குறுஞ்செய்தியில் மின் கட்டண தகவல்: திட்டம் தொடங்கியது




சென்னை, ஜூன் 12-மின்சாரக் கட்டணம் எவ்வளவு என்பதை மக்களுக்கு குறுஞ்செய்தியில் (எஸ்எம்எஸ்) தெரிவிக்கும் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா வியாழனன்று (ஜூன் 12) தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 1 கோடியே 63 லட்சம் வீடுகள், 20.03 லட்சம் விவசாயிகள், 33 லட்சம் வணிக நிறுவனங்கள் மற்றும் 5.77 லட்சம் தொழிற்சாலைகளுக்கென மொத்தம் 2.44 கோடி மின் இணைப்புகள் உள்ளன. மின் கட்டணத்தை 2 மாதத்திற்கு ஒரு முறை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தவில்லையெனில் முன்னறிவிப்பின்றி மின் இணைப்பு துண்டிக்கப்படும். ஆனால், மின் கட்டண விவரம் குறிக்க வருபவர்கள் சரியாக வருவதில்லை என்றும், இதனால் மின் கட்டணம் எவ்வளவு என்று தெரியாமல் கட்டணம் செலுத்தவில்லை என்றும் பலர் புகார் கூறுகின்றனர்.இதையடுத்து, மின்கட்டண விவரத்தை எஸ்எம்எஸ் மூலம் நுகர்வோருக்கு தெரிவிக்க மின்வாரியம் முடிவு செய்தது. அதன்படி, மக்கள் பயன்படுத்திய மின்சார அளவு மற்றும் அதற்கான கட்டணத்தை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா வியாழனன்று (ஜூன் 12) பிற்பகல் 12.30 மணியளவில் இத்திட்டத்தை துவங்கி வைத்தார். அப்போது, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.சமீப காலமாக புதிய மின் இணைப்பு பெறுபவர்களின் தொலைபேசி எண்களை மின் வாரிய அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே மின் இணைப்பு உள்ளவர்கள் மின் கட்டணம் செலுத்த வரும் போது தங்களது மொபைல் எண்ணை தெரிவித்தால் பதிவு செய்யப்பட்டு, கட்டண விவரம் அனுப்பப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.        நன்றி      தீக்கதிர்

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click