மின் ஊழியர்களுக்கு 1.12.2015 முதல் புதிய ஊதிய உயர்வு வழங்க பேச்சு வார்த்தைக் குழுவை அமைத்திட முன்வர வேண்டும், 2014 மின்சார திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் கே. பாலபாரதி வலியுறுத்தல்


2014 மின்சார திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம்  கே. பாலபாரதி வலியுறுத்தல்

சென்னை, செ ப்.25
2014 மின்சார திருத்த மசோதாவை அதிமுகவும் எதிர்ப்பதால் அதை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உறுப்பினர் பாலபாரதி வலியுறுத்தினார்.வெள்ளியன்று (செப். 25) மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அவர் பங்கேற்று பேசியது வரு மாறு:தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 1.12.2015 முதல் புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். அதற்கான பேச்சு வார்த்தைக் குழுவை அமைத்திட முன்வர வேண்டும். இத்துறையில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. கள உதவி யாளர், கம்பியாளர், இளநிலை உதவியாளர், நிர்வாகம், கணக்கு - தணிக்கை என 20,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. தொழில்கல்வி முடித்த சுமார் 20ஆயிரம் இளைஞர்கள் தமிழ்நாட்டில் வேலைக்காக காத்திருக்கிறார்கள்.
அவர்களை வைத்து இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதன் மூலமாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதே துறையில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் தொழி லாளர்களும் அதே கல்வித்தகுதியோடு வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் 12 ஆயிரம் பேரையும் இந்த காலிப்பணியிடங்களில் நிரப்பவேண்டும். இதன் மூலம் அவர்களுக்கும் நிரந்தரவேலை கிடைக்கும். வாரி யம் வழங்கக் கூறிய குறைந்தபட்ச கூலியை கொடுக்க வேண்டும்.
மின்வாரிய விபத்துக்கள்
தரமற்ற தளவாடச் சாமான்களை பயன்படுத்துவதால் மின்வாரியத்தில் பல நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு ஊழியர்கள் பலியாகின்றனர். எனவே தரமான தளவாடச் சாமான்களை கொள்முதல் செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் அரசு முன்வரவேண்டும். விபத்துகளை தவிர்க்க பணிச் சுமையை குறைக்க வேண்டும்.

அமைச்சர் விஸ்வநாதன்
: எந்த இடத்தில் தரமற்ற பொருள் வாங்கியுள்ளோம் என்பதை குறிப்பிட்டுச் சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும். மின்சார வாரியத்திற்கு கொள்முதல் செய்வதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதில் எந்தவித சமரசமும் செய்து கொள்வதில்லை. வெளிப்படையான ஒப்பந்த புள்ளி மூலமாக தரமான பொருட்களைத்தான் வாங்கி வருகிறோம்
கே.பாலபாரதி:
ஆர்.சி.சி. மின் கம்பங்களை இதுவரை மின் ஊழியர்களே தயாரித்து வந்தனர். ஆனால் தற்போது அது அவுட் சோர்சிங் மூலமாக ராஜஸ்தானில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு ஒப் படைக்கப்பட்டுள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்ற பழையபடி மின்சார வாரியமே அதை தயாரிக்கவேண்டும். அதிகாரிகள், பொறியாளர்கள் ஊழியர்களுக்கு ஊர்,இடம் மாற்றம் வழங்குவதற்கு பழைய முறையையே பின்பற்றவேண்டும். இதில் அரசியல் தலையீடுகள் தடுக்கப்படவேண்டும். தமிழகத்தில் மின்சார வெட்டு அல்லது தடை இருக்கிறதா இல்லையா என்ற விவாதம் தொடர்கிறது. மத்தியில் இருந்த ஜென்டில் மேன் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது உலகமயமாக்கல், தனியார் மற்றும் தாராளமயக் கொள்கைகளை பின்பற்றி மின்சார சட்டம் 2003 கொண்டுவரப்பட்டது. அதற்கு அடுத்துவந்த மத் திய அரசு மின்கொள்கை 2005ஐ கொண்டுவந்தது. இந்த இரு சட்டங்களை பயன்படுத்தி தமிழகம், தலைநகர் டில்லி உள்பட பல மாநிலங்களில் மின்சாரவெட்டை திட்டமிட்டு உருவாக்கத்தான் பயன்பட்டுள்ளது. அதுதான் உண்மை. அந்த உண்மையை மறந்துவிட்டு பலர் இங்கே பேசுகிறார்கள்.
அமைச்சர்:
திட்டமிட்டு மின்சார வெட்டை அமல்படுத்தமுடியாது. மனசாட்சியை விட்டுவிட்டு மின்சாரமே வரவேண்டாம் என்று யாரும் முயற்சிகளை எடுக்கவில்லை.
கே.பாலபாரதி:
சட்டம் சொல்கிற படிதான் மாநில மின் வாரியங்கள் இயங்குகின்றன. 2003 மின்சார சட்ட மசோதா மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்ற போது இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆழமாக கருத்துக்களை முன்வைத்து வாதிட்டோம். இந்த மசோதா மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் என்று கூறினோம். அந்த சட்டம் மத்திய மின்துறையை பலகூறு களாக பிரித்து விட்டது.
அமைச்சர் :
2003 மின்சார சட்டத்தை இடதுசாரிக் கட்சிகள் மட்டுமல்ல. அதிமுகவும் கடுமையாக எதிர்த்தது. அன்று இருந்த அரசு மாநில அரசுகளின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வில்லை. அன்று மேற்குவங்க மாநில அரசும் தமிழக அரசும்தான் அந்தமசோதாவை எதிர்த்துநின்றன. ஆனால் அந்த மசோதா சட்டமான பிறகு நாம் அமல்படுத்தியே ஆகவேண்டும். அதை மீறமுடியாது.
கே.பாலபாரதி:
இயற்கை மின்உற்பத்தி ஆதாரங் களை தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளைக் காடாக மாற்றியதில் அன்று இருந்த காங்கிரஸ் அரசுக் கும் தற்போதுள்ள பாஜக தலைமையிலான அரசுக்கும் ஒரே நிலைப்பாடுதான். அதனால்தான் மின்சார உற்பத்தியில் அதானி நுழைந்திருக்கிறார். குஜராத் மாநிலத்தில் இந்தியாவிலேயே அதிமான அளவு சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாக விளம்பரம் செய்யப்படுகிறது. தனியாருக்கு கொடுப்பது என்பது 2003 சட்டத்தின் நோக்கமாக உள்ளது.
அமைச்சர்:
தனியாருக்கு கொடுக்காமல் அரசுத் துதரப்பு மட்டும் அனைத்து தேவைகளையும் நிறை வேற்றிவிடமுடியாது. பொதுத்துறையும் இருக்க வேண்டும். தனியார் துறையும் இருக்கவேண்டும். இதுதான் கூட்டுப்பொருளாதாரம். இந்தியா போன்ற ஏழ்மையான நாட்டில் பொதுத்துறை மட்டும் இருந்தால் அல்லது தனியார் துறைமட்டும் இருந்தால் பொருளாதாரம் எடுபடாது. இரண்டும் இருக்கவேண்டும். யார் முதலீடுகளை கொண்டு வருகிறார்களோ அவர்களை எல்லா அரசுகளும் போட்டிபோட்டுக்கொண்டு தனியாரை ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். தனியார் வேண் டாம் என்றால் நமது வளர்ச்சி தடைபட்டு விடும்.
கே.பாலபாரதி:
தனியார் துறையினரை பயன்படுத்தவே கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொல்லவில்லை. 2014 மின்சார திருத்த மசோதாவில் மின்விநியோகத்தில் லாபம், மின்நிலையங்களை எங்கே அமைப்பது, என்ன எரி பொருளை பயன்படுத்துவது, மாநிலத்தில் உள்ள மக்களில் எந்த தட்டுமக்களுக்கு என்ன விலை நிர்ணயிப்பது போன்ற அதிகாரங்கள் அனைத்தையும் சட்டதிருத்தத்தின் மூலமாக மத்திய அரசு தனியாருக்கு கொடுத்துள்ளது. 2014 மின்சார திருத்த மசோதாவை அதிமுகவும் எதிர்த்துள்ளது. முதலமைச்சரும் அந்த மசோதாவை எதிர்த்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். மின்சார வாரியத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் தனியார் தலையிடுவதற்கான அனைத்து அதிகாரங்களையும் இந்த திருத்தமசோதா வழங்கியுள்ளது.
அமைச்சர்:
நாம் எதிர்க்கிறோமா அல்லது ஆதரிக்கி றோமா என்பது பொருள் அல்ல. அனைத்தும் 2003 சட்டத்தின் கீழ் நடைபெறுகிறது. எனவே அந்த சட் டத்தை 2015ல் விவாதிப்பது பொருளில்லை. பயனும் இல்லை. இருப்பினும் முழுக்கமுழுக்க தனியாரை ஊக்கு விக்கவில்லை. தனியார் மின்சாரத்தை உற் பத்தி செய்து வழங்கினாலும் மின்சாதனங்களை உற்பத்தி செய்து வழங்கினாலும் அவர்களுக்கு சில கட்டுப் பாடுகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. எந்தஒரு தனியார் நினைத்தாலும் தன்னிச்சையாக எதையும் செய்து விட முடியாது. அவர்களுக்கு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உள்ளது. அந்தந்தமாநிலங்களில் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் உள்ளன. அவர்களை அரசு நேரடியாக கட்டுப்படுத்த முடியாது என்பதற்காக 2003 சட்டத்தின் படி மாநில அரசு நீதித்துவ அதிகாரம் கொண்ட சுய அதிகாரம் படைத்த அமைப்புகளை உருவாக்கியுள்ளது. அந்த அமைப்புகள் மூலமாக தனியார் நிறுவனங்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், அரசு பாதிக்காமல் சில அதிகாரங்கள் சில உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது இது மின்சார உற்பத்திக்கும் உதவியாகத்தான் இருக்கிறது.
பாலபாரதி:
2003 மசோதா மக்களுக்கு விரோதமாக உள்ளது என்று அப்போது அதிமுக கூறியது. மின்சார திருத்தச் சட்ட மசோதாவை அதிமுக எதிர்க்கவில்லையா?
அமைச்சர்:
எதிர்த்தோம் என்பது உண்மைதான். நாங்கள் மறுக்கவில்லை. மாநில மின்சார வாரியங்களின் அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது என்ற கொள்கை ரீதியான எதிர்ப்பை தான் நாங்கள் தெரி வித்தோமே தவிர அதில் உள்ள நல்ல அம்சங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. அந்த சட்டம் வந்தபிறகு தனியார் மூலம் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. வளர்ச்சியை தனியாரையும் உள்ளடக்கித்தான் செய்யமுடியும். மாநில அரசோ மத்திய அரசோ பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக எதையும் செய்துவிடமுடியாது. இதனால்பாதிப்பு யாருக்கும் இல்லை. சுய அதிகாரங்கள் கொண்ட அமைப்புகள் மூலமாக தனியார் கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.
கே.பாலபாரதி:
அந்த மசோதாவை இப்போது அதிமுக ஆதரிக்கிறதா எதிர்க்கிறதா?
அமைச்சர்:
இப்போது நாங்கள் எதிர்க்கிறோம். மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசின் எந்த ஒரு சட்டத்தையும் அதிமுக அரசு போர்க் குணத்தோடு தடுத்து நிறுத்தும். மாநிலத்தின் நலன் பாதிக்கப்படுகிறது என்பதால் மத்தியில் யார் ஆட்சி இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அதிமுக அரசு எதிர்க்கும். மாநிலத்திற்கு பயன்கிடைக்கிறது என்றால் அதை ஆதரிப்போம்.
கே.பாலபாரதி:
அப்படி என்றால் மோசமான அந்த மசோதாவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அரசின் எரிசக்தித்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் எழுதியிருக்கவேண்டும்.
அமைச்சர்:
அதைநாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது நிர்வாகம் சம்மந்தப்பட்ட விஷயம். எல்லா விஷயங்களையும் கொள்கை விளக்கக் குறிப்பில் எழுதினால் பெரிய புத்தகம்தான் போட வேண்டியிருக்கும்.
கே.பாலபாரதி:
இந்த மசோதாவை எதிர்க்கும் வகையில் வரும் டிசம்பர் 8ஆம் தேதி இந்தியா முழுவதும் மின்சார ஊழியர்கள், பொறியாளர்கள் என அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். அதை அதிமுக ஆதரிக்கவேண்டும். அதற்கு முன்பு பேரவையில் மின்சார சட்ட திருத்தமசோதா மக்களை பாதிக்கும். எனவே அதை திரும்பபெறவேண்டும் என்று ஒரு தீர்மானத்தை அரசு கொண்டுவரவேண்டும்.இந்த சட்டத்தின் தொடர் விளைவுகள்தான் தனியாரிடமிருந்து மின்வாரியம் மின்சாரத்தை வாங்குவது என்பதாகும். தமிழ்நாடு மின்சார வாரியம் தனியாரிடமிருந்து 2011-12ல் ரூ. 4,543 கோடி, 2012-13 ரூ. 4,736 கோடி, 2013-14ல் ரூ. 4,323 கோடி விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியுள்ளது. இதனால் அரசுக்கு கடன்தான் ஏற்படும். ஒரு லட்சத்து 10 ஆயி ரம் கோடி ரூபாயை கடனாக மின்சார வாரியம் கட்ட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அமைச்சர்:
அதிமுக அரசு பொறுப்பேற்ற போது மின்வாரியத்தின் கடன் ரூ.50ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது ரூ. 89ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த ரூ.89ஆயிரம் கோடியிலும் 63விழுக்காடு சொத்துக்களாக உரு வாக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கி மூலதனச் செல வுகளுக்கு செலவிடப்பட்டுள்ளதா அல்லது நிர்வாக செலவுகளுக்கு செலவிடப்பட்டுள்ளதா என்பதைத்தான் பார்க்கவேண்டும்.கடன் வாங்காவிட்டால் வளர்ச்சி இல்லை. கடன் வாங்குவதுதான் அனைவரது பார்வைக்கும் தெரிகி றது. கடன் வாங்கி உருவாக்கப்பட்ட சொத்து யார் பார்வைக்கும் தெரிவதில்லை. கடன் வாங்காமல் திட்டத்தை கொண்டுவரமுடியாது. பணம் வரும் வரை காத்திருந்தால் திட்டமதிப்பீடு இரண்டுமடங்காகிவிடும். எனவே கடன் வாங்குவதில் பெருமளவு முதலீடுக்கு பயன்பட்டால் அது வளர்ச்சிக்கான அறிகுறி.
கே.பாலபாரதி:

கடன்வாங்குவது தவறில்லை. அரசுகள் இயல்பாக வாங்கி வருகின்றன. ஆனால் மின்சார கட்டணத்தை மீண்டும் மீண்டும்கூட்டினால் அது மக்களுக்கு கஷ்டத்தைதானே ஏற்படுத்துகிறது.அமைச்சர்: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குறைந்த அளவில் மின்கட்டணம் உள்ளது. அதிலும் மொத்தமுள்ள மின்நுகர்வோரில் 92 விழுக் காடு வீடுகள். அதற்கான மின்சார உயர்வை அரசே செலுத்திவிடுகிறது. உயர் வருவாய் உள்ள 8.50 விழுக்காடு சதவீதத்தினருக்கு தான் மின்சார கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எல்லா பொருட்களின் விலையும் 21 விழுக்காடு ஏறியு ள்ளது. இருப்பினும் நாங்கள் 15 விழுக்காடு தான் கட்டணத்தை உயர்த்தினோம். இந்த கட்டண உயர்வையும் மாநில அரசு செய்யவில்லை. மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் அதை செய்தது. நாம் கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்று சொன்னாலும் சொல்லாவிட்டாலும் மின்வாரியத்தின் மொத்த செலவுக்கும் வருவாய்க்கும் பெரிய வித்தியாசம் வரும் போது வருவாயையும் செலவையும் சமன் படுத்த கட்டணத்தை அந்த ஆணையம் தானாக உயர்த்தும்.கே.பாலபாரதி: 12.12.2014ல் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. உள்ளூர் தனியார் மின்சார நிறுவனங்கள் குறைந்தவிலைக்கு மின்சாரத்தை வழங்க முன்வந்தபோது அதை வாங்காமல் டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்களிடம் அதிகவிலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டதால் அரசுக்கு இழப்பு ரூ.254.05 கோடி மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிள்ளைப்பெருமாள் நல்லூரில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனம் நாஃப்தா பயன்படுத்தியதால் அதற்கு டான்ஜெட்கோ ரூ.331.51கோடியை கூடுதலாக வழங்கியுள்ளது. இதற்கும் அரசிடம் பதில் இல்லை. இதனால்கடந்த கால அரசாங்கத்தின்போது மின் வாரியத்திற்கு ரூ.500கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கடந்த கால திமுக ஆட்சி ஏற்படுத்தி அவர்கள் ஆட்சியில் பாதி மின் வெட்டு இப்போது பாதி மின்வெட்டு என்று இடையில் மக்கள் மாட்டிக்கொண்டு அவதிப் படுகிறார்கள். அமைச்சர்: சிஏஜி அறிக்கை உண்மைதான். இந்த நிகழ்வுகள் கடந்த ஆட்சியில் நடைபெற்றவை. கொள்முதல் ஒப்பந்தம் போட்டதும் திமுக ஆட்சிதான். சிஏஜி அறிக்கைபடி பிள்ளைப்பெருமாள் நல்லூர் தனியார் நிறுவனத்திற்கு ரூ.311 கோடி கூடுதலாக கொடுக்கப்பட்டிருப்பது உண்மைதான். அந்த நிறுவனத்துடன் திமுக அரசு போட்ட ஒப்பந்தப்படி ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 1900 கிலோ நாப்தாவை கணக்கிட்டு எரிபொருளாக வழங்கவேண்டும். ஒப்பந்தப்படி அந்தநிறுவனம் இதற்கான பணத்தை வாங் கியது சரியானது. ஆனால் ஒப்பந்தம்தான் தவறானது. ஒப்பந்தப்படி எரிபொருளை பயன்படுத்தினாலும் அதை சிக்கனப்படுத்தி குறைவான நாப்தாவை அவர்கள் பயன் படுத்தியிருக்கிறார்கள். ஒப்பந்தப்படி ஒரு யூனிட்டிற்கு 1900 மட்டும்தான் கொடுக்கவேண்டும். குறைத்து நாப்தா செலவு செய்திருந்தால் அது என்னுடைய பொறுப்பு. எனவே அந்த நாப்தாவை கோர முடியாது. ஒரு எரிபொருள் எந்தளவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்களோ அந்த அளவுக்குதான் கட்டணத்தை கொடுத்திருக்கவேண்டும். இதைத்தான் சிஏஜியும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் கூடுதலாக திமுக அரசு வழங்கியுள்ளது. ஒப்பந்தப்படி பணம் வழங்கியதில் முறைகேடு இல்லை. இதை அப்போது இருந்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி கோட்டை விட்டுவிட்டார். இருந் தாலும் ஒப்பந்தம்போட்டாகிவிட்டது என்பதால் நாங் களும் அதை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இல்லை என்றால் அந்த நிறுவனம் நீதி மன்றத்திற்கு போய் விடுவார்கள்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

சென்னை, செப். 26-
சட்டப்பேரவையில் கடந்த4 ஆண்டுகளில் விதி 110இன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த மின்சார திட்டங்கள்ஒன்றுகூட தொடங்கப்படவில்லையே ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழு துணைத்தலைவர் கே.பாலபாரதி வினவினார். வெள்ளியன்று (செப். 25) பேரவையில் எரிசக்தித்துறை மானியக்கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதத்தில் அவர் பேசியது வருமாறு: 2011இல் தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி செய்த மின்சாரம் 10 ஆயிரத்து 869 மெகாவாட் ஆகும். 2014இல் 13665 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 3ஆயிரத்து 325 மெகாவாட் கூடுதலாகியுள்ளது நல்ல விஷயம்தான்.
ஆனால் அதுமட்டும்தான் உண்மையா? ஆண்டுதோறும் 8 லட்சம் புதிய இணைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த கணக்குப்படி பார்த்தால் 1 ஆண்டிற்கு 750 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்திருக்கவேண்டும். இப்போது 7ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்திருந்தால்தான் புதிதாக வரும் தேவையை சமாளிக்கமுடியும். ஆனால் அது 3,280 மட்டும் நடந்திருக்கிறது.
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்:
இப்போது அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு 6239. 5 மெகாவாட் அளவுக்கு புதிய உற்பத்தி திறன்உருவாக்கப்பட்டு மின்சாரகட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.இதில் தமிழ்நாடு மின்சார வாரிய உற்பத்தி நிலையங்கள், மத்திய அரசின் மின் உற்பத்திநிலையங்களில் நம்முடைய பங்கு, தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்த அரசு கொள்முதல் செய்யும் மின்சாரம் போன்ற எல்லாவகை அம்சங்களையும் சேர்த்து 6239மெகாவாட் மின்சாரம் மாநிலமின் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மின்தேவை நிறைவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மூன்றுநாட்களாக தற்காலிகமாக ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறைக்கு காற்றாலை மின்சார உற்பத்தி நின்றுபோனதுதான் காரணம். காற்றாலை மின்சாரத்தை நம்பி நிலக்கரியைக் கொண்டு மின் உற்பத்திசெய்யப்படும் அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்திவிட்டுஆண்டு பழுதுபார்ப்பு பணியைசெய்து வந்தோம்.இந்தப்பணி முடிவடைய இன்னும் 2வாரங்கள் ஆகும். காற்றாலை மின்சாரம் இந்த காலகட்டத்தில் எவ்வளவு வருமோ அதை கணக்கிட்டு இந்த மின்நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஆனால் இப்போது எதிர்பாராமல் காற்றாலை மின்உற்பத்தி பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் தற்காலிகமாக மாநிலத்தில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இது தற்காலிகம்தான்.
இனிமேல் அதிமுகஆட்சியில் தமிழகத்தில் மின்வெட்டே வராது.
பாலபாரதி:
இப்போது கிடைக்கும் மின்சாரம் அனைத்தும் கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களில் வந்தவை தான். கடந்த 4 ஆண்டுகளாக பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்த மின்சார திட்டங்கள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. 2017 அல்லது 2018ல் தான் உற்பத்தி தொடங்கும் என்று கொள்கை விளக்கக்குறிப்பில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் ஆரம்பகட்ட நிலையில்கூட இல்லை.
அமைச்சர்:
நிலக்கரியை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மின் திட்டங்கள் சற்று காலதாமதம் ஆவது இயற்கைதான். ஆனால் இதுபோன்ற திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் உள்பட 15 வகையான முன்அனுமதியைப் பெற்ற பிறகுதான் ஒப்பந்த புள்ளிகளையே கோரமுடியும். திட்டங்களை அறிவித்தால் அடுத்தநாளே அதற்கான பணியை தமிழக அரசு தொடங்கிவிடுகிறது. அனுமதி வாங்குவதற்கு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை ஆகும். சுற்றுச்சூழல் அறிக்கைதாக்கல் செய்யவே 2 ஆண்டுகள் ஆகும். கடலோர பகுதி என்றால் கடலோர ஒழுங்காற்று ஆணையத்திடம் அனுமதி வாங்கவேண்டும். தூத்துக்குடி போன்ற தொழிற்சாலைகள் அதிகமுள்ள பகுதியில் புதிய அனல் மின்திட்டத்தை துவக்க திட்டமிட்டால் அந்த கோபுரத்தில் இருந்து வெளியாகும் புகை அந்தப் பகுதியில் எத்தகைய சுற்றுச்சூழல் மாசுவை ஏற்படுத்தும் என்பதை ஓராண்டு ஆய்வு செய்யவேண்டும். வனப்பகுதியில் திட்டத்தை மேற்கொள்ளவேண்டும் என்றால் இயற்கையாக வளர்ந்த மரங்களை வெட்டமுடியாது. மாற்று இடத்தைதேர்வு செய்யவேண்டும். இங்கெல்லாம் அனுமதி பெற 3 ஆண்டுகள் கூட ஆகும். அனுமதி வாங்குவதில் உள்ள பிரச்சனைகள் தான் திட்டம் தாமதம் அடைய காரணம். மத்திய அரசு பல விதிமுறைகளை வைத்துள்ளது. அவை அனைத்தையும் நிறைவு செய்ய பல மாதங்கள்ஆகும். 110விதியின் கீழ் முதல்வர்அறிவித்த அனைத்து மின்திட்டங்களும் 100சதம் நிறைவேற்றப்படும்.
பாலபாரதி:
கடந்த ஆட்சியில் எண்ணூரில் 800 மெகாவாட் மின்சாரத்திற்கு திட்டம் போடப்பட் டது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த திட்டம் 600 மெகாவாட்டாக மாற்றப்பட்டது. இதனால்தான் திட்டங்கள் தாமதம் ஆகின்றன.
அமைச்சர்:
இது தொழில்நுட்ப பிரச்சனை. இந்தியாவில் 800 மெகாவாட் மின்சாரத்தை தொடங்குவ தற்கான தொழில்நுட்பம் தற்போது நடைமுறையில் இல்லை. இதனால் அத்திட்டம் ரத்து செய்யப்பட்டு 600 மெகாவாட் சூப்பர் கிரிட்டிக்கல் மின் திட்டமாக மாற்றப்பட்டது. இதனால் சில பயன்கள் உள்ளன. ஆனால் இன்று 800 மெகாவாட் மின்சாரத்திற்கு மேலே செல்ல தொழில்நுட்பம் வந்துள்ளது. இனி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. பாலபாரதி: ஆண்டுக்கு 40,000விவசாய இணைப்பு கொடுக்கவேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் 1.4.2014 முதல் 31.12.2014 வரை - 5,124 இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. புறம்போக்கு நிலங்களில் உள்ள குடிசைகளுக்கு பட்டா இருந்தாலும் என்ஓசி இருந்தால்தான் மின் இணைப்பு கொடுக்கப்படும் என்றுகூறப்படுகிறது. அதில்உள்ள விதிமுறைகளைதளர்த்தவேண்டும்.இவ்வாறு விவாதம் நடை பெற்றது.
நன்றி தீக்கதிா் 

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click