கட்டியிருந்த நெருப்பை இறக்கிவைத்த மனநிலையில்தான் அலுவலகத்தை விட்டுச் செல்கிறார்கள். மேலும்  6 மணி பணி நேரத்தை 7 மணி நேரமாக உயர்த்திட இன்றுள்ள சட்டங்கள் அனுமதிக்காது என்பதையும் நிர்வாகம் கொடுத்த வசூல் நேர அதிகரிப்புக்கான நோட்டீஸ் முறியடிக்கப் படும் என்பதையும் உறுப்பினர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். தொழிலாளர்களுக்குள், தொழிற்சங்கங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்திட வேண்டுமென்று சம்மந்தப் பட்டவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்

பதவி உயர்வுகள்

          தொழில் நுட்ப உதவி உதவியாளரிலிருந்து இளநிலை மின் பொறியாளர் 2ம் நிலை  பொறுப்பிற்கு Memo. No 046895/350/G.3/G.3(1)/2012-3 , dated   10.07.2015.  மூலம் 1026 பேருக்கு பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது.

          வணிக ஆய்வாளர் மற்றும் மின்பாதை ஆய்வாளர் பொறுப்புகளில் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற உத்திரவின் அடிப்படையில் இளநிலை மின் பொறியாளர் 2ம் நிலை  பொறுப்பிற்கு Memo. No. 010489 / 63/G.3/G.31/ 2012-4, dated  10.07.2015.மூலம் 42 பேருக்கு பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது.

          மேலும் Letter No. 010489/63/G.3/G.31/2015- 1 ,  dated  03.08.2015. மூலம் நீதிமன்ற உத்திரவு பெற்று விடுபட்டுப் போன 12 பேருக்கு இளநிலை மின் பொறியாளர் 2ம் நிலை  பொறுப்பிற்கு பதவி உயர்வு வழங்குவதற்கான விவரங்கள் கோரப்பட்டுள்ளன. களப்பிரிவு தொழிலாளர்களில் 22-06-2015 வரை டிப்ளோமா, தேர்வு பெற்றவர்களின் விவரம் ( நீதிமன்ற வழக்கில் இல்லாதவர்கள் ) இளநிலை மின் பொறியாளர் 2ம் நிலை  பொறுப்பிற்கு பதவி உயர்வு வழங்குவதற்காhக கோரப்பட்டுள்ளன. களப்பிரிவு தொழிலாளர்கள், மின்பாதை ஆய்வாளர் / வணிக ஆய்வாளர் முதன்மை அடிப்படையில்  இளநிலை மின் பொறியாளர் 2ம் நிலை பதவி உயர்வு வழங்கிட விரைவில் விவரங்கள் கேட்கப்படவுள்ளன.
                          
                   தலைமைப்பொறியாளர் / பணியமைப்பு அவர்களின் Letter No.021832/421/G26/ G261/2015, dated 01.08.2015.  வாயிலாக  பிரிவு வாரியாக கணக்கீட்டாளர்களின் காலிப்பொறுப்புகள் விவரம் கோரப்பட்டுள்ளது.
தலைமைப்பொறியாளர் / பணியமைப்பு அவர்களின்  
Letter No.052963 /205/G.29/ G291/2015-1,  dated  :   28.07.2015. வாயிலாக இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய பொறுப்பு களிலிருந்து, உதவியாளர் (கணக்கு) பொறுப்பிற்கு தகுதிகாண் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
          
  Letter No.055120/1066/G31/G312/2015-1, dated  17.07.2015. வாயிலாக 48 பேருக்கு உதவி நிர்வாக அலுவலர் பொறுப்பிலிருந்து நிர்வாக அலுவலர் பொறுப்பிற்கு தகுதி காண் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

       வருவாய் மேலாளரிலிருந்து மதிப்பீட்டு அலுவலர் பதவி உயர்வு வழங்கிட தகுதிகாண் அறிக்கை இன்னும் சில தினங்களில் கேட்கப் படவுள்ளது.

                உதவி கணக்கு அலுவலரிலிருந்து கணக்கு அலுவலர் பதவி உயர்வுக்கான பேனல் தயாரித்திட இன்னும் சில தினங்களில் D.P.C. நடைபெறவுள்ளது. தற்போது சுமார் 40 கணக்கு அலுவலர் பொறுப்புக்கள் காலியாக உள்ளது.

              ஓய்வூதியர்களுக்கான மருத்துவசெலவுத் தொகை 04-08-2014 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  
                  
                                பதிவு எழுத்தர் பொறுப்புகளில் 5க்கு 1 என்ற விகிதாச்சாரத்தில் பதிவு உதவியாளர் என்று பதவியினை உயர்த்தவும் இதற்கு சீனியாரிட்டி எப்படி எடுப்பது என்பதற்கும் சங்கங்களுடன் 22-08-2015 அன்று நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்திடவுள்ளது.

                                வெளிநாடு செல்லும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திட, வாரியத்தின் தடையில்லா சான்று ( NOC ) பெறவேண்டும் என்ற நடைமுறை மாற்றப்பட்டு பணியாளர் நேரிடையாக பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பித்து, அதன் நகலினை, தான் பணியாற்றும் அலுவலருக்கு அனுப்பினால் போதும் என்பதற்கான வாரிய உத்திரவு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

                                              சங்கத்தின் உயர்மட்டக்குழு கூட்டம் 08-08-2015 அன்று சென்னையில் நடைபெற்றது. கடந்த ஓராண்டு காலத்தில் சங்க நடவடிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளபட்டு மதிப்பாய்வு செய்யப் பட்டது. மீண்டும்     18-08-2015 அன்று கூடி 02-09-2015 அன்று மத்திய அரசின், தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிடக்கோரி நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்த்த்தில் நமது சங்கமும் கலந்து கொளவது என முடிவெடுக்கப்பட்டது.

                                2015ம் ஆண்டிற்கான சந்தா வசூல் செய்து இன்னமும் செலுத்தாத கிளைகளிலிருந்து விரைவில் சந்தாவை வசூல் செய்து மத்திய சங்கத்தில் செலுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.                                                                                                             
                                                 தோழமையுள்ள
 
                                                பொதுச்செயலாளர்
பெறுதல் ;
கிளைச்செயலாளர்கள்,
வட்டச்செயலாளர்கள்,
மண்டலச்செயலாளர்கள் மற்றும்
மத்திய சங்கப் பொறுப்பாளர்கள். 
நகல் : செய்தி மடல்.



தமிழ்நாடு மின்கழகக் கணக்காயர் களத் தொழிலாளர் சங்கம்
பதிவு எண் (2472)              அங்கீகாரம் பெற்றது.
தலைமை இடம் : சென்னை

k.சந்திரசேகரன் B.A.,                                                   r.சந்திரசேகரன்
தலைவர்                                                                     பொதுச்செயலாளர்

Union Office : Hall No.7,M.L.D.C.Building TNEB COMPLEX, Anna salai, Chennai – 600 002.
சுற்றறிக்கை – 09 / 2015     
                                                                                                                                                                        நாள் : 22-08-2015
அன்புடையீர்,
             வணக்கம். இன்று ( 22-08-2015 ) காலை, 6 பதிவு எழுத்தர் பொறுப்புகளில் ஒன்றினை பதிவு உதவியாளர் பொறுப்பாக உயர்த்தி பதவி உயர்வு வழங்கிடும் தமிழக அரசாணை எண்.2, நாள் 2-6-1996ஐ அரசின் NO.18173/ Fin (BPE) / 13, நாள்.24-05-2013ன்படி மின்சார வாரியத்தில் அமுல்படுத்துவது தொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. நமது சங்கத்தின் சார்பில் தலைவர், பொதுச்செயலாளர், மற்றும் தலைமை அலுவலக வட்டங்களின் செயலாளர் திரு. எஸ்.செல்வ வெங்கட சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டோம்.

            அனைத்து சங்கங்களும் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் கீழ்கண்ட முன்னேற்றங்கள் பெற்றிடும் வாய்ப்பு ஏற்படும் என்று கருதுகிறோம்.

1)    அனைத்து வட்டங்களுக்கும் பதிவு எழுத்தர் பொறுப்புகள் வழங்கப்பட்டு உடனடியாக நிரப்பப்படும்.

2)    அதன்பின் மொத்தம் அனுமதிக்கப்பட்ட பொறுப்புகளில் 5:1 ஒன்று விகிதத்தில்   பதிவு உதவியாளர் பொறுப்புக்கள் தகுதி ( Up graded ) உயர்த்தப்படும்.

3)    பதிவு எழுத்தர் முதன்மை, மாநில அளவில் தயாரித்து தகுதி உயர்த்தப்பட்ட பதிவு உதவியாளர் பொறுப்புகளுக்கு எதிராக, முதன்மை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும். தற்போது எந்தவட்டத்தில் பணியாற்றுகிறாரோ அதே வட்டத்திலேயே பதவி உயர்வு வழங்கப்படும்.

4) தற்போது பதிவு எழுத்தர் பொறுப்பு ஊதியம்   ரூ.5400-20,200+2200-ஜி.பி. உத்தேசிக்கப்படும் பதிவு உதவியாளர் ஊதியம் ரூ.5400-20,200+2500-ஜி.பி. பதவி உயர்வுக்கு  3% ஆண்டுயர்வும் – ஜி.பி.ரூ.300 உயர்வும் கிடைக்கும். தேர்வுநிலை பதிவு எழுத்தரிலிருந்து பதிவு உதவியாளர் பதவி உயர்வு பெற்றால் 3% ஆண்டுயர்வு கிடைக்கும்.

5)    விரைவில் இதற்கான முன்மொழிவு தயாரிக்கப்பட்டு சங்கங்களின் சம்மதம் பெற்று வாரிய உத்திரவு பிறப்பிக்கப் படும்.பதவி உயர்வினை அரசு உத்திரவு நாள் 24-05-2013 முதல் மின்வாரியத்தில் அமுல்படுத்திடவேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம்.
                                                        தோழமையுள்ள

                                                       பொதுச்செயலாளர்
பெறுநர் ; வட்டச்செயலாளர்கள், மண்டலச்செயலாளர்கள்,
          மற்றும் மத்திய சங்கப் பொறுப்பாளர்கள்.  
நகல்   :  செய்தி மடல். 


    


No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click