தமிழகத்தில், வீடுகள் தவிர்த்த கட்டுமானங்களுக்கு, கட்டுமான நிறைவு சான்று வழங்கினால் மட்டுமே, மின் இணைப்பு வழங்கப்படும் - தினமலர் செய்தி

சென்னை : 'தமிழகத்தில், வீடுகள் தவிர்த்த கட்டுமானங்களுக்கு, கட்டுமான நிறைவு சான்று வழங்கினால் மட்டுமே, மின் இணைப்பு வழங்கப்படும்' என, மின் வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுதும் தமிழகத்தில், அனைத்து கட்டுமானங்களுக்கும், மின் வினியோகம் செய்யும் பணியை, மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது.தற்போது சென்னையில், பன்னடுக்கு உள்ளிட்ட சிறப்பு வகை கட்டுமானங்களுக்கு மட்டும், மின் இணைப்பு வழங்க, சி.எம்.டி.ஏ., சார்பில் வழங்கப்படும், கட்டுமான நிறைவு சான்றை, மின் வாரியம் கட்டாயம் பெற்று வருகிறது. மற்ற பகுதிகளில் கட்டப்படும் கட்டுமானங்களுக்கு, அந்த சான்று கேட்கப்படுவதில்லை.

இந்நிலையில், தமிழகம் முழுதும், வீடுகள் தவிர்த்த கட்டுமானங்களுக்கு, மின் இணைப்பு வழங்க, சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., உள்ளாட்சி அமைப்பு என, ஏதேனும் ஒன்றின் சார்பில் வழங்கப்படும், கட்டுமான நிறைவு சான்று இருந்தால் மட்டுமே, மின் இணைப்பு வழங்கப்படும் என, மின் வாரியம் அறிவித்துள்ளது.கட்டுமான நிறைவுஇது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசின் ஒருங்கிணைந்த கட்டட விதி, 2019ன் கீழ், மின் இணைப்பு வழங்க நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

அதன்படி, குடியிருப்புகளை பொறுத்தவரை, 12 மீட்டர் உயரம் உள்ள வீடுகள், மூன்று வீடுகள் அடங்கிய தொகுப்பு; 750 சதுர மீட்டர் வரை கட்டப்படும் கட்டுமானங்கள், தொழிற்சாலை வகையில் இடம்பெறும் கட்டு மானங்களுக்கு, புதிய மின் இணைப்பு வழங்க, கட்டுமான நிறைவு சான்று தேவையில்லை.அதேசமயம், அந்தச் சான்று, குடியிருப்புகள் அல்லாத, 750 சதுர மீட்டருக்கு மேல் கட்டப்படும் அனைத்து கட்டடங்களுக்கும், மின் இணைப்பு வழங்க அவசியம் இருக்க வேண்டும்.

கட்டுமான பணிக்காக, தற்காலிக மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சான்று அவசியம் கட்டுமான பணி முடிந்ததும், அந்த மின் இணைப்பு துண்டிக்கப்படும். நிரந்தர மின் இணைப்பு வழங்குவதற்கு, கட்டுமான நிறைவு சான்று அ வசியம் வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments: