பெரியகுளம் : வீட்டின் ஹாலிங் பெல்லை அழுத்தி, மின்மீட்டர்களில் அளவுகளை கணக்கெடுப்பதற்கு பதிலாக, தெருமுனையில் நின்று கொண்டு, ரிமோட் இயந்திரத்தில் கணக்கிடும் "ஹைடெக்' புதிய மின்மீட்டர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பெரியகுளத்தில் 15 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இந்த மின் இணைப்புகளில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர்களில் இருந்து, அளவீடுகள் கணக்கிடப்பட்டு வருகிறது. மின் மீட்டர்களால், மின் அளவுகள் துல்லியமாக பதிவு செய்ய முடியாததால், நுகர்வோர்களுக்கும், கணக்கீட்டாளர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு. தற்போது, மத்திய அரசின் திட்ட த்தில், நகரில் உள்ள பழைய மின்மீட்டர்களுக்கு பதிலாக, கம்ப்யூட்டர் ஸ்டேட்டிங் புதிய மீட்டர்கள் மாற்றப்பட உள்ளன. நகரில் புதிதாக 60 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நகராட்சி பகுதிகளில் புதிய மின்மீட்டர்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
கம்ப்யூட்டர் ஸ்டேட்டிங் மின்மீட்டர்கள் பொருத்தப்படும்போது, கணக்கீட்டாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மீட்டர்களை பார்வையிட்டு, கணக்கீடு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த பகுதிக்குள் சென்றவுடன், தெருமுனையில் நின்று அனைத்து வீடுகளிலும் உள்ள புதிய மீட்டர்களில் இருக்கும், சென்சார் மூலம் கணக்கீட்டாளரின் கையடக்க கருவியின் மின் அளவீடு பதிவாகிவிடும். இதனால் நுகர்வோர் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை துல்லியமாக அறிந்து கொள்ளமுடியும். இதற்கான பணிகள் மின் கோட்ட பொறியாளர் சுகுமார் மேற்பார்வையில் நடந்து வருகிறது.
No comments:
Post a Comment