தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தில் (Employees State Insurance Corporation) காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள இந்த காலியிடங்களுக்கு டிப்ளமோ அல்லது பி.இ., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. ஜூனியர் இன்ஜினியர் (சிவில்):
96 (பொது - 50, எஸ்சி - 14, எஸ்டி - 7, ஒபிசி - 25). இதில் 9 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், 4 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2. ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்):
பணியிடங்கள் விவரம்:
1. ஜூனியர் இன்ஜினியர் (சிவில்):
96 (பொது - 50, எஸ்சி - 14, எஸ்டி - 7, ஒபிசி - 25). இதில் 9 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், 4 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2. ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்):
58 (பொது - 31, எஸ்சி - 8, எஸ்டி - 4, ஒபிசி - 15). இதில் முன்னாள் ராணுவத்தினருக்கு 6 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சம்பளம்:
மேற்கண்ட பணிகளுக்கு ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
வயது வரம்பு:
10.11.2015 தேதிப்படி 30க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி:
சிவில்/ எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ அல்லது பி.இ., மேலும் 2 வருட பணி அனுபவம்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.300. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. இதை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செலான் மூலம் ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கியில் செலுத்தவும். தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை, பெங்களூரு, ஐதரபாத், திருச்சூர், மும்பை, புதுடெல்லி ஆகிய மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
www.esic.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் ஒரு பணிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தை நகல் எடுத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2015.
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்: 13.11.2015.
ஆன்லைன் படிவத்தை நகல் எடுக்க கடைசி நாள்: 17.11.2015.
மாற்றுத்திறனாளிகளுக்கு துணை மருத்துவ பணிகள்
இதே போல தமி்ழ்நாட்டிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகள் மற்றும் சென்னை மண்டல அலுவலகத்தில் காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்குரிய துணை மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணி விவரம்:
1. Nursery Orderly:
3 இடங்கள் (காது கேளாதோர்-1, பார்வையற்றோர்-2).
சம்பளம்:
ரூ.5,200-20,200
வயது:
27க்குள்.
தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் முதலுதவி தொடர்பான பணி அனுபவம் மற்றும் ஒரு வருட நர்சிங் உதவியாளர் பணி அனுபவம்.
2. Dresser:
2 இடங்கள் (காது கேளாதோர்)
சம்பளம்:
ரூ.5,200-20,200.
வயது:
27க்குள்.
தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சி. எலும்பு முறிவு மருத்துவமனையில் 2 வருட பணி அனுபவம்.
3. Cook Mate:
2 இடங்கள் (காது கேளாதோர்).
சம்பளம்:
ரூ.5,200-20,200.
வயது:
27க்குள்.
தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது இந்திய உணவு வகைகளை சமைப்பதில் 2 வருட பணி அனுபவம்.
4. Laundry Operator:
1 இடம் (பார்வைத்திறன் குறைந்தவர்)
சம்பளம்:
ரூ.5,200-20,200.
வயது:
32க்குள்.
தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது சலவை தொழிலில் 2 வருட பணி அனுபவம்.
5. Steward:
1 இடம் (பார்வைத்திறன் குறைந்தவர்).
சம்பளம்:
ரூ.5,200-20,200.
வயது:
21 முதல் 30க்குள்.
தகுதி:
பிளஸ் 2 தேர்ச்சி. அல்லது கேட்டரிங் மற்றும் கிச்சன் நிர்வாகத்தில் 2 வருட பணி அனுபவம்.
6. Medical Social Worker:
1 இடம் (பார்வைத்திறன் குறைந்தவர்)
சம்பளம்:
ரூ.5,200-20,200.
வயது:
37க்குள்.
தகுதி:
சமூகவியல் பாடப்பிரிவில் பட்டம் அல்லது டிப்ளமோ. சமூக சேவையில் ஒரு வருட பணி அனுபவம்.
7. Upper Division Clerk:
3 இடங்கள் (பார்வைத்திறன் குறைந்தவர்-1, செவித்திறன் குறைந்தவர்-1, உடல் ஊனமுற்றவர்-1).
சம்பளம்:
ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.
தகுதி:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
8. Mulit Tasking Staff:
4 இடங்கள் (உடல் ஊனமுற்றவர் - 2, செவித்திறன் குறைந்தவர் - 1, விழித்திறன் குறைந்தவர் - 1).
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.
வயது வரம்பு:
விண்ணப்பதாரின் வயது வரம்பு 31.10.2015 தேதி்ப்படி கணக்கிடப்படும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னையில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
மாதிரி விண்ணப்பத்தை www.esichennai.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விவரங்களை கம்ப்யூட்டரில் டைப் செய்து அனுப்பவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
Medical Superintendent,
ESIC Hospital,
Ashok Pillar Road,
K.K. Nagar,
CHENNAI- 600078.
6, 7, 8 வரிசை எண்களுக்குரிய பணிகளுக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Regional Director,
Employees State Insurance Corporation,
143, Sterling Road, CHENNAI- 600034.
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 31.10.2015.
No comments:
Post a Comment