ஓய்வூதியதாரருக்கு புதிய திட்டம் குடிநீர் வாரியம் அறிவிப்பு: ஓர் ஆண்டுக்கு பிறகு நடைமுறை

   ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தைசென்னை குடிநீர் வாரியம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படிஓய்வூதியர் இறந்தால் அவரது வாரிசுகளுக்கு ரூ.50 ஆயிரம்வழங்கப்படும். இதுகுறித்து சென்னைக் குடிநீர்வாரியம்வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

      சென்னை குடிநீர் வாரியம் செயல்படுத்தப்பட உள்ள புதியதிட்டத்தின்படி, ஓய்வூதியதாரர்களிடமிருந்து மாதம் ரூ.80ஓய்வூதியத்திலிருந்து அவர் உயிரோடு இருக்கும் வரை பிடித்தம்செய்யப்படும். அவர்களிடமிருந்து முதல் 12 மாதங்கள் பிடித்தபின்னரே இத்திட்டத்தில் இருந்து பயன்பெறுவது நடைமுறைக்குவரும். அதற்குப் பின்னர் ஓய்வூதியர் இறந்தால் அவருடையமனைவி அல்லது கணவர் / உயிரோடு இல்லாவிடில் அவர் நியமனம்செய்த நபர் அல்லது வாரிசுதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

இத்திட்டத்துக்கான நியமனப் படிவத்தை குடிநீர் வாரியம் தபால்மூலமாக தனது ஓய்வூதியதாரர்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படிவத்தை வாரியத்தின்இணையதளமான www.chennaimetrowater.tn.nic.in ல் பதிவிறக்கம் செய்துபயன்படுத்தலாம்.

அக்.15-க்குள் படிவங்களை அனுப்ப வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட படிவம், துணை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர்,சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், எண்.1,பம்பிங் ஸ்டேசன் ரோடு, சென்னை-2 என்ற முகவரிக்கு அக். 15-க்குள்அனுப்ப வேண்டும். தவறும்பட்சத்தில் ஓய்வூதியதாரர்கள்இத்திட்டத்தில் சேருவதற்கு விருப்பம் உள்ளதாகக் கருதி தங்களதுஓய்வூதியத்திலிருந்து ரூ.80/-ஐ இந்த மாதம் முதல் பிடித்தம்செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சென்னைக் குடிநீர்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்கூறப்பட்டுள்ளது.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click