ஊட்டி:குந்தாவில் பழங்கால மின் சாதனங்களின் அருங்காட்சியகம்

ஊட்டி:குந்தா மின்வாரிய மேல்முகாமில் பழங்கால மின் சாதனங்கள் சேகரிக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.நீலகிரியில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், 12 மின் நிலையம் மற்றும், 13 அணைகள் உள்ளன. இங்குள்ள மின்நிலையம், அணை கட்டப்பட்டு, 70 ஆண்டுக்கு மேலாகிவிட்டது.அந்த கால கட்டங்களில் பயன்படுத்திய மின் கருவிகள், மோட்டார், புரஜெக்டர், டெலிபோன், எனர்ஜி மீட்டர், அன்றைய மருத்துவ உபகரணங்கள், டனல், மின் நிலையம் மற்றும் அணை கட்டுமான பணிகளின் புகைப்படங்கள், டிரான்ஸ்பார்மர்கள், பிரேக்கர் உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்கள் குந்தாவுக்கு கொண்டு வரப்பட்டன. அங்குள்ள அலுவலகம் மற்றும் திறந்தவெளியில் அருங்காட்சிய கம் அமைக்கப்பட்டது.கோடை சீசனையொட்டி, மஞ்சூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பார்வையிட, குந்தா மின்வாரியம் சார்பில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தை மின்வாரிய தலைவர் விக்ரம்கபூர் திறந்து வைத்தார். பின், நிருபர்களிடம் கூறுகையில், ''கடந்த பல ஆண்டுக்கு முன்பு பயன்படுத்திய அரிய மின்சாதனங்கள் சேகரிக்கப்பட்டு, அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பயனளிப்பதாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டு தெரிந்துகொள்ளலாம்,'' என்றார்.இங்கு திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பார்வையிட்டு செல்கின்றனர். குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் ரகு, மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்

No comments: