பணியின்போது ஊனம்; மத்திய அரசு ஊழியர் விதிகளில் மாற்றம்

புதுடில்லி : 'மத்திய அரசு பணியில் இருக்கும் போது ஊனம் ஏற்பட்டால், அந்த ஊழியரை பணியில் இருந்து நீக்குவதோ, பதவி குறைப்போ செய்யக் கூடாது' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.

ஊனம் ஏற்பட்டால்...

இதுகுறித்து, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: பணியின் போது, ஒருவருக்கு ஊனம் ஏற்பட்டால், அதற்காக அவரை பணியில் இருந்து நீக்கவோ அல்லது பதவி குறைப்போ செய்யக் கூடாது. இதற்காக, மத்திய அரசு பணியாளர் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. 

பணியில் தொடர வாய்ப்பு

அதே போல், திடீரென ஏற்பட்ட ஊனத்தால், பணியில் தொடர முடியாத ஊழியர்களுக்கு, உரிய கிராஜுவிடி மற்றும் பென்ஷன் தரப்பட வேண்டும். உடல் ஊனமுற்றோர் நலச் சட்டத்தின்படி, ஊனமுற்ற ஊழியர்கள் பணியில் தொடர்வதற்கு வாய்ப்பு தர வேண்டும்; ஊனமுற்றவர் என்பதற்காக, பதவி உயர்வு மறுக்கக் கூடாது. இவ்வாறு செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

No comments: