AESU சுற்றறிக்கை – 10 / 2015 11-09-2015

தமிழ்நாடு மின்கழகக் கணக்காயர் களத் தொழிலாளர் சங்கம்
பதிவு எண் (2472)              அங்கீகாரம் பெற்றது.
தலைமை இடம் : சென்னை


k.சந்திரசேகரன் B.A.,                                                      r.சந்திரசேகரன்
தலைவர்                                                                                  பொதுச்செயலாளர்
                           
Union Office : Hall No.7,M.L.D.C.Building TNEB COMPLEX, Anna salai, Chennai – 600 002.
                    சுற்றறிக்கை – 10 / 2015           11-09-2015

வசூல்நேரம் உயர்த்துவதை ஏற்கமாட்டோம்
அன்புடையீர்
                  வணக்கம். அட்டைப்பட்டியல் பணியாளர்கள் வசூல் நேரம் மதியம் 2.30 மணியோடு முடிவடைந்து, இதர பணிகளை முடித்து விட்டு         3.30 மணிக்கெல்லாம் KKடாடா காட்டிவிட்டு போகிறார்கள் என்று யாரோ விவரம் அறியாதவர்கள் போட்டுக் கொடுத்ததை அப்படியே வேத வாக்காக எடுத்துக்கொண்ட புத்திசாலியான வாரிய நிர்வாகம் வசூல் நேரத்தை            3.30 மணிவரை மேலும் ஒரு மணிநேரம் உயர்த்த திட்டமிட்டு தொழிற்சங்கங்களுக்கு, தொழிற்தகராறு சட்டம் பிரிவு 9A வின்படி கொடுத்திருக்கும்   08-09-2015 தேதியிட்ட முன்னறிவிப்பினை இத்துடன் இணைத்துள்ளோம்.

                  இதுபோன்ற ஒரு அறிவிப்பினை வாரிய நிர்வாகம் கொடுக்கவுள்ளது என்பதைப் பற்றியும், இவ்வாறு வசூல் நேரத்தை உயர்த்துவது சட்டப்படியும், தர்மப்படியும் நியாயமாக இருக்காது என்பதற்கு பல்வேறு விவரங்களைச் சுட்டிக்காட்டி, இதனை நமது சங்கம் முறியடிக்கும் என்றும் நமது    20-08-2015 தேதியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தோம்.
                  ஆனால் இதனை தொழிற்சங்கbfhyfங்கள் நம்பவில்லை. பெரிதாகவும் எடுத்துக்கொள்ளவில்லை.22-08-2015 அன்று அட்டைப்பட்டியல் ஊழியர் பிரச்சனைக்காக சென்னையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட சங்கம், அன்றைய மதியம், வாரிய நிர்வாகத்தைச் சந்தித்து, வசூல் நேரம் 3.30 மணிவரை உயர்த்துவதைப்பற்றி கேட்டதற்கு, அவ்வாறு எந்த திட்டமும் வாரியத்தில் இல்லை, உங்களுக்கு யாரோ தவறான செய்தியை தந்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டதாம். முழு பூசணிக்காயை....................
                  இப்பொழுது பூனை வெளியே வந்துவிட்டது. ஏமாந்தால் வீட்டில் குழந்தைக்காக வைக்கப்பட்டிருக்கும் பாலை சத்தமில்லாமல் குடித்துவிட்டு பாத்திரத்தையும் உருட்டிவிட்டு சென்றுவிடும்.
                  என்ன செய்யப்போகிறோம் நாம்? ஏமாந்திருக்கபோகிறோமா? நிர்வாகம் பணிநேரத்தை உயர்த்திட அனுமதிக்கப்போகிறோமா?
ஒருபோதும் ஏமாறமாட்டோம்.
தொழிற்சங்கங்கள் விழிப்போடு இருப்போம். 6 மணிநேர வேலையை             7 மணி நேரமாக உயர்த்த அனுமதிக்க மாட்டோம். சட்டமும் இதனை அனுமதிக்காது. தொழிலாளர் நலனை என்றும்போல் கண்ணிமையாய் இருந்து பாதுகாப்போம்.                                
                                                 தோழமையுள்ள

                                                பொதுச்செயலாளர்

பெறுநர் : அனைத்து மண்டலச்செயலாளர்கள்.

குறிப்பு : 1) இச்சுற்றறிக்கை மற்றும் நிர்வாக முன்ன்றிவிப்பு நகல்களை வட்டச்செயலாளர்களுக்கு அனுப்பிவைக்கவும், அவர்கள் தேவைப்படும் நகல்களை எடுத்து கிளைச்செயலாளர்களுக்கு அனுப்பிவைக்கவும் வேண்டுகிறோம்.
            2)  எல்லா தொழிலாளர்கள், குறிப்பாக, அட்டைபட்டியல் ஊழியர்கள் மத்தியில் பரவலாக கொண்டு சென்று, நேரடியாக அவர்களைச் சந்தித்து பிரச்சனையின் தாக்கத்தினை எடுத்துரைத்து, ஓரணியில் நிற்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துமாறு, கிளைச்செயலாளர்களை வேண்டுகிறோம்.

நகல் : மத்தியசங்கப் பொறுப்பாளர்கள்.
       செய்திமடல்.
20-08-2015 தேதியிட்ட சுற்றறிக்கையிலிருந்து
அட்டைப்பட்டியல் பணியாளர்கள் பிற்பகல் 3.30 மணிக்கு பணிமுடித்து விட்டு “டாடா” காட்டிவிட்டு செல்வதாகவும் எனவே  மேலும் 1 மணிநேரம் உயர்த்தி பிற்பகல் 3.30 மணி வரை வசூல் பணியினை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஓரு சங்கம் வாரியத் தலைவருக்கு கடிதம் கொடுத்துள்ளது. அதனை ஏற்றுக் கொள்ள திட்டமிட்டு, தொழிற்சங்கங்களுக்கு தொழிற்தகராறு சட்டம் பிரிவு 9Aன்படி நோட்டீஸ் கொடுக்கவுள்ளதாக அறிகிறோம்.  தேர்ச்சி பெற்ற வாரிய அதிகாரிகள், முதிர்ச்சி பெற்ற தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து பேசி அட்டைப் பட்டியல் கேடர், பணி அளவு, பணி நேரம், இதர பணி நிலைகள் ஆகியவைகளையெல்லாம் ஆழமாகவும், தீவிரமாகவும் பரிசீலனை செய்து ஒப்பந்தத்தின் மூலம், 3 தலைமுறைகளுக்கு மேலாக செயல் பட்டு வரும் நிலையில்,  இப்பணித் தொகுப்புக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் விவரம் தெரியாமல் கொடுக்கும் கடிதத்தின் அடிப்படையில், வசூல் நேரத்தை உயர்த்திட             9A நோட்டீஸ் கொடுக்க முற்படுவது தவறான அணுகுமுறையாகும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம். வேலை நேரத்தை காலை 8.30 மணிமுதல் 12.30வரையும் மதியம் 1.30 மணி முதல் 3.30 மணி வரை என்றும் வசூல் மையம் 2.30மணிவரை என்றும் நிரணயிக்கப் பட்டதென்றால் 2.30 மணிமுதல் 3.30 மணிவரை கைகட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தமா? அன்றைய தினம் வசூல் செய்த பணத்தை எண்ணுவதற்கும், கணக்கை TALLY செய்வதற்கும், P.C.B.எழுதி, பணத்தை பாதுகாப்பிற்கு ஒப்படைத்து பின்னர் வங்கி ஏஜென்டிடம் பணத்தைக் கொடுப்பதற்கும், இதர இடங்களில் செலான் தயார் செய்து வங்கியில் பணத்தைச் செலுத்த ஏற்பாடு செய்வதற்கும் நேரம் வேண்டாமா? இவை எல்லாம் அலுவலக வேலையல்லவா?. அட்டைப் பட்டியல் ஊழியர் எவரும் 3.30மணிக்கு “டாடா” காட்டிவிட்டு செல்வதில்லை. மாறாக மடியில் கட்டியிருந்த நெருப்பை இறக்கிவைத்த மனநிலையில்தான் அலுவலகத்தை விட்டுச் செல்கிறார்கள். மேலும்  6 மணி பணி நேரத்தை 7 மணி நேரமாக உயர்த்திட இன்றுள்ள சட்டங்கள் அனுமதிக்காது என்பதையும் நிர்வாகம் கொடுத்த வசூல் நேர அதிகரிப்புக்கான நோட்டீஸ்   முறியடிக்கப் படும் என்பதையும் உறுப்பினர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். தொழிலாளர்களுக்குள், தொழிற்சங்கங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்திட வேண்டுமென்று சம்மந்தப் பட்டவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.                
( TNEB / AESU )

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click