வருங்கால வைப்புநிதியில் ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி கிடையாது நாளை முதல் அமல்

புதுடெல்லி,
வருங்கால வைப்புநிதியில் இருந்து ரூ.30 ஆயிரம்வரை எடுத்தால், வரி பிடித்தம் கிடையாது என்ற நடைமுறை இப்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த புதிய நடைமுறை நாளை (ஜூன் 1–ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

No comments: