ஊட்டி:குந்தாவில் பழங்கால மின் சாதனங்களின் அருங்காட்சியகம்

ஊட்டி:குந்தா மின்வாரிய மேல்முகாமில் பழங்கால மின் சாதனங்கள் சேகரிக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.நீலகிரியில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், 12 மின் நிலையம் மற்றும், 13 அணைகள் உள்ளன. இங்குள்ள மின்நிலையம், அணை கட்டப்பட்டு, 70 ஆண்டுக்கு மேலாகிவிட்டது.அந்த கால கட்டங்களில் பயன்படுத்திய மின் கருவிகள், மோட்டார், புரஜெக்டர், டெலிபோன், எனர்ஜி மீட்டர், அன்றைய மருத்துவ உபகரணங்கள், டனல், மின் நிலையம் மற்றும் அணை கட்டுமான பணிகளின் புகைப்படங்கள், டிரான்ஸ்பார்மர்கள், பிரேக்கர் உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்கள் குந்தாவுக்கு கொண்டு வரப்பட்டன. அங்குள்ள அலுவலகம் மற்றும் திறந்தவெளியில் அருங்காட்சிய கம் அமைக்கப்பட்டது.கோடை சீசனையொட்டி, மஞ்சூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பார்வையிட, குந்தா மின்வாரியம் சார்பில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தை மின்வாரிய தலைவர் விக்ரம்கபூர் திறந்து வைத்தார். பின், நிருபர்களிடம் கூறுகையில், ''கடந்த பல ஆண்டுக்கு முன்பு பயன்படுத்திய அரிய மின்சாதனங்கள் சேகரிக்கப்பட்டு, அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பயனளிப்பதாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டு தெரிந்துகொள்ளலாம்,'' என்றார்.இங்கு திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பார்வையிட்டு செல்கின்றனர். குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் ரகு, மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்

மின் வாரிய இணையதள சேவைக்கு இனி சொந்த தொலைதொடர்பு வசதி

அனைத்து அலுவலகங்கள் இடையில், கம்ப்யூட்டர் வாயிலாக பெறப்படும், தகவல் பரிமாற்ற சேவைகளுக்கு, இனி, சொந்த தொலைதொடர்பு வசதியை பயன்படுத்த, தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், மின் கோபுர வழித்தடங்கள் வாயிலாக, பல பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அதன்படி, அந்த கோபுரத்தில், மூன்று கம்பியில் மின்சாரம் செல்கிறது.அதன் மேல், 'எர்த் ஒயர்' செல்கிறது. இது, இடி, மின்னலின் போது, மின் கம்பியை பாதுகாக்கிறது. அதிக திறன் உள்ள, மின் கோபுர வழித்தடத்தில், 'எர்த் ஒயருக்கு' பதில், 'பைபர் ஆப்டிக் கிரவுண்ட் ஒயர்' என்ற, தொலைதொடர்புக்கு உதவும், 'கேபிள்' அமைக்கப்படுகிறது.

அந்த கேபிள், எர்த் ஒயராக செயல்படுவதுடன், தகவல் பரிமாற்ற சேவைகளுக்கும் பயன் படுகிறது.தகவல் பரிமாற்றம்இதன் வாயிலாக, மின் நிலையங்கள்; துணை மின் நிலையங்கள் இடையில், அதிகாரிகள், தொலைபேசியில் பேசுவதுடன், கம்ப்யூட்டரில், தகவல் பரிமாற்றங் களையும் மேற்கொள்கின்றனர்.

தற்போது, அந்த சேவையை, தலைமை அலுவலகம் முதல் பிரிவு அலுவலகம் வரை, கம்ப்யூட்டரில் பெறப்படும், தகவல் பரிமாற்ற சேவைகளுக்கும் பயன்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், ஒன்பது மண்டலம், 42 மின் பகிர்மான வட்டங்கள், 3,000 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்கள் இடையே, இணையதளம் வாயிலாக, மின் கட்டணம், உபகரணங்கள் இருப்பு, ஊழியர்கள் விபரம் போன்ற தகவல் பரிமாற்றங்கள், பொது அல்லது தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக, ஒரு அலுவலகத்திற்கு, மாதம் குறைந்தது, 1,000 ரூபாய் வரை செலவாகிறது. ஆண்டுக்கு, பல லட்சம் ரூபாய் செலவாகிறது. இந்த செலவை தவிர்க்க, சொந்த தொலைத் தொடர்பு வசதி பயன்படுத்தப்பட உள்ளது.புதிய திட்டம்தற்போது, பைபர் ஆப்டிக் இணைப்பில் உள்ள, துணை மின் நிலையங்கள், அதன் அருகில் உள்ள, மின் வாரிய அலுவலகம் வரை, 'கேபிள்' அமைக்கப்பட்டு இணைக்கப்படும்.

இதனால், அந்த அலுவலகங்களிலும், சொந்த தொலைத்தொடர்பு சேவை கிடைக்கும். இதன் வாயிலாக, தொலைத்தொடர்பு சேவைக்கு, மற்ற நிறுவனங்களை சார்ந்திருக்க தேவையில்லை. அதற்காக செலவழிக்கும் நிதியில், புதிய திட்டங்களை மேற்கொள்ளலாம்.

MCD வசூலிப்பது தொடர்பான விளக்கம்

சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் குழுக்களில் வாரியத்தில் பழைய மின் இணைப்புகளுக்கு *MCD* தவறான முறையில் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றசாட்டு கூறி இருந்தது.
சில இடங்களில் கணினியில் மின் இணைப்புகளுக்கு *MCD* பதிவு செய்யப்படாமல் இருந்தால், அந்த மின் இணைப்புகளின் கோப்புகளை ஆய்வு செய்யாமலே *MCD* முழுவதும் மீண்டும் வசூல் செய்யப்படுகிறது.
*MCD* *எப்போது வசூல் செய்யப்பட வேண்டும் என்பது பற்றி மின் வாரியம் தெளிவாக அறிவுறித்தி உள்ளது.
1. மின் இணைப்புகளின் மீட்டர் பழுது / புகைந்து விட்டால் புதிய மீட்டர் பொருத்தப்படும் போது, அந்த மின் இணைப்பிற்கு தற்போது உள்ள *MCD* அளவானது வசூல் செய்யப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்து குறைவாக இருந்தால் அந்த விடுபட்ட தொகையை மட்டும் வசூல் செய்ய வேண்டும்.
2. மின் இணைப்புகளுக்கு  மீட்டர் பழுது ஏற்படாமல் சாதாரணமாக (Normal)  மீட்டர் மாற்றப்பட்டால் அந்த மின் இணைப்பிற்கு *MCD* குறைவாக இருந்தாலும் வசூல் செய்ய கூடாது.
*இந்த விளக்கத்தினை புரிந்து வாரியத்திற்கோ, நுகர்வோருக்கோ வருவாய் இழப்பு ஏற்படாதவாறு பணியாற்ற வேண்டும்*.
26.12.2005 இல் இது சம்பந்தமாக வாரியம் அறிவுறுத்தி உள்ளது. *தகவல் பகிர்வு மின்துறை செய்திகள்*
*இந்த விளக்கத்தினை கொடுத்த திட்டகுடி மதிப்பீட்டு அலுவலருக்கு நன்றி.*

AE/JE I Gr to AEE. (Elec) PAR's Pending Called for


View Download


View Download


View Download

Parliament & By election in T.N TANGEDCO Declared Holiday on 18.04.19 Orders


View Download

Technical Assistant-Direct recruitment-Selection list published

  • As per the direction of Division Bench of Honourable High Court of Madras on 20.03.2019 in W.A.2485/2018 and batch cases, the selection list for Direct Recruitment of 500 posts of Technical Assistant/Electrical and 25 posts of Technical Assistant/Mechanical are published herewith


  • Marklist


  • Selection List


  • Waiting List

மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )

  மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...