மின் வாாியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்தோ்வு பற்றிய தினமலர் செய்தி

மின் வாரியத்தில், காலி பணியிடங்களை நிரப்ப, மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின் வாரியத்தில், தொழில்நுட்பம், நிர்வாகம், செயலகம், தணிக்கை, கணக்கு என, ஐந்து பிரிவுகளில், 1.37 லட்சம் பதவிகளுக்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், தற்போது, 88 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்; 49 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மின் உற்பத்தி, மின் வினியோகம், மின் கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட ஏராளமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின் வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில், காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து, புதிய ஊழியர்களை தேர்வு செய்வதற்காக, மின் வாரிய இயக்குனர்
ஒருவர் தலைமையில், மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த குழு, மின் வாரிய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, கள உதவியாளர், கணக்கீட்டாளர், தட்டச்சர் உள்ளிட்ட பிரிவில், எத்தனை ஊழியர்களை தேர்வு செய்யலாம் என, ஆய்வு செய்ய வேண்டும். பின், ஆய்வு அறிக்கைகளை, உயர் அதிகாரிகளுக்கு வழங்கியதை தொடர்ந்து, ஊழியர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, தெரிகிறது.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதிய ஊழியர்களை, வேலை வாய்ப்பு அலுவலக பணி மூப்பு, நேரடி நியமனம், போட்டி தேர்வு என, எந்த வழியில் தேர்வு செய்வது என்பது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பணி மூப்பு அடிப்படையில் தேர்வு செய்வதற்கு, அதிக வாய்ப்பு இருப்பதால், பணியில் சேர, இடைத் தரகர்களை நம்பி, யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click