வீடு அல்லது வணிக மின் இணைப்பிற்கு விண்ணப்பம் படிவம்-1-ல் விண்ணப்பிக்கவும். மேற்படி விண்ணப்பம் மின்வாரிய பகுதி அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும்.
- விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் கொடுக்கவும். மின் இணைப்பு தேவைப்படும் இடத்திற்கான சட்டப்படி உரிமைதாரர் என்பதற்கான உரிய ஆவணம் கொடுக்க வேண்டும்.
- தான் பொறுப்பேற்றுள்ள இருப்பிடத்துக்குச் சொந்தாக்காரராக இல்லாமல் மின் வழங்கல் கேட்கும் நுகர்வோர், படிவம்-5-இன் படி சம்மதக் கடிதத்தை இருப்பிட உரிமையாளரிடமிருந்து பெற்றுத் தரவேண்டும். அப்படிப்பட்ட சொந்தக்காரர் சம்மதக் கடிதம் தர மறுத்துவிட்டால,சட்டப்படி அந்த இருப்பிடத்தின் பொறுப்பேற்றுள்ளதற்கானச் சான்றை நுகர்வோர் தரவேண்டும்.மேலும் படிவம்-6-இன்படியான காப்புறுதி பத்திரத்தின் வாயிலாக உரிமதாரருக்கு, பொறுப்பாளருக்கு மின்னிணைப்பு வழங்கலால் உருவாகும் தகராறுகளால் விளையும் இழப்புக்குக் காப்புறுதி தந்து,மேலும் இயல்பான காப்புவைப்புத் தொகையைப் போல இரட்டிப்பு மடங்குத் தொகையை வைப்புத் தொகையாகச் செலுத்தவும் உறுதியேற்க வேண்டும்.
- மின் இணைப்பு கோருவோர் மாநில அரசின் இதர சட்டங்களுக்கு உட்பட்டு கட்டுமானம், மாற்றங்கள் அல்லது சரி செய்யும் பணிகள் கட்டிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் போது அல்லது இதர நிறுவனங்களுக்கு அல்லது புதிய தொழிற்சாலை நிறுவப்படும் போது பெறப்பட வேண்டிய ஒப்புதல் அல்லது ஒப்பளிப்பு அல்லது அனுமதி அல்லது இசைவு ஆகியவற்றினை உரிய அரசு அதிகாரியிடமிருந்து பெறுதல் மற்றும் மின் இணைப்பு கோருவோர் மின்னிணைப்பு பெறுவதற்கான சிவில் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் ஆணையினை கடைபிடிக்க வேண்டும்,
- பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பகுதி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலம் கொடுத்து உரிய ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.
- விண்ணப்பித்தனை பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மின் இணைப்புக்கான விண்ணப்பத்தினை பெறப்பட்டவுடன், மின் இணைப்பு கோருவோருக்கு அப்பகுதி பொறியாளர்களை அணுகி எளிதாக ஆய்வு செய்ய ஏதுவாக உள்ள தரைதளத்தில் இணைப்பு கொடுக்க வேண்டிய இடத்தினை/மின்னளவி பொருத்துவதற்கான இடத்தை முடிவு செய்து கொள்ள ஒரு நோட்டீஸ் அனுப்பப்படும்.
- எல்லா அடுக்கு மாடி கட்டிடங்களிலும் எத்தனை தளங்கள் இருந்தாலும் தரைதளத்தில்தான் மின்னளவி, மின்கட்டை போன்றவைகள் பொருத்துவதற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும்.
- மின் இணைப்புக் கோருவோர் அதற்குண்டான கட்டணங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டி கட்டணம் செலுத்துவதற்கான சீட்டு/அறிவுப்பு/கடிதம் அனுப்பப்படும்,
- மின் இணைப்பு கொடுப்பதற்கான அனைத்து கட்டணங்களும் பெறப்பட்ட பிறகே மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- மின் இணைப்பு கோருவோர், தன்னுடைய இடத்தில் இலவசமாக மின் வாரியத்திற்கு மின்கம்பங்கள் நடுவதற்கு விட வேண்டும். மற்றும் மின் இணைப்பு கோருவோரே தன்னுடைய சொந்த செலவிலேயே மின் கம்பங்கள், கம்பிகள் போன்றவற்றை அமைப்பதற்கான வழி தடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
- தங்களுடைய கட்டிடத்தில் அனைத்து வயரிங்குகளையும் உரிய அரசு அங்கிகாரம் பெற்றவர்களால் செய்து முடிக்கப்பட வேண்டும். மின் கம்பியமைப்பு பணி முடிந்ததும், கோரும் நுகர்வோர் (உரிமதாரர் மின் வாரிய அலுவலகங்களில் தனது நிறுவல் அமைப்பின் பணிமுடிந்து சோதனையும் செய்து,அது மேலும் பொறியாளரது ஆய்வு மற்றும் சோதனைக்காக ஆயத்தமாக உள்ளதை, பொறியாளருக்கு அறிவிக்க வேண்டும்,
- மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் நிறைவு பெற்று ஆய்வு செய்த பின், உரிய காலத்திற்குள் இணைப்பினை பெற்றுக் கொள்ளுமாறு மின் இணைப்பு கோருவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
உயர் அழுத்த மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்
- உயர் அழுத்த மின் இணைப்பிற்கு விண்ணப்பம் படிவம் - 4-ல் விண்ணப்பிக்கவும். மேற்படி விண்ணப்பம், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும்.
- விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் கொடுக்கவும். மின் இணைப்பு தேவைப்படும் இடத்திற்கான சட்டப்படி உரிமைதாரர் என்பதற்கான உரிய ஆவணம் கொடுக்க வேண்டும்.
- தான் பொறுப்பேற்றுள்ள இருப்பிடத்துக்குச் சொந்தக்காரராக இல்லாமல் மின் வழங்கல் கேட்கும் நுகர்வோர், படிவம்-5 இன்படி சம்மதக் கடிதத்தை இருப்பிட உரிமையாளரிடமிருந்து பெற்றுத் தரவேண்டும். அப்படிப்பட்ட சொந்தக்காரர் சம்மதக்கடிதம் தர மறுத்துவிட்டாலோ, சட்டப்படி அந்த இருப்பிடத்தின் பொறுப்பேற்றுள்ளதற்கானச் சான்றை நுகர்வோர்தரவேண்டும். மேலும், படிவம்-6-இன் படி காப்புறுதி பத்திரத்தின் வாயிலாக, உரிமதாரருக்கு, பொறுப்பாளருக்கு மின்னிணைப்பு வழங்கலால் உருவாகும் தகராறுகளால் விளையும் இழப்புக்குக் காப்புறுதி தந்து, மேலும் இயல்பான காப்பு வைப்புத் தொகையைப் போல இரட்டிப்பு மடங்குத் தொகையை வைப்புத் தொகையாகச் செலுத்தவும் உறுதியேற்கவேண்டும்.
- மின் இணைப்பு கோருவோர் மாநில அரசின் இதர சட்டங்களுக்கு உட்பட்டு கட்டுமானம், மாற்றங்கள் அல்லது சரி செய்யும் பணிகள் கட்டிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் போது அல்லது இதர நிறுவனங்களுக்கு அல்லது புதிய தொழிற்சாலை நிறுவப்படும் போது பெறப்பட வேண்டிய ஒப்புதல் அல்லது ஒப்பளிப்பு அல்லது அனுமதி அல்லது இசைவு ஆகியவற்றினை உரிய அரசு அதிகாரியிடமிருந்து பெறுதல் மற்றும் மின் இணைப்பு கோருவோர் மின்னிணைப்பு பெறுவதற்கான சிவில் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் ஆணையினை கடைபிடிக்க வேண்டும்.
- விண்ணப்பம் பதிவு செய்வதற்கு முன்பாக, மின் இணைப்பு கொடுக்க வேண்டிய இடத்தினை வாரியத்தின் உரிய அலுவலரால் ஒப்பளிப்பு பெற வேண்டும்.
- பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பகுதி அலுவலகத்தில் நரடியாகவோ அல்லது தபால் மூலம் கொடுத்து உரிய ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.
- விண்ணப்பத்தினை, பதிவு கட்டணம் மற்றும் காப்பு வைப்புக் கட்டணம் ஆகியவற்றை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- மின் இணைப்புக் கோருவோர் அதற்குண்டான கட்டணங்களை மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டி கட்டணம் செலுத்துவதற்கான சீட்டு/அறிவிப்பு/கடிதம் அனுப்பப்படும்.
- மின் இணைப்பு கொடுப்பதற்கான கட்டணங்களும் மற்றும் இசைவு பத்திரமும் பெறப்பட்டவுடன் மின் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். உரிய காலக்கெடுவிற்குள் இணைப்பினை பெற்றுக் கொள்ளுமாறு மின் நுகர்வோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
- மின் இணைப்பு கோருவோர், தன்னுடைய இடத்தில் இலவசமாக மின் வாரியத்திற்கு மின் கம்பங்கள் நடுவதற்கு விடவேண்டும். மற்றும் மின் இணைப்பு கோருவோரே தன்னுடைய சொந்த செலவிலேயே மின் கம்பங்கள், கம்பிகள் போன்றவற்றை அமைப்பதற்கான வழி தடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
- தங்களுடைய கட்டிடத்தில் அனைத்து வயரிங்குகளையும் உரிய அரசு அங்கிகாரம் பெற்றவர்களால் செய்து முடிக்கப்பட வேண்டும். மின் கம்பியமைப்பு பணி முடிந்ததும், கோரும் நுகர்வோர் (உரிமதாரர் மின் வாரிய அலுவலகங்களில் விலையின்றிக் கிடைக்கும் அச்சிட்ட சோதனைப் படிவத்தில்) தனது நிறுவல் அமைப்பின் பணிமுடிந்து சோதனையும் செய்து, அது மேலும் பொறியாளரது ஆய்வு மற்றும் சோதனைக்காக ஆயத்தமாக உள்ளதை, நுகர்வோர் பொறியாளருக்கு அறிவிக்க வேண்டும்.
- மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் நிறைவு பெற்று ஆய்வு செய்த பின். உரிய காலத்திற்குள் இணைப்பினை பெற்றுக் கொள்ளுமாறு மின் இணைப்பு கோருவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
- மின் இணைப்புக்கோரும் மின் நுகர்வோர், தன்னுடைய இடத்தில் அமைக்கப்பட்ட உயர் அழுத்த கட்டமைப்புகளுக்கு அரசு தலைமை மின் ஆய்வாளரின் சான்றிதழ் பெற வேண்டும்.
- நோட்டீஸ் கொடுக்கப்பட்ட உரிய காலத்திற்குள் மின் இணைப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.
விவசாய மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்
விவசாய மின் இணைப்புகள் வழங்குவது தொடர்பான நடைமுறைகள்:- விவசாய மின் இணைப்பு ஒவ்வொரு ஆண்டும் அரசு வழங்கும் குறியீட்டிற்கு தகுந்தவாறு விண்ணப்பங்களின் பதிவு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய மின் இணைப்பு வேண்டுவோர் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கீழ்க்கண்ட ஆவணங்களை விண்ணப்பதாரர் இணைக்கவேண்டும்.
- கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் உரிமை சான்று. உரிமை சான்றில் கிணறு மற்றும் நிலம் மனுதாரருக்கு சொந்தமானது என்று கிராம நிர்வாக அலுவலர் சான்று வழங்கவேண்டும்.
- கிராம நிர்வாக அலுவலர் இடம் இருந்து கிணறு அமைந்துள்ள இடத்தை தெரிவிக்கும் வரைபடத்தை இணைக்க வேண்டும்.
- சிட்டா அடங்கல்.
- பட்டா / பத்திரம்
- கிணறு அரசுக்கு சொந்தமான கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு, ஆற்றுப்படுகையோரம் மற்றும் நீர்மின் திட்டங்களுக்கு அருகில் இருந்தால், சம்பந்தப்பட்ட துறையினரிடமிருந்து மறுப்பின்மை சான்றிதழ் பெறப்படவேண்டும்.
- குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்று விவசாயம் செய்ய வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து உரிய அனுமதி பெறப்படவேண்டும்.
- விண்ணப்பத்தில் கிணற்றின் உரிமையாளர் கையெழுத்திடவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்களாக இருந்தால் அனைவரும் கையெழுத்திடவேண்டும் அல்லது ஏதேனும் ஒரு நபரின் பெயரில் மின் இணைபபு பெற மற்ற நபர்கள் மறுப்பின்மை சான்றிதழ் வழங்கவேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் மேற்கூறிய அனைத்து ஆவணங்களையும், சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விவசாய விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.50/- செலுத்த வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டவுடன் பதிவு எண் மற்றும் தேதி குறிப்பிடப்பட்ட உரிய ஒப்புகை அட்டை வழங்கப்படும்.
அ. விவசாய மின் இணைப்பு கீழ்க்கண்ட இனங்களுக்கு மதிப்பீட்டுத் தொகை எதுவும் பெறாமல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண வரிசை திட்டத்தில் மின் இணைப்பு பெற எல்லா பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.
ஜீவன்தாரா திட்டத்தில் மின் இணைப்பு பெற, கிணறு ஜீவன்தாரா திட்டத்தில் கிணறு தோண்டப்பட்டது என்பதற்கான சான்றினை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடமிருந்து பெற்று விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் மேற்கண்ட இனத்தைச் சாராதவர்களும் விண்ணப்பிக்கலாம். விதவைகள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர், பழங்குடியினர் மற்றும் கலப்பு திருமணம் செய்த நபர்களுக்கு ஒவ்வொருவருடமும் 150 எண்ணிக்கைகள் சிறப்பு முன்னுரிமையில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அரசு கடித எண்.18.6.2010ல் பணிபுரியும் இராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினரும் சேர்க்கப்பட்டு மேற்கண்ட குறியீடு 250 எண்ணிக்கையாக உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கண்ட சிறப்பு பிரிவில் மின் இணைப்பு பெற வாரியத்தில் விண்ணப்பம் பதிவு செய்து ஒரு வருடம் கழித்து உரிய விண்ணப்பம் மற்றும் ஆவணங்களுடன் (முன்னாள் இராணுவத்தினர் தவிர்த்து) மேற்பார்வை பொறியாளர்/ஊரக மின்மயமாக்கல் மற்றும் மேம்பாடு (பகிர்மானம்)/தமிழ்நாடு மின்சார வாரியம், 144, அண்ணாசாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவும். முன்னாள் இராணுவத்தினர் தங்களது விண்ணப்பங்களை கூடுதல் இயக்குநர், முன்னாள் இராணுவத்தினர் நலப்பிரிவு, 22, இராஜா முத்தையா சாலை, சென்னை- 600 006 என்ற முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யவும். மேற்கண்ட அலுவலகத்திலிருந்து விண்ணப்பம் பெறப்பட்டவுடன் சிறப்பு முன்னுரிமையில் விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் தாட்கோ மகளிர் திட்டத்தில் தாட்கோ நிறுவனம் பரிந்துரை செய்யும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சார்ந்த மகளிருக்கு முன்னுரிமையில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசின் சிறப்புத் திட்டமான இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அரசு துறையிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டவுடன் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்கு, சிறப்பு முன்னுரிமையில் இலவசமாக ஒருமுறை மட்டும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர்களுக்கு துரிதமுறையில் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில், தாட்கோ நிறுவனம் பரிந்துரை செய்யும் ஆதிதிராவிடர்களுக்கு முன்னுரிமையில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
குடிசை மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்
குடிசை மின் இணைப்புத் திட்டம் குடிசை மின் இணைப்புத் திட்டம் குடிசை மின் இணைப்பு வேண்டுவோர் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி பூர்த்தி செய்து, விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.5/- செலுத்த வேண்டும். குடிசை மின் இணைப்பு, கிராம பஞ்சாயத்து மற்றும் சிறப்பு நிலை கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டம், தாட்கோ மற்றும் காமராஜர் ஆதிதிராவிட திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கும் குடிசை மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. குடிசை மின் இணைப்புகளுக்கு 40 வாட்ஸ் மின்பளு அளவிற்கு மட்டுமே வழங்கப்படும். குடிசை மின் இணைப்புக் கோரும் இடத்தின் பரப்பளவானது 250 சதுர அடிக்கு மிகாமலும், குடிசை, களிமண், ஓலைக் கூரை, ஓடு, சிமெண்ட் தகடு வேயப்பட்ட (ஆஸ்பெட்டாஸ்) மற்றும் தகர கூரைகளால் கட்டப்பட்ட ஒரு அறை உள்ள இடமாக இருக்கவேண்டும். படிவம் - 3 குடிசை மின்னிணைப்பு விண்ணப்பம் (விதித்தொகுப்புத் தொடர் 27(3) பார்க்க) (ஊராட்சி அமைப்புகளில் உள்ள குடிசைக்கு 40 வாட் தாழ் அழுத்த மின் ஆற்றல் வழங்குமாறு கோரும் படிவம்)
பெறுநர் உரிமதாரரின் பொறியாளர் .................................................. ... .....................................................
ஐயா,
- எனது, கீழே விவரித்துள்ள குடிசைக்கு மின் ஆற்றல் வழங்கும்படி, இதனால் கேட்டுக் கொள்கிறேன்.
- நான் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிக்கும் ஒழுங்குமுறைவிதிகளின் படியாக வேண்டப்படும், மின் ஆற்றல், மின்னிணைப்பு, மின்னளவு வாடகை மற்றும் பிற கட்டணங்களோடு காப்பு வைப்புத் தொகையும் செலுத்த இசைகிறேன்.
- நான் இதற்கானகட்டண வீதத்தைத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையக் கட்டணவீத ஆணை தரும் அட்டவணையில் உள்ள கட்டணவீதப்படி கட்டணம் விதிக்கப்பெற விரும்புகிறேன்.
- 40 வாட் அளவு மின்சாரம் மட்டுமே பெறவும் அதைக் கீழே விவரித்துள்ள எனது குடிசைக்குப் பயன்படுத்துவதற்கும் இசைவதோடு, 40 வாட் மின்திறனுக்கும் மேலாக நான் மின் ஆற்றலைப் பயன்படுத்தினால் உரிய அதிகாரிகளால் மின்னிணைப்பு துண்டிக்கப்படவும் இசைகிறேன்.
- நான் குடிசையை விற்கவோ, வேறுவகையில் விட்டுவிலகவோ நேர்ந்தால், கால அட்டவணைப்படியான ஒரு மாதக் கால அறிவிப்பை எழுத்து மூலம் தெரிவிப்பதோடு உரிமதாரருக்குச் செலுத்த வேண்டிய அனைத்து நிலுவைத் தொகைகளைச் செலுத்தவும் இசைகிறேன்.
- உரிய அதிகார அமைப்பு விதிக்கும் பாதுகாப்பு விதிகளின்படியும் விதித்தொகுப்பு விதிக்கும் விதிவகுப்புகளின்படியும் எனது குடிசையில் ஒற்றைப்புள்ளி ஒளியூட்டுவதற்கான மின்கம்பியமைப்பை அமைக்க ஏற்பாடுகளைச் செய்கிறேன். உரிமதாரரே எனது குடிசைக்கு ஒளியூட்ட ஒற்றைப் புள்ளி மின் கம்பியமைப்பைச் செய்து தர வேண்டுகிறேன். அதற்கான செலவை நான் செலுத்தி விடுகிறேன்.
- தன் அறிவிப்பு மின்னிணைப்புக்கு விண்ணப்பம் தரும் குடிசை எனக்குச் சொந்தமானது என்பதோடு ய) அது எனது பட்டா நிலத்தில் கட்டப்பட்டுள்ளது (நிலவரிப் பற்றுச் சீட்டு இணைக்கப்படுகிறது) என்று b) இது தனியார் நிலத்தில் கட்டப்பட்டுள்ளதால் நிலவுரிமையாளரின் மறுப்பின்மைச் சான்றிதழும் இத்துடன் இணைக்கப்படுகிறது என்று உ) இது புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதால், இத்துடன் உரிய அலுவலரிடம் (துணை வட்டாட்சியர் பதவிக்குக் குறையாதவர்) பெற்ற மறுப்பின்மைச் சான்றிதழும் இத்துடன் இணைக்கப்படுகிறது என்று (தேவையற்ற விதித் தொடர்கள நீக்கிவிடலாம்) உறுதி கூறுகிறேன்.
- குடிசை உள்ள இடவிவரம் ய) விண்ணப்பதாரர் பெயர் b) தந்தை பெயர் உ) ஆதிதிராவிடர், பிறசாதியினர் ன) புல எண், குடிசை அடையாளம் ந) குடிசைப் பரப்பு க) குடிசை களிமண்ணால், ஓலைக் கூரையால் கட்டப்பட்டுள்ளது ப) கிராமமும், வட்டமும் h) வாடகையாளர் (பெயர்) i) விண்ணப்பத்தாரர் தொடர்பு முகவரி
தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கான வழிமறைகள்
தாழ்வழுத்த தொழிற்சாலைக்கு மின் இணைப்பிற்கு விண்ணப்பம் படிவம்-1-ல் விண்ணப்பிக்கவும். மேற்படி விண்ணப்பம், மின்வாரிய பகுதி அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும்.
விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் கொடுக்கவும், மின் இணைப்பு தேவைப்படும்இடத்திற்கான சட்டப்படி உரிமைதாரர் என்பதற்கான உரிய ஆவணம் கொடுக்க வேண்டும்,
மின் இணைப்பு கோருவோர் மாநில அரசின் இதர சட்டங்களுக்கு உட்பட்டு கட்டுமானம், மாற்றங்கள் அல்லது சரி செய்யும் பணிகள் கட்டிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் போது அல்லது இதர நிறுவனங்களுக்கு அல்லது புதிய தொழிற்சாலை நிறுவப்படும் போது பெறப்பட வேண்டிய ஒப்புதல் அல்லது ஒப்பளிப்பு அல்லது அனுமதி அல்லது இசைவு ஆகியவற்றினை உரிய அரசு அதிகாரியிடமிருந்து பெறுதல் மற்றும் மின் இணைப்பு கோருவோர் மின்னிணைப்பு பெறுவதற்கான சிவில் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் ஆணையினை கடைபிடிக்க வேண்டும்.
விண்ணப்பம் பின்வரும் ஆவணங்களோடு தரப்பட வேண்டும் :
- உரிமைச் சான்று (விண்ணப்பப் பத்திரம், தண்ணீர் அல்லது வடிகால் வரியின் பற்றுச் சீட்டு.
- விண்ணப்பதாரர் மின்னிணைப்பு கோரும் இடத்தின் உரிமை அல்லாதவராக இருப்பின் - உரிமையாளரது சம்மதக் கடிதம் அல்லது இருப்பிட உரிமைச் சான்றிதழ் (அல்லது குத்தகைப் பத்திரம்) மற்றும் காப்புறுதி பத்திரமும் இருமடங்கு காப்பு வைப்பு தொகை செலுத்த சம்மதக் கடிதம்.
- ஆர்வமுள்ள நுகர்வோரால் மின் வழங்கல் கோரப்படும் கட்டுமானம், மாற்றிமைத்தல் அல்லது கட்டிடங்கள் பழுதுபார்த்தல் அல்லது புதிய தொழிற்சாலைகள் அல்லது தொழிற்கூடங்கள் அல்லது பிற நிறுவனங்கள் நிறுவுதல் குறித்து தமிழ்நாடு மாநிலத்தின் சட்டங்களில் சொல்லப்பட்டவாறு உரிய அதிகார அமைப்புகளிடமிருந்து அனுமதி அல்லது ஒப்புதலளிப்பு அல்லது ஒப்பளிப்பு அல்லது இசைவு பெறுவது
- தொடர்பாக அத்தகைய சட்டங்களுக்கு ஆர்வமுள்ள நுகர்வோர் இணங்கி நடத்தல்.
- உயர்நீதிமன்ற ஆணை 23-08-2006 ன் படி, சென்னை பெருநகர் பகுதியிலுள்ள சிறப்பு வகை மற்றும் பல மாடி கட்டிடங்களுக்கு, மின் இணைப்புக்கான படிவத்துடன் உரிய அதிகார அமைப்பிடமிருந்து பெறப்பட்ட திட்ட அனுமதி சமர்ப்பிக்கப்பட வேண்டும். மின் இணைப்பு பெறுவதற்கு முன்பு பணி முடிவுச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பகுதி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலம் கொடுத்து உரிய ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.
- விண்ணப்பித்தனை பதிவு கட்டணம் மற்றும் காப்புறுதி கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- மின் இணைப்புக்கான விண்ணப்பத்தினை பெறப்பட்டவுடன், மின் இணைப்பு கோருவோருக்கு அப்பகுதி பொறியாளர்களை அணுகி எளிதாக ஆய்வு செய்ய ஏதுவாக உள்ள தரைதளத்தில் இணைப்பு கொடுக்க வேண்டிய இடத்தினை/மின்னளவி பொருத்துவதற்கான இடத்தை முடிவு செய்துக் கொள்ள ஒரு நோட்டீஸ் அனுப்பப்படும்.
- மின் இணைப்புக் கோருவோர் அதற்குண்டான கட்டணங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டி கட்டணம் செலுத்துவதற்கான சீட்டு/அறிவிப்பு/கடிதம் அனுப்பப்படும்.
- மின் இணைப்பு கொடுப்பதற்கான அனைத்து கட்டணங்களும் மற்றும் இசைவு பத்திரமும் பெறப்பட்ட பிறகே மின் நீட்டிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்,
- மின் இணைப்பு கோருவோர், தன்னுடைய இடத்தில் இலவசமாக மின் வாரியத்திற்கு மின் கம்பங்கள் நடுவதற்கு விடவேண்டும். மற்றும் மின் இணைப்பு கோருவோரே தன்னுடைய சொந்த செலவிலேயே மின் கம்பங்கள், கம்பிகள் போன்றவற்றை அமைப்பதற்கான வழி தடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
- தங்களுடைய கட்டிடத்தில் அனைத்து வயரிங்குகளையும் உரிய அரசு அங்கிகாரம் பெற்றவர்களால் செய்து முடிக்கப்பட வேண்டும். மின் கம்பியமைப்பு பணி முடிந்ததும், கோரும் நுகர்வோர் (உரிமதாரர் மின் வாரிய அலுவலகங்களில் விலையின்றிக் கிடைக்கும் அச்சிட்ட சோதனைப் படிவத்தில்) தனது நிறுவல் அமைப்பின் பணிமுடிந்து சோதனையும் செய்து, அது மேலும் பொறியாளரது ஆய்வு மற்றும் சோதனைக்காக ஆயத்தமாக உள்ளதை, பொறியாளருக்கு அறிவிக்க வேண்டும்.
- மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் நிறைவு பெற்று ஆய்வு செய்த பின் உரிய காலத்திற்குள் இணைப்பினை பெற்றுக் கொள்ளுமாறு மின் இணைப்பு கோருவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
ஆதாரம் : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
No comments:
Post a Comment