மின்வாரிய கணக்கில் வராத பணியாளர்களுக்கு சிக்கல்? (தினமலர் செய்தி)


திருப்பூர்:அதிகரித்து வரும் மின்வெட்டு ஒருபுறமிருக்க, மின்வாரியத்தில் கணக்கில் வராத ஊழியர்கள் அடுத்தடுத்து பலியாகி வருகின்ற னர். இவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைப்பதில்லை. "தங்களை மின் வாரியத்தில் நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும்,' என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில், 5.78 லட்சம் மின் இணைப்புகள் உள் ளன. அடிப்படை பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்கள், அலுவலர்கள் என, மொத்தம் 3,300 பணியிடங்கள் ஒதுக்கீடு உள்ளது. ஆனால், 1,200 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டு உள்ளனர்; மீதமுள்ள 2,100 பணியிடங்கள் காலியாக உள்ளது.மாநிலத்திலேயே, திருப்பூர் மாவட்டத்தில்தான் அதிகளவில், மாதம் 79 கோடி ரூபாய் மின் கட்டணம் வசூலாகிறது. அதேபோல ஊழியர்கள் பற்றாக்குறையிலும் திருப்பூர் முதலிடம் வகிக்கிறது. மிகவும் முக்கிய பணியிடமான வயர்மேன் பணிக்கு 22 பேர் மட்டுமே உள்ளனர். 618 பணியிடங்கள் ஒதுக்கீட்டில், 596 பணியிடங்கள் காலியாகவே உள்ளது.ஆனால், கணக்கில் வராத பணியாளர்களாக, ஒவ்வொரு வயர்மேனுக்கு கீழ், ஐந்து பேர் வரை பணியாற்றி வருகின்றனர். 

அத்தொழிலாளர்களுக்கு மின்நுகர்வோர் வழங்கும் "அன்பளிப்பு' மட்டுமே சம்பளமாக கிடைத்து வருகிறது. நிரந்தரமான பணி, சம்பளம் எதுவுமில்லாத இந்த ஊழியர்கள் அடிக்கடி மின் விபத்துக்களால் பலியாகும் சம்பவம் தொடர் கதையக நடந்து வருகிறது.நடப்பாண்டில் ஜன., முதல் ஆக.,வரை கோவை மண்டலத்தில் எட்டு பேர் பலியாகி உள்ளனர். திருப்பூரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், கொங்கு நகர் பகுதியில் ஞானவேல், பெருமாநல்லூரில் பெருமாள், வீரபாண்டியில் சதீஷ், பொல்லிகாளிபாளையத்தில் குருசாமி, பசூரில் குமார் ஆகியோர், மின்வாரிய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, விபத்து ஏற்பட்டு பலியாகினர்.பலியானவர்களின் குடும்பத்தினர், உரிய நஷ்ட ஈடு கேட்டு, பல போராட் டங்கள் நடத்திய நிலையில், மின் பகிர் மான கழக அதிகாரிகள், "மின் வாரிய ஊழியர்களை தவிர வேறு யாரையும் பணிக்கு பயன்படுத்த கூடாது; விபத்து களில் ஏற்படும் போது உயிரிழப்புக்கு மின் வாரியம் பொறுப்பு ஏற்காது,' என அறிவித்தனர். 

அதைக்கேட்டு 15 ஆண்டாக பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.கடந்த 2008 வரை, மின் வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றியுள் ளனர். "பிசிபி' (பெட்டி கேஸ் புக்) பதிவு செய்யப்பட்டு, வவுச்சர் பெறப்பட்டு கூலியும் வழங்கப்பட்டுள்ளது. அதனை ஆதாரமாக கொண்டு பணி நிரந்தரம் கோரக்கூடாது என்ற அடிப்படையில், கூலி தருவதையும் நிறுத்தி விட்டனர். திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் 350 பேர் வரை பணியாற்றியுள்ளனர்.ஊழியர்கள் கூறியது: கடந்த 1980ல் இருந்து தினக்கூலிகளாக பணியாற்றி வருகிறோம். பணி நிரந்தரம் செய்யப்படாத நிலையில், 2008 முதல் மின் வாரியமும் கூலி தருவதில்லை. ஆனால், தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். பணி பாதுகாப்பு இல்லை. காலியாக உள்ள பணி இடங்களில் முன்னுரிமை கொடுத்து, நியமிக்க அரசை கேட்டு கொள்கிறோம்.

1 comment:

krishnamoorthymoorthy said...

Indha nilai...tirupur...ill..mattum...allae...GOBI.EDC...illum...thodarkirathu...minvariya,,nirvagam...al'''irundhalum...illai..endralum...anithu...velai..kalu...thadaiindri...nadakka..vendum...ena...thittamittu,,sathi..seikiradhu????...tholilalarkidam...otrumai...illai..agavae...indhamadhiri...ematru...vithaiyil...TNEB/TANGEDCO....edupattu...ullathu...?????krishnamoorthy Gobi,7.10.2012

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click