அட்டைப்பட்டியல்
ஊழியர்களின் வசூல்மைய பணிநேரத்தை வாரிய நிர்வாகம்
1½ மணிநேரம் உயர்த்துவதற்கு 9A நோட்டீஸ் கொடுத்ததை நமது சங்கம் ஆட்சேபித்து அதனை நிறுத்தி வைத்து
சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணுமாறு வேண்டி 16-09-2015-ல் கடிதம் கொடுத்தோம்.
நிர்வாகத்திடமிருந்து பதில் கிடைக்காததாலும், 9A நோட்டீஸுக்கான 21 நாட்கள் கெடு முடிவடைதாலும் நாம் இப்பிரச்சனையின் மீது 28-09-2015-ல், தொழிற் தகராறு சட்டப்படி,
தொழிலாளர் ஆணையர் முன்பு தொழில் தகராறினை எழுப்பியது.
நமது மனுவினை தொழிற்தகராறு எண்.44397/15 என
பதிவு செய்து, தொழிலாளர் துறை, நிர்வாகத்திற்கு நோட்டீஸ் கொடுத்து 03-11-2015 நன்பகல்
12.00 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது.
சுமூக பேச்சுவார்த்தையின்போது, நிர்வாகம்,
பணிநேர உயர்வுக்கு தாங்கள் கொடுத்த 9A நோட்டீஸ் Fair & Reasonable, என்று திருப்தி படுத்தினால் மட்டுமே / அல்லது நாம் பணிநேர
உயர்வு அநீதியானது, ஏற்க முடியாது என்று கூறுவதை, நிர்வாகம் ஏற்று 9A நோட்டீஸ் மீதான நடவடிக்கையை கைவிட சம்மதித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை
முடிவுக்கு வரும்.
இல்லையெனில் சமரசப் பேச்சு வார்த்தை தோல்வி
அடைந்ததாக, தொழிலாளர் துறையால் தமிழக அரசுக்கு தொழிற்தகராறு சட்டம் பிரிவு
12(4)-ன் படி சமரச முறிவு அறிக்கை அனுப்பப்படும்.
சமரச முறிவு அறிக்கையை பரிசீலித்து தமிழக அரசு
இப்பிரச்சனையில் தொழிலாளர் தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் எனக்
கருதினால் அவ்வாறு அனுப்பும்.
ஒருவேளை விசாரணைக்கு அனுப்பவில்லை என்றால்
அதற்கான காரணத்தை பதிவு செய்து அதனை தொழிற்சங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும்
தெரிவிக்கும்.
அநேகமாக நாம் எழுப்புயுள்ள தொழில் தகராறு,
சட்டத்தின் 3வது அட்டவணை வரிசை எண் 3, Hours of work and
rest intervals-ன் கீழ்
வருவதால் சட்டப் பிரிவு 10(1)(d)ன் கீழ் தொழிலாளர்
தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு அனுப்ப வேண்டியிருக்கும் என்று நம்புகிறோம்.
இந்த நடைமுறைகளுக்குப்பின் தீர்ப்பாயத்தில்
மனுதாக்கல், எதிர் மனுதாக்கல், நமது தரப்பில் ஆவணங்கள் தாக்கல், நிர்வாகத்
தரப்பில் ஆவணங்கள் தாக்கல், நமது சாட்சியம், நிர்வாகத் தரப்பு சாட்சியம், நமது
தரப்பு குறுக்கு விசாரணை, நிர்வாகத் தரப்பு குறுக்கு விசாரணை, நமது வழக்கறிஞர்
வாதம், நிர்வாக வழக்கறிஞர் வாதம் எல்லாம் முடிந்து தீப்பு வழங்கப்படும்.
இதற்கு முன்பு, நாம் எழுப்பிய இது
போன்ற சில தொழில்தகராறுகள் பல ஆண்டுகளாக முடியாமல் இன்னமும் நிலுவையிலிருப்பதுதான்
நமக்குக் கிடைத்துள்ள அனுபவம்.
தொழில் தகராறு
நிலுவையிலிருக்கும் போது பணிநேரம் உயர்த்தப் பட முடியாது. தற்போது உள்ளபடி வசூல்
மையம் தொடர்ந்து செயல்படமுடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொழிலாளர் நலன்களை,
கண்ணிமைபோல் காப்பதில்
என்றும் முன்னணியில்
நிற்கும்
கணக்காயர் களத் தொழிலாளர்
சங்கம்.
தோழமையுள்ள
பொதுச்செயலாளர்.
No comments:
Post a Comment