உடல் நலம் இயலாமை காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தமிழ்நாடு அரசு உத்தரவு


சென்னை : உடல் நல இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு ( நாள் 13.2.2009 ) பிறப்பித்துள்ளது.
இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறை செயலாளர் வெளியி்ட்ட உத்தரவு வருமாறு:-
மரணமடைந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களான மகன், மணமாகாத மகள், நெருங்கிய உறவினர்களுக்கு கருணை அடிப்படையில் நேரடி பணி நியமன சலுகையினை வேலைவாய்ப்பகங்களை தொடர்பு கொள்ளாமல் அளிப்பது போல் மருத்துவ இயலாமை காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் மகன் மணமாகாத மகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு குடிமைப்பணி ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட சலுகையை மருத்துவ இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும் விரிவுப்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு கவனத்துடன் பரீசிலனை செய்தது. அதைத்தொடர்ந்து மருத்துவ இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் மகன் மணமாகாத மகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கலாம் என்றும் அரசு ஆணையிட்டுள்ளது. மேலும் மருத்துவ இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் அதிகப்பட்ச வயதை 50 வயதில் இருந்து 53 ஆக அதிகரிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.



No comments: