மின் கட்டண‌த்தை இ‌னி எஸ்.எம்.எஸ்.‌சி‌ல் அ‌றியலா‌ம்!

மின்சார கட்டணம் எவ்வளவு என்பதை எஸ்.எம்.எஸ்.மூலம் பொதும‌க்க‌ள் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று த‌மி‌ழ்நாடு மின்சார வாரியம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

த‌மிழக‌த்‌தி‌ல் 1 கோடியே 54 லட்சத்து 38 ஆயிரத்து 725 வீடுகளில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. 29 லட்சத்து 80 ஆயிரத்து 814 வர்த்தக நிறுவனங்கள் மின்சாரத்தை உபயோகிக்கிறார்கள். 5 லட்சத்து 53 ஆயிரத்து 224 தொழிற்சாலைகள் மின்சாரத்தை பயன்படுத்துகின்றன.

மின்சாரத்தை பயன்படுத்துவோர்களின் வீடுகள், நிறுவனங்களுக்கு மின்சாரத்துறை சார்பில் ஊழியர்கள் மீட்டரில் கணக்கெடுத்து அதற்கான கார்டுகளில் எழுதி வைப்பார்கள். இந்த கார்டுகளை கொண்டுபோய் மின்சார அலுவலகத்தில் காண்பித்து உரிய கட்டணத்தை செலுத்துவார்கள். மின்சாரகட்டணத்தை ஆன்லைனிலும் கட்டலாம். தபால் அலுவலகத்திலும் கட்டலாம்.


மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு நன்மை செய்யும் விதமாக மின்சார வாரியம் மதிப்பு கூட்டு சேவையாக எஸ்.எம்.எஸ்.மூலம் அவர்களுடைய மின்கட்டணம் எவ்வளவு என்பதை தெரிவிக்க உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய செல்போன் எண்ணை மின்சார அலுவலக பகுதி பிரிவு அலுவலகங்களுக்கு சென்று பதிவு செய்யுங்கள். அந்த பதிவு இன்று முதல் செய்யப்படுகிறது.

அவ்வாறு பதிவு செய்தால், அந்த செல்போனுக்கு அவர்களுடைய மின் கட்டணம் எவ்வளவு என்றவிவரத்தையும் கட்டணத்தை செலுத்த கடைசி நாள் எது என்ற விவரத்தையும் எஸ்.எம்.எஸ்.மூலம் அனுப்பிவைப்போம். ஏற்கனவே நடைமுறையில் உள்ள கார்டு முறையும் உண்டு எ‌ன்று ‌‌ம‌ி‌‌ன்வ‌‌ா‌ரிய‌ம் தெரிவித்துள்ள

4 comments:

TNEB MAPPS Trade Union said...

இதற்கான உத்தரவு உள்ளதா?

மின்துறை செய்திகள் said...

ASSESSOR USER ல் இந்த வசதி தரப்பட்டுள்ளது (எனது USER இருக்கிறது)

nataraaj said...

is any charge is applied

nataraaj said...

if there is more than one service and only one mobile number is available , is it possible to know the service