4-ம் வகுப்பு படித்தவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவேண்டும் மின்சார கழகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, 
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் திருமணிராஜா. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய தாயார் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 17-ந்தேதி அவர் இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன்பே என்னுடைய தந்தை இறந்துவிட்டார். இதனால், நானும், என்னுடைய தம்பி, தங்கை மட்டும் தனியாக வசித்து வருகிறோம். இதையடுத்து கருணை அடிப்படையில் வேலை கேட்டு தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்திடம் விண்ணப்பம் செய்தேன். ஆனால், நான் 4-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும், 8-ம் வகுப்பு தேர்ச்சிப்பெறவில்லை என்றும், இதனால் எனக்கு வேலை வழங்க முடியாது என்று கூறி, என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனவே, என் விண்ணப்பத்தை நிராகரித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யவேண்டும். எனக்கு வேலை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், ‘கடைநிலை ஊழியர் பணிக்கு ஒருவர் தமிழில் எழுத படிக்கத் தெரிந்தாலே போதுமானது ஆகும். 8-ம் வகுப்பு தேர்ச்சிப் பெறவில்லை என்று கூறி மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை ரத்து செய்கிறேன். அவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்துக்கு உத்தரவிடுகிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார். 

நன்றி தினதந்தி

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click