தொழில் முறை மின்சார பணியில் உள்ளவர்களுக்கு உதவியாளர்கள் பணிக்கு அக்.28 இல் தகுதிகாண் தேர்வு

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் மின்கம்பியாள் உதவியாளர்கள் பணிக்குத் தகுதிகாண் தேர்வு 28.11.2015 மற்றும் 29.11.2015 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதற்குத் தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளர்கள், இத்துறையில் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சிப் பெற்றுத் தேரியவர்கள் மற்றும் தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இத்துறையில் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளர் மற்றும் மின்கம்பியாள் தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்கள் ஆகியோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் மின்வயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.விண்ணப்பங்களை 5.11.2015 முடிய ஏதாவது ஒரு அரசினர் ஐ.டி.ஐ.யில் ரூ.10 ரொக்கமாக செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் 32 இடங்களில் இத் தேர்வு நடக்க இருக்கிறது அருகில் உள்ள தேர்வு மையங்களை தொடர்பு கொண்டு விளக்க கையேடுகளை பெறலாம். .
இந்த சான்றிதழ் பெற்று 5 வருடம் கழித்து " ஆ "உரிமம் பெறமுடியும்.

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...