Regulation of Period of absence of Govt. Employees during lock down period G.O.Issued


View Download

தமிழக அரசு ஊழியர்கள் ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராவிட்டால் உரிய விடுப்பாக கருதப்படும்

....மாற்றுத்திறனாளிகள், மகப்பேறு காலத்தில் உள்ளவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் பணிக்கு வர முழு விலக்கு

...55 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் co- mobidities உரிய மருத்துவச் சான்றின் பேரில் ஊரடங்கு காலப் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்

....25.3.2020 முதல் 17.5.2020 வரை அனைவருக்கும் பணிக்காலமாக கருதப்படும்

....25.3.2020 க்கு முன் நீண்ட விடுப்பில் சென்று விடுப்பு காலம் முடிந்திருந்தாலும்  3.5.2020 வரைபணியில் சேர முடியாதவர்கள் பணியில் சேர்ந்த்தாக கருதப்படுவர்

....18.5.2020 முதல் ....அதாவது 50% பணியாளர்கள் அலுவலகம் வர ஆணையிட்ட பிறகு .....ஒரு நாள் கூட பணிக்கு வராதவர்கள் அவர்கள் அடுத்து பணிக்கு வரும் நாள் வரை தகுதி உள்ள விடுப்பாக கருதப்படும்

....தனக்கு சுழற்சி முறைப்படி பணி நாளாக அறிவிக்கப்பட்ட நாளில் பணிக்கு வரவில்லை என்றால் அவர்கள் அடுத்து பணிக்கு வரும் நாள் வரை விடுப்பாக கருதப்படும்

....கோவிட்19 அல்லாத மருத்துவ காரணங்களுக்கு உரிய மருத்துவச் சான்றின்பேரில் விடுப்பு வழங்கலாம்

....தனக்கோ குடும்ப உறுப்பினருக்கோ கோவிட்19 தொற்று இருந்தால் அல்லது தனிமைப்படுத்தப்பட்டால் உரிய சான்றிதழ் பேரில் அக்காலம் சிறப்பு தற்செயல் விடுப்பாக கருதப்படும்

...இந்த ஆணை வாரியங்கள்....சொசைட்டிகள்...கார்ப்பரேஷன்கள்..பல்கலைக்கழகங்கள்....கமிஷன்கள்...
இன்ஸ்டிடியூஷன்கள்....ஆகியவற்றிற்கும் பொருந்தும்

No comments: