தூத்துக்குடி , செப்.25-ஒப்பந்தத் தொழிலாளியாக பணியில் சேர்ந்து பின்னர் நிரந்தர பணியாளர்களாக பணிஓய்வுபெற்ற தொழிலாளர்கள் 3 பேர்களுக்கு ஒப்பந்த பணி காலத்தையும் கணக்கில் எடுத்து பணிக்கொடை வழங்க பணிக்கொடை மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:தூத்துக்குடி மாவட்டம் மின் பகிர்மான வட்டத்தில் ஏ.நம்பிராஜன், கே.சண்முகம், எஸ்.அப்துல்வஹாப் ஆகியோர் முறையே 1.9.79, 1.10.82, 1.4.88 முதல் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ள அவர்கள் பின்னர் முறையே 31.3.03, 31.3.05, 30.6.04 தேதிகளில் பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் நிரந்தர பணிக்காலத்திற்கு மட்டும் பணிக்கொடை வழங்கி ஒப்பந்த காலத்திற்கு பணிக்கொடை வழங்க மறுத்தனர். எனவே பணிக்கொடை கட்டுப்பாடு அதிகாரி மற்றும் பணிக்கொடை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. (முறையே ஞழுஹ 11/13, 12/13, 13/13) இந்த வழக்குகளில் 7.8.15 தீர்ப்பளிக்கப்பட்டது. ஒப்பந்தப்பணி காலத்தையும் கணக்கில் எடுத்து முறையே ரூ.53,500, 56,979, 28,592ஐ பணி ஓய்வுபெற்ற நாளிலிருந்து 10 சதவீத வட்டியுடன் வழங்க பணிக்கொடை மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்த வழக்கினை தூத்துக்குடி மாவட்ட சிஐடியு இணைச் செயலாளர் பி.இசக்கிமுத்து நடத்தினார்.
நன்றி தீக்கதிா்.
No comments:
Post a Comment