மின்வாரியத்தை குறைசொல்லவோ, குற்றம் சாட்டுவதோ நோக்கமல்ல: நடிகர் பிரசன்னா




நடிகர் பிரசன்னா தற்போது தமிழ் சினிமா துறையில் பிஸியான நடிகர்களில் ஒருவர். அவர் நேற்று தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB பற்றி ஒரு ட்விட் பதிவிட்டு இருந்தார். "தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB கொரோனா லாக்டவுனில் கொள்ளை அடிக்கிறது என எத்தனை பேர் நினைக்கிறீர்கள்?" என அந்த ட்விட்டில் கேட்டு இருந்தார்.
நெட்டிசன்கள் பலரும் அது உண்மைதான் மின் கட்டணம் அதிகரித்து உள்ளது என பதிவிட ஆரம்பித்தனர். மேலும் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் மின் கட்டணம் தனக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வந்திருப்பதாகவும், அதை தன்னால் செலுத்தி விட முடியும் என்றும், சாதாரண மக்கள் எப்படி கட்டுவார்கள்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இது சர்ச்சையான நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் அவர் வீட்டில் மின்கட்டணம் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில் பிரசன்னா வீட்டில் உள்ள மின் இணைப்பு கட்டணம் பற்றி தெளிவாக விளக்கி உள்ளனர். பிரசன்னா வீட்டில் நான்கு மாதத்தில் 6920 யூனிட் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதை இரண்டாக பிரித்து முதல் இரண்டு மாதங்களுக்கான 3460 யூனிட்டுக்கு ரூ. 21,316 ரூபாயும், அடுத்த 3460 யூனிட்டுக்கு மற்றொரு 21,316 ரூபாயும் என மொத்தமாக 42,632 ருபாய் மின் கட்டணமாக விதிக்கப்பட்டு உள்ளது.

ரீடிங் எடுக்காமல் அதற்கு முந்தைய மாத தொகையையே முன்பு நிர்ணயிக்கப்பட்ட 13,528 ரூபாயை தற்போது வரை பிரசன்னா செலுத்தவில்லை. அதனால் மொத்த கட்டணம் ரூ.42,632 தற்போது மின் கட்டணமாக விதிக்கப்பட்டு உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பிரசன்னா தான் மின்சார வாரியத்தை குறை கூற வேண்டும் என்கிற எண்ணத்தில் அப்படி பேசவில்லை என வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"உண்மைதான்‌! ரீடிங்‌ எடுப்பதிலிருந்து 10 நாட்களுக்குள்‌ பொதுவாக கட்டணம்‌ செலுத்தும்‌ பழக்கமுள்ள நான்‌ , மார்ச்‌ மாதம்‌ ரீடிங்‌ எடுக்காததால்‌ கட்டணம்‌ செலுத்த தவறியது உண்மைதான்‌ . அதே அளவு இதற்கு முன்‌ காலதாமதமின்றி தவறாமல்‌ கட்டணம்‌ செலுத்தி வருகிறேன்‌ என்பதும்‌ உண்மை. வாரியம்‌ சொல்வதுபோல்‌
நான்கு மாத கணக்கீட்டாலும்‌ மார்ச்‌ மாத கட்டணம்‌ சேர்த்தும்‌ எனக்கு தனிப்பட்ட கட்டணம்‌ கூடுதலாக வந்திருக்கலாம்‌. என்‌ தனிப்பட்ட பிரச்னையாக இதை நான்‌ எழுப்பவில்லை."

"அதிக தொகை கட்டணமாக வந்திருப்பதாக எவ்வளவு பேர்‌ நினைக்கிறார்களென்று அறிந்துகொள்ளவே என்‌ ட்வீட்‌. மின் வாரியத்தை குறை சொல்வதோ குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல. பொதுவாக எல்லோருக்கும்‌ வந்திருப்பதாக சொல்லப்படும்‌ அதிக கட்டணம்‌ குறித்த கவன ஈர்ப்பும்‌ , அதன்மூலம்‌ வாரியமோ அரசோ இந்த இக்கட்டான சூழலில்‌ ஏதாவது முறையில்‌ இப்பிரச்னையில்‌ மக்களுக்கு ஒரு தளர்வோ கட்டணம்‌ செலுத்த தவணை அல்லது கால அவகாசமோ தருமாயின்‌ மிக்க உதவியாக இருக்கும்‌ என்பதே என்‌ வேண்டுகோள்‌."
"நேற்றைய தொலைக்காட்சி உரையாடலிலும்‌ அதையே நான்‌ குறிப்பிட்டிருக்கிறேன்‌. ஊரடங்கு காலங்களில்‌ மருத்துவ, காவல்‌, சுகாதார துறைகள்‌ போலவே மின்வாரிய ஊழியர்களும்‌, அதிகாரிகளும்‌ அயராது பணியாற்றியிருக்கிறார்கள்‌ என்பதை நன்றியோடு பாராட்டவும்‌ நான்‌ மறக்கவில்லை. மற்றபடி வாரியாதையோ அரசையோ குறைகூறுவதற்கான உள்நோக்கமில்லை. உள்நோக்கமில்லாதபோதும்‌ என்‌ வார்த்தை மின்வாரிய ஊழியர்கள்‌, அதிகாரிகள்‌ மனம்நோகச்‌ செய்திருப்பின்‌ அதற்காக வருந்துகிறேன்‌
மக்கள்‌ மீது விழுந்திருக்கும்‌ இந்த எதிர்பாரா சுமையை வாரியமும்‌ அரசும்‌ இறக்கிவைக்குமென எதிர்பார்க்கிறேன்‌."

"பி.கு: என்‌ வீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட முழு தொகையும்‌ எந்த நிலுவையுமின்றி
இன்று காலை நான்‌ செலுத்திவிட்டேன்‌."

இவ்வாறு பிரசன்னா கூறியுள்ளார்.


No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...