Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
புது மின் இணைப்புக்கு கட்டணம் பல மடங்கு உயர்த்த மின்வாரியம் முடிவு: கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - தினகரன் செய்தி
35 AE/ 17 JE I Gr to AEE (Mech) PAR's Called for
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரிட் நிறுவனத்தில் வேலை
சம்பளம்: மாதம் ரூ. 60,000 - ரூ.1,80,000 வழங்கப்படும்.
Additional Panel Called from CHD/90 JE I Gr/ 142 AE to AEE (Elec) Promotion Suitability Called for
#Solar_Net_Feed_in_Meter என்றால் என்ன... ?
Solar பற்றி ஓரளவு தெரிந்தவர்களுக்கு Solar Net Meter என்ன என்பதும் தெரிந்திருக்கும். Solar Net meter என்பது நமது வீட்டில் இருக்கும் Energy meter போலத்தான்.. நம்ம வீட்ல இருக்குற Energy Meter only நாம என்ன units EB யில் இருந்து use பண்ணிருக்கோம் என்பதை மட்டுமே எண்ணிக்கையில் வைத்து கொள்ளும். Solar Net meter என்பது நாம எவ்வளவு Units EB யில் use பண்ணிருக்கோம், எவ்வளவு Units EB க்கு கொடுத்து இருக்கிறோம் என்பதையும் எண்ணிக்கையில் வைத்து கொள்ளும் இதன் மறு பெயர் Bi-Directional Meter என்றும் கூறுவார்கள், ஏன் என்றால் இரண்டு பக்கமும் உள்ள Units ஐ இது எண்ணிக்கையில் வைத்து கொள்ளும். அதாவது Import and export ன்னு சொல்லுவாங்க..
Import என்பது EB யில் இருந்து வாங்கிய Units,
Export என்பது EB க்கு நாம் அனுப்பிய Units. என்றும் கூறலாம்.
அதெப்படி EB க்கு நாம Power கொடுப்பது. EB யில் இருந்துதான வாங்குகிறோம்.. என்ற கேள்விகள் வரலாம் அதன் விளக்கம் இதோ..
Solar Power Plant பொறுத்தவரையில் நான் முன்பு சொன்ன பதிவின்படி ON Grid or Grid Tie என்ற system உண்டு. இது Only day time மட்டுமே வேலை செய்ய கூடியது, இதில் battery வராது. Power failure ஆனால் இது வேலை செய்யாது.
இந்த வகை System வேலை செய்ய AC Side ல் இருந்து Reference voltage தேவைப்படும் அந்த reference voltage நமது LT panel, MV Panel or DG யில் இருந்து எடுத்து கொள்ளலாம், இதை Synchronization என்று கூறலாம். Solar Inverter Ouput Cableஐ நாம் நமது LT panel Bus Bar யில் தான் Connect செய்வோம், இங்கே கிடைக்கும் reference voltage வைத்துத்தான் இது Power ஐ நமது Loads க்கு முதல் priority யாக அனுப்பும். இப்போது Loads இல்லாத போது எங்கிருந்து இந்த reference voltage கிடைக்கிறதோ அங்கையே inverter திரும்ப அனுப்பும், இப்படி அனுப்பபடும் power தான் Net meter யில் export units என எண்ணிக்கையில் வைத்து கொள்ளும்.. அப்படி அனுப்ப அவசியம் இல்லை என்றால் RPR Reverse Power Relay, reverse protection relay.. என்ற relay மூலம் தடுத்து நிறுத்தி கொள்ளலாம்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நாம் நமது வீட்டு மாடியில் 10 kw solar அமைத்து இருக்கிறோம். நமக்கான தேவை 20 KW என வைத்து கொள்ளலாம். இப்போது Solar inverter எப்படி வேலை செய்யும் என்பதை கூறுகிறேன்..
நல்லா வெயில் இருக்கிறது, நல்ல Generation வருகிறது இப்போ Solar la இருந்து வருகிற 10 kw நமது Loads க்கு inverter மூலம் அனுப்பபடும். மீதம் நமக்கு தேவையான 15 kw EB யில் இருந்து Share செய்து கொள்ளும்,
இப்போது வெயில் இல்லை, மேகமா இருக்கிறது 10 kw போட்றுக்குற இடத்துல 3 kw தான் வருகிறது என்றால்
இந்த 3 kw யும் inverter loads க்கு அனுப்பி வைக்கும். மீதி தேவையான 22 kw EB யில் இருந்து share செய்து கொள்ளும்.
இப்போது நல்ல generation இருக்கிறது, 10 kw வருகிறது ஆனால் நம்ம வீட்டில் அல்லது factory யில் Loads இல்லை அல்லது factory leave என வைத்து கொள்ளலாம். இப்போது generation ஆகிற Solar power net meter மூலம் EB க்கு அனுப்ப படும் இதைத்தான் நாம் exported units என்கிறோம்.
TNEB இந்த export ஆன Units ஐ கணக்கில் வைத்து கொண்டு import பண்ணுண units யில் இருந்து கழித்து கொண்டு இருந்தது, அதாவது ஒரு மாதத்திற்கு நீங்கள் உங்களுடைய consumption போக 40 units export செய்து இருக்கிறிர்கள், 100 units EB யில் இருந்து வாங்கியிருக்கிறிர்கள் என வைத்து கொண்டால் 100 - 40 = 60 units க்கு மட்டுமே TNEB நம்மிடம் இருந்து வசூலித்தது, இது Solar Net Meter யின் படி. இது only for வீட்டுக்கு, school,college, hospitals மட்டுமே இருந்தது. industrys, factories க்கு இந்த திட்டம் இருந்ததில்லை.
ஆனால் இப்போது பிப்ரவரி மாதம் வந்த solar policy யின் படி factories, industries, ( LT Customers only. ) இவர்களுக்கும் solar meter வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.. இப்போ உள்ள policy யின் படி நாம Exports பண்ற units ஐ import செய்த units யில் இருந்து கழிப்பது இல்லை அதற்கு மாறாக நாம் export செய்கிற units க்கு TNEB யில் இருந்து 2.25 பைசா மட்டுமே கழித்து கொள்கிறார்கள் அதாவது
நம்முடைய consumption போக 40 units EB க்கு export செய்து இருக்கிறோம் என வைத்து கொள்ளுங்கள் இப்போது 100 units EB யில் இருந்து வாங்கி இருக்கிறோம். நமது industrial tariif யின் படி ஒரு unit க்கு 6.35
அப்போ நாம EB க்கு pay பண்ண வேண்டிய தொகை 100 Units × 6.35 = 635 Rs ( Tax, contract demand சேர்க்கவில்லை only for example )
இப்போ நாம Export செய்த units க்கு EB கொடுக்க வேண்டிய தொகை
40 units × 2.25 = 90 Rs இப்போது நமது solar consumption போக வந்த EB bill 635 யில் இருந்து 90 ரூபாய் கழித்து 545 ரூபாயாக நமது EB bill வரும், இதுதான் Solar Net Feed in mechanism எனப்படும்
இன்னும் இரண்டு மாதங்களில்
HT consumers க்கும் Solar approvals மற்றும் இந்த மீட்டர் வழங்கபடும். என எதிர்பார்க்கபகிறது..
#தகவலுக்கு_நன்றி
திரு.Sudhahar A.
*டெபிட், கிரெடிட் கார்டு மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்: மின் அலுவலகங்களில் விரைவில் அறிமுகம்* "தி இந்து தமிழ்
"
*மின்கட்டணத்தை மின்வாரிய அலுவலகங்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்த மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.*
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 2 கோடிக்கும் மேற்பட்ட வீடு களுக்கான மின்இணைப்புகளும், 20 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 30 லட்சம் வர்த்தக மின்இணைப்புகளும் உள்ளன. இதற்கான கட்டணத்தை நுகர்வோர் தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணமாக செலுத்தி வருகின்றனர். கணிசமானோர் ஆன்லைனில் நெட் பேங்கிங் மூலமாகவும், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டை பயன் படுத்தியும் செலுத்துகிறார்கள்.
மின்வாரிய அலுவலகங்களில் பணமாக வசூலிக்கப்படும் தொகை மின்வாரியத்தின் கணக்கில் குறித்த நேரத்தில் சேர்வதில்லை.
இதனால், மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யும்போது, அதற்குரிய கட்டணத்தை குறித்த நேரத்தில் செலுத்த முடியாத நிலை மின்வாரியத்துக்கு ஏற்படுகிறது.
இதையடுத்து, ரூ.10 ஆயிரத் துக்கு மேற்பட்ட மின்கட்டணத்தை காசோலை (செக்) மற்றும் வரை வோலை (டிமாண்ட் டிராப்ட்) மூலம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இதிலும் சிக்கல் ஏற் பட்டது. பலர் கடைசி நாளில் காசோலை மூலம் மின்கட்டணம் செலுத்துகின்றனர். அவர்களிடமிருந்து காசோலை பெற்று அதை மாற்றி பணமாக வரவு வைக்கும் முன் அவர் களுக்கு அபராதம் விதிக்கும் சூழல் ஏற்படுகிறது. அத்துடன், கிராமப்புறங்களில் தொழில் புரிபவர்கள் மின்கட்டணத்தை காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த சிரமப்படுகின்றனர்.
மேலும், மின்கட்டணத்தை ரொக்கமாக பெறும்போது சில்லறை கொடுப்பதிலும் பிரச்சினை ஏற்படுகிறது. தற்போது, வங்கி கள் மேற்கொண்டு வரும் மின்னணுப் பணப் பரிமாற்ற நடவடிக்கை காரணமாக, பெரும் பாலானவர்கள் டெபிட், கிரெடிட் கார்டை பயன்படுத்துகின்றனர்.
எனவே, இந்த கார்டுகளைப் பயன்படுத்தி 'பாயிண்ட் ஆப் சேல்ஸ்' (பாஸ்) எனப்படும் கைய டக்க கருவி மூலம் மின்கட்ட ணத்தை வசூலிக்க மின்வாரியம் முடிவுசெய்துள்ளது. விரைவில் அனைத்து மின்வாரிய அலுவல கங்களிலும் இக்கருவி மூலம் பணம் வசூலிக்கப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித் தனர்.
மின்வாரியத்தில் 7 ஆயிரம் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: மின்துறை அமைச்சர் தினமணி செய்தி
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர் பணியிடங்கள் உள்பட 7 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என மின்சாரம், மதுவிலக்கு, ஆயத் தீ ர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
குமாரபாளையத்தை அடுத்த பள்ளிபாளையத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று மனுக்களைப் பெற்றுகொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது: -
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பணி நியமனத்தில் பிற மாநிலத்தவரையும் சேர்த்துக்கொள்வதை தமிழ்நாடு மின்சார வாரியமும் பின்பற்றுகிறது. இதன்படி, வடமாநிலத்தவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டாலும், தமிழ் தெரிந்தால் மட்டுமே அவர்களுக்கு பணி வழங்கப்படும்.
காலியாக உள்ள உதவிப் பொறியாளர், வயர்மேன், கேங்மேன் உள்ளிட்ட 7 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட்டு, காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும்
மின்கட்டணம் உயர்த்தப்படாது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.7 ஆயிரம் கோடிக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பள உடன்பாடு செய்ததில் ரூ.1,500 கோடி, கஜா புயல் நிவாரணம் ரூ.2,500 கோடி, மத்திய தொகுப்பில் இருந்து பெறப்படும் மின்சாரத்துக்கு யூனிட் ஒன்றுக்கு 44 பைசா விலையுயர்வு, நிலக்கரி, அவற்றை ரயிலில் கொண்டு வருதல் உள்ளிட்ட செலவினங்களால் இந்தச் சுமை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தமிழக அரசு நிதியைக் கொண்டு இச்சுமை சரி செய்யப்படுவதால் மின் கட்டணம் உயர்த்தப்படாது.
மின்தட்டுப்பாடு இல்லை: பராமரிப்புப் பணிகள் முடிந்து மின் உற்பத்திக்கு அனல் மின்நிலையங்கள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்துக்கு அனல் மின் நிலையங்களிலிருந்து 4,500 மெகாவாட், மத்தியத் தொகுப்பிலிருந்து 6,500 மெகாவாட், நீண்டகால கொள்முதல் 3,300 மெகாவாட், நீர்மின் திட்டத்திலிருந்து 2,000 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதால் மின்வெட்டு ஏற்படாது. காற்றாலை மின்சாரம் தற்போது குறைந்து வந்தாலும் மின்தட்டுப்பாடு ஏற்படும் சூழல் இல்லை.
மத்திய மின்துறை புதிய மின்கொள்கை குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது. அது குறித்த வரைமுறைகள் கிடைத்த பின்னரே கருத்து தெரிவிக்க முடியும்.
81 AE/28 JE I Gr to AEE (Mech) Suitability Called for and 5 AEE/Electrical Panel approved on 30.07.2019 Cancelled & included in not selected list Orders Issued
புதியமின் இணைப்புக்கு இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்கும் வசதி தினமலர் செய்தி
தமிழகத்தில் மின் வினியோகம் செய்யும் பணியை, மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது. இதனால், கட்டுமான பணிகளை மேற்கொள்வோர், புதிய மின் இணைப்பிற்கு, வாரிய அலுவலகங்களில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். அங்கு, அதற்கான கட்டணத்துடன், லஞ்சம் தருவோருக்கு தான், மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை தரப்படுகிறது.நிராகரிப்புலஞ்சம் தராதவர்களின் விண்ணப்பங்கள், தாமதம் செய்யப்பட்டதோடு, கேள்வி கேட்பவர்களின் விண்ணப்பங்கள், ஏதேனும் காரணங்களை கூறி நிராகரிக்கப்பட்டன. இதனால், பலர் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து, 2016 ஆகஸ்டில், புதிய மின் இணைப்பிற்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை, மின் வாரியம் துவக்கியது. அதில், அனைத்து விபரங்களும் கணினியில் பதிவாவதால், எந்த இடத்தில் தாமதம் ஏற்படுகிறது என்பதை, துல்லியமாக கண்டறிய முடியும். இணைப்பு வழங்க தாமதிக்க முடியாது. ஆனால், அத்திட்டம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. இதுவரை, 15 ஆயிரம் பேர் மட்டுமே, இணையதளத்தில் விண்ணப்பித்து உள்ளனர்
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கிராமங்களில் வசிப்போர் சிரமப்படுவர் என்பதால் தான், மின் இணைப்பிற்கு, இணையதளத்தில் மட்டும் விண்ணப்பம் பெறாமல், விண்ணப்பம் வாயிலாகவும் பெறப்படுகிறது. காகித பயன்பாடுதற்போது, கிராமங்களிலும், வேகமான இணைய சேவை, எப்போதும் கிடைக்கிறது. இது குறித்த, விபரமும், அங்குள்ளவர்களிடம் உள்ளது. இதனால், லஞ்சம் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க, புதிய இணைப்பிற்கு, இணைய தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கும் வசதியை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஆலோசிக்கப்படும். இந்த முறையால், காகித பயன்பாடு, செலவு, நேரம் குறையும்.இவ்வாறு, அவர் கூறினார்.