உதவிப் பொறியாளர் தேர்விற்கு, 'ஹால் டிக்கெட்'டில் தவறு இருந்தால் தொடா்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி

உதவிப் பொறியாளர் தேர்விற்கு, 'ஹால் டிக்கெட்'டில் தவறு இருந்தால், 'hallticket@tnebnet.org' என்ற மின் அஞ்சல் முகவரியில் தெரிவிக்குமாறு, தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், 375 உதவிப் பொறியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு ஜன., 31ல் நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்த பலருக்கு, ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை என, புகார் எழுந்துள்ளது. இது குறித்து, மின் வாரியம் வெளியிட்டுள்ள விவரம்: தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், மின் வாரிய இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட்டில் தவறு இருந்தால், 'hallticket@tnebnet.org' என்ற மின் அஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, இன்று காலை, 10:30 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, அலுவலகத்திற்கு நேரில் அல்லது, 044 - 28522256 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments: