மத்திய அரசின் மின் பகிர்மான கழகத்தில் பொறியாளர் பணி

மத்திய அரசின் மின் பகிர்மான கழகத்தில் (Power Grid Corporation of India) நிரப்பப்பட உள்ள பொறியளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். CC/03/2015
பணி: Engineer
காலியிடங்கள்: 35
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 31.05.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Power System அல்லது அதற்கு இணையான பொறியியல் பாடப்பிரிவில் எம்.டெக், எம்.இ, எம்.எஸ், எம்.எஸ்சி பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.இ., பி.டெக் படிப்பில் குறைந்தது 65 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.05.2015 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: பொறியியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.460. இதனை எஸ்பிஐ வங்கியின் ஏதாவதொரு கிளையில் பணமாக செலுத்த வேண்டும். இதற்கான செல்லான் படிவம் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு சான்றை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்

No comments:

Promotion of Assessor to the post of Inspector of Assessmt

promotion of Assessor to the post of Inspector of Assessmt Assr to IA-panel   ALLOTMENT