வேலைவாய்ப்பு பயிற்சி துறை(பயிற்சி பிரிவு) இணை இயக்குநரால் அறிவிக்கப்பட்டுள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பணிக் காலியிடத்திற்கு தகுதியானவர்களின் பதிவு மூப்பு விவரம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து திருமலைச்செல்வி சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு: இப்பணிக்காலியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அங்கிகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் வெல்டர், மோட்டார் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்டேசன் மெக்கானிக், மெக்கானிஸ்ட், வயர்மேன், டர்னர், ரெப்ரிஜிரேசன் அன்ட் ஏர் கன்டிசனர் மெக்கானிக், டெஸ்க் பப்ளிஷிங் ஆபரேட்டர், கணிப்பொறி ஆபரேட்டர் அன்ட் புரோகிராமிங் அசிஸ்டென்ட், எலெக்ட்ரீசியன், பிட்டர் ஆகிய பிரிவுளில் தேர்ச்சி பெற்று என்.டி.சி. மற்றும் என்.ஏ.சி சான்றிதழ் பெற்று பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பணியிடத்திற்கு 1.7.2013 அன்றைய நாளில் பழங்குடியினர், ஆதிதிராவிடர், அருந்ததியினர் ஆகியோருக்கு 40 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, முஸ்லீம் ஆகியோருக்கு 37 வயதிற்குள்ளும் மற்றும் இதர பிரிவினருக்கு 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இதில், அரசு விதிமுறைப்படி வயது தளர்வு ஆகியவை உண்டு.
எனவே மேற்குறிப்பிட்ட தகுதிகளை பதிவு செய்துள்ளவர்களின் உத்தேச பதிவு மூப்பு விவரம் www.virudhunagar.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு மூப்பு, கல்வி தகுதி மற்றும் வயது ஆகியவைகளை கொண்ட பதிவுதாரர்கள் மட்டும் அனைத்து அசல் தகுதி சான்றிதழ்களுடன் வருகிற 13-ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து சரிபார்த்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் வருகிறவர்களின் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment