விவசாயிகளுக்கு கட்டண மின் இணைப்பு; மின்வாரிய அதிகாரிகள் அறிவிப்பு (தினமலர் செய்தி )

உடுமலை : 'விவசாயிகளுக்கு கட்டண மின் இணைப்பு திட்டத்தில், இணைப்பு வழங்கப்படும் போது, சுயநிதி மின் இணைப்பு வரிசை மட்டும் ரத்து செய்யப்பட்டு, சாதாரண வரிசையில், விண்ணப்பம் சேர்க்கப்படும்', என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனம் செய்யும் விவசாயிகள், இலவச மற்றும் சுயநிதி திட்டம் எனப்படும் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் வைப்பு திட்டத்தில், மின் இணைப்பு கேட்டு மின்வாரியத்தில் விண்ணப்பம் அளிக்கின்றனர். இத்திட்டங்களின் கீழ் இணைப்பு கிடைக்க, பல ஆண்டுகள் வரை விவசாயிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.இதனால், வாரியம் சார்பில், கட்டண மின் திட்டம் '3ஏ1' இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளுக்குள், இத்திட்டத்தில், மின் இணைப்பு வழங்கப்படுவதுடன், யூனிட் ஒன்றுக்கு 3.50 ரூபாய் கட்டணம் என்பதால், விவசாயிகள் ஆர்வத்துடன் விண்ணப்பம் அளித்தனர். ஆனால், இணைப்பு வழங்கும் போது, மின்வாரியம் தெரிவித்த நடைமுறைகளால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து, 'தினமலரில்' செய்தி வெளியானது. இதனையடுத்து, '3ஏ1' கட்டண திட்டத்தில் இணைப்பு பெறுபவர்களுக்கான தெளிவான வழிகாட்டுதல்களை மின்வாரியம் வழங்கியுள்ளது.பெதப்பம்பட்டி உதவி செயற்பொறியாளர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விவசாயிகள் சுயநிதி திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற விண்ணப்பம் பதிவு செய்து, '3ஏ1' திட்டத்தில் இணைப்பு பெற்றால், சுயநிதி திட்ட மின் இணைப்பு வரிசை ரத்து செய்யப்படும். சாதாரண வரிசையில், அவ்விண்ணப்பம் வரும் போது, '3ஏ1' மின் இணைப்பு விவசாய மின் இணைப்பாக மாற்றம் செய்து வழங்கப்படும். இது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு வருகிறது' என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click