ஆதிதிராவிட விவசாயிகள் துரித மின் இணைப்புத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: இந்தத் திட்டத்தின்கீழ், விண்ணப்பிக்கும் விவசாயி ஆதிதிராவிடராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருப்பதுடன், நிலம் விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். அவரது பெயரில் நிலப்பட்டா இருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி -பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் இணையதள முகவரியில் (http:application.tahdco.com) விண்ணப்பத்தை ஆன்-லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும்.
ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுவோரின் வசதிக்காக தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும் ரூ.20 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் வசதி உள்ளது என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் இணையதள முகவரியில் (http:application.tahdco.com) விண்ணப்பத்தை ஆன்-லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment