#Solar_Net_Feed_in_Meter என்றால் என்ன... ?

Solar பற்றி ஓரளவு தெரிந்தவர்களுக்கு Solar Net Meter என்ன என்பதும் தெரிந்திருக்கும். Solar Net meter என்பது நமது வீட்டில் இருக்கும் Energy meter போலத்தான்.. நம்ம வீட்ல இருக்குற Energy Meter only நாம என்ன units EB யில் இருந்து use பண்ணிருக்கோம் என்பதை மட்டுமே எண்ணிக்கையில் வைத்து கொள்ளும். Solar Net meter என்பது நாம எவ்வளவு Units EB யில் use பண்ணிருக்கோம், எவ்வளவு Units EB க்கு கொடுத்து இருக்கிறோம் என்பதையும் எண்ணிக்கையில் வைத்து கொள்ளும் இதன் மறு பெயர் Bi-Directional Meter என்றும் கூறுவார்கள், ஏன் என்றால் இரண்டு பக்கமும் உள்ள Units ஐ இது எண்ணிக்கையில் வைத்து கொள்ளும். அதாவது Import and export ன்னு சொல்லுவாங்க..
Import என்பது EB யில் இருந்து வாங்கிய Units,
Export என்பது EB க்கு நாம் அனுப்பிய Units. என்றும் கூறலாம்.
அதெப்படி EB க்கு நாம Power கொடுப்பது. EB யில் இருந்துதான வாங்குகிறோம்.. என்ற கேள்விகள் வரலாம் அதன் விளக்கம் இதோ..
Solar Power Plant பொறுத்தவரையில் நான் முன்பு சொன்ன பதிவின்படி ON Grid or Grid Tie என்ற system உண்டு. இது Only day time மட்டுமே வேலை செய்ய கூடியது, இதில் battery வராது. Power failure ஆனால் இது வேலை செய்யாது.
இந்த வகை System வேலை செய்ய AC Side ல் இருந்து Reference voltage தேவைப்படும் அந்த reference voltage நமது LT panel, MV Panel or DG யில் இருந்து எடுத்து கொள்ளலாம், இதை Synchronization என்று கூறலாம். Solar Inverter Ouput Cableஐ நாம் நமது LT panel Bus Bar யில் தான் Connect செய்வோம்,  இங்கே கிடைக்கும் reference voltage வைத்துத்தான் இது Power ஐ நமது Loads க்கு முதல் priority யாக அனுப்பும். இப்போது Loads இல்லாத போது எங்கிருந்து இந்த reference voltage கிடைக்கிறதோ அங்கையே inverter திரும்ப அனுப்பும், இப்படி அனுப்பபடும் power தான் Net meter யில் export units என எண்ணிக்கையில் வைத்து கொள்ளும்.. அப்படி அனுப்ப அவசியம் இல்லை என்றால் RPR Reverse Power Relay, reverse protection relay.. என்ற relay மூலம் தடுத்து நிறுத்தி கொள்ளலாம்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நாம் நமது வீட்டு மாடியில் 10 kw solar அமைத்து இருக்கிறோம். நமக்கான தேவை 20 KW என வைத்து கொள்ளலாம். இப்போது Solar inverter எப்படி வேலை செய்யும் என்பதை கூறுகிறேன்..

நல்லா வெயில் இருக்கிறது, நல்ல Generation வருகிறது இப்போ Solar la இருந்து வருகிற 10 kw நமது Loads க்கு inverter மூலம் அனுப்பபடும். மீதம் நமக்கு தேவையான 15 kw EB யில் இருந்து Share செய்து கொள்ளும்,

இப்போது வெயில் இல்லை, மேகமா இருக்கிறது 10 kw போட்றுக்குற இடத்துல 3 kw தான் வருகிறது என்றால்
இந்த 3 kw யும் inverter loads க்கு அனுப்பி வைக்கும். மீதி தேவையான 22 kw EB யில் இருந்து share செய்து கொள்ளும்.

இப்போது நல்ல generation இருக்கிறது, 10 kw வருகிறது ஆனால் நம்ம வீட்டில் அல்லது factory யில் Loads இல்லை அல்லது factory leave என வைத்து கொள்ளலாம். இப்போது generation ஆகிற Solar power net meter மூலம் EB க்கு அனுப்ப படும் இதைத்தான் நாம் exported units என்கிறோம்.

TNEB இந்த export ஆன Units ஐ கணக்கில் வைத்து கொண்டு import பண்ணுண units யில் இருந்து கழித்து கொண்டு இருந்தது, அதாவது ஒரு மாதத்திற்கு நீங்கள் உங்களுடைய consumption போக 40 units export செய்து இருக்கிறிர்கள், 100 units EB யில் இருந்து வாங்கியிருக்கிறிர்கள் என வைத்து கொண்டால் 100 - 40 = 60 units க்கு மட்டுமே TNEB நம்மிடம் இருந்து வசூலித்தது, இது Solar Net Meter யின் படி. இது only for வீட்டுக்கு, school,college, hospitals மட்டுமே இருந்தது. industrys, factories க்கு இந்த திட்டம் இருந்ததில்லை.
ஆனால் இப்போது பிப்ரவரி மாதம் வந்த solar policy யின் படி factories, industries, ( LT Customers only. ) இவர்களுக்கும் solar meter வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.. இப்போ உள்ள policy யின் படி நாம Exports பண்ற units ஐ import செய்த units யில் இருந்து கழிப்பது இல்லை அதற்கு மாறாக நாம் export செய்கிற units க்கு TNEB யில் இருந்து 2.25 பைசா மட்டுமே கழித்து கொள்கிறார்கள் அதாவது
நம்முடைய consumption போக 40 units EB க்கு export செய்து இருக்கிறோம் என வைத்து கொள்ளுங்கள் இப்போது 100 units EB யில் இருந்து வாங்கி இருக்கிறோம். நமது industrial tariif யின் படி ஒரு unit க்கு 6.35
அப்போ நாம EB க்கு pay பண்ண வேண்டிய தொகை 100 Units × 6.35 = 635 Rs ( Tax, contract demand சேர்க்கவில்லை only for example )
இப்போ நாம Export செய்த units க்கு EB கொடுக்க வேண்டிய தொகை
40 units × 2.25 = 90 Rs இப்போது நமது solar consumption போக வந்த EB bill 635 யில் இருந்து 90 ரூபாய் கழித்து 545 ரூபாயாக நமது EB bill வரும், இதுதான் Solar Net Feed in mechanism எனப்படும்
இன்னும் இரண்டு மாதங்களில்
HT consumers க்கும் Solar approvals மற்றும்  இந்த மீட்டர் வழங்கபடும். என எதிர்பார்க்கபகிறது..

#தகவலுக்கு_நன்றி
திரு.Sudhahar A.

No comments: