கரூர்: மின்வாரியத்தில் சுருக்கெழுத்து, தட்டச்சர் பணியிடத்திற்கு இன்றுக்குள் சான்றிதழ் சரிபார்த்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அடைக்கண் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக கிளைகளிடம் இருந்து அறிவிக்கப்பட்டுள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் (ஸ்டெனோ டைபிஸ்ட்) பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பரிந்துரைக்கப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு கல்வித்தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு முதுநிலை தேர்ச்சி (சீனியர் கிரேடு) சுருக்கெழுத்து தட்டச்சு தமிழ், ஆங்கிலம் முதுநிலை (சீனியர்கிரேடு) ஏதேனும் ஒன்றில், முதுநிலை பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட கல்வி தகுதியுடைய கரூர் மாவட்ட பதிவுதாரர்கள், தங்களின் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை, ரேஷன் கார்டு, சாதிச்சான்று மற்றும் இதர சான்றுகளுடன் இன்று (22ம் தேதி) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தங்களது பெயர்கள் பரிந்துரை செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment