தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (மின் வாரியம்) காலியாக உள்ள 375 பொறியாளர்களை நேரிடையாக நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த பணியிடங்கள் - 375
எலக்ட்ரிக்கல் - 300
மெக்கானிக்கல் - 25
சிவில் - 50
சம்பள விகிதம்: 10,100-34,800 + தர ஊதியம் 5,100 (மாதந்தோறும்)
தகுதிகள்:
கல்வி:
பொறியியலில் பட்டம் (EEE/ECE/EIE/CSE/IT/Mehanical/Production/Industrial/Manufacturing/Civl ஆகிய ஏதாவது ஒரு பிரிவில்)
அல்லது
AMIE (Section A and B)-ல் தேர்ச்சி (Electrical/Mechanical/Civil ஆகிய ஏதாவது ஒருபிரிவில்)
வயது:
பழங்குடியினர், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), மிகவும் பிற்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்கள்) மற்றும் விதவைகளுக்கு குறைந்தபட்ச வயது 18. அதிகப்பட்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
பிற வகுப்பினருக்கு குறைந்தபட்ச வயது 18. அதிகபட்ச வயது 30.
தேர்வு கட்டணம்:
பிற வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்கள்) - ரூ. 500
பழங்குடியினர், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்)- ரூ. 250
விண்ணப்பங்களை இணையவழியாக (ஆன்-லைன்) மட்டுமே அனுப்ப வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பதோடு மின்வாரியத்தில் ஒராண்டு பயிற்சி (Graduate Apprenticeship Training) முடித்திருத்தல் வேண்டும்.
முக்கியமான தேதிகள்
அறிவிக்கை வெளியான தேதி: 28-12-2015
ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அளிப்பதற்கான கடைசி நாள்:11-01-2016
தேர்வு கட்டணங்களை செலுத்துவற்கு (கனரா மற்றும் இந்தியன் வங்கி மூலம்) கடைசி நாள்: 13-01-2016