மின் வாரிய பொறியாளர் இடமாறுதல் முறை மாற்றம்

          உதவி செயற்பொறியாளர் வரையிலான இடமாறுதலை, மேற்பார்வை பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர்களே வழங்க, மின் வாரியம் உத்தரவிட்டு உள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், ஒன்பது மண்டலம், 42 மின் பகிர்மான வட்டங்களுடன் செயல்படுகிறது. இவற்றில், உதவியாளர்,
கணக்கீட்டாளர், உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், மேற்பார்வை பொறியாளர், தலைமை பொறியாளர்என, பலர் பணிபுரிகின்றனர்.

       தலைமை பொறியாளர் , உதவி செயற்பொறியாளர் வரையிலான பதவிகளுக்கான இடமாறுதலை, சென்னை, மின் வாரிய அலுவலகத்தில் உள்ள தலைமை பொறியாளர் (பெர்சனல்) வழங்குவார். செயற்பொறியாளர் முதலான இடமாறுதலை, மின் வாரிய செயலர் வழங்குவார்.

   இந்நிலையில், 'மண்டல தலைமை மற்றும், மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்களே, தங்கள் பகுதியில், உதவி செயற்பொறியாளர் வரையிலான பதவிகளுக்கு இடமாறுதல் வழங்கலாம்' என, மின் வாரியம் உத்தரவிட்டு உள்ளது.சுயநலத்திற்காக... : இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: உதவி செயற்பொறியாளர் வரை, மண்டல தலைமை மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் தான் இடமாறுதல் வழங்கி வந்தனர். அரசியல்வாதிகள், தங்கள் சுயநலத்திற்காக, சில ஆண்டுகளுக்கு முன், அந்த இடமாறுதலை, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து வழங்க வழிவகை செய்தனர். இதனால், கன்னியாகுமரியில் உள்ள ஒரு உதவி பொறியாளர் இடமாறுதல் விருப்பம் தெரிவிக்க, சென்னைக்கு வர வேண்டி இருந்தது. தற்போது, மீண்டும், மண்டல தலைமை, மேற்பார்வை பொறியாளர்களே இடமாறுதல் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- தினமலா்நிருபர் -

No comments: