மின்வாரிய ஓய்வூதியர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுகோள்

    மின்வாரிய ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், கருணைத் தொகை பெறுபவர்கள் அனைவரும் உரிய படிவங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

      தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

         மின்வாரிய ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், கருணைத் தொகை பெறுபவர்கள் அனைவரும் நிகழாண்டு முதல் புதிய வாழ்நாள் சான்று, பணியின்மை, மறு வேலைவாய்ப்பு சான்று படிவம், மணமாகாத, மறுமணம் புரிந்தமைக்கான சான்று படிவங்களை ஓய்வூதியம் பெறும் வங்கியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜுன் மாதத்துக்குள் உரிய படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறை ஆகும். 

 குறிப்பிட்ட காலத்துக்குள் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.  ஆகையால், உரிய காலத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்தச் செய்திக்குறிப்பில் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

                           இதற்கான படிவங்களை கீழே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

No comments: