கருணை வேலை கேட்டு அளிக்கப்படும் விண்ணப்பங்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப் பித்துள்ளது.
நெல்லையைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், கருணை வேலை கேட்டு அளிக்கப்படும் மனுக்களை அதி காரிகள் எவ்வாறு அணுக வேண் டும் என்பதுகுறித்து உயர் நீதி மன்றம் புதிய உத்தரவு பிறப்பித் துள்ளது.
நெல்லையைச் சேர்ந்தவர் எஸ்.வேல்ராஜ். இவரது தந்தை சண்முகய்யா மின்வாரியத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து 19.3.1992-ல் இறந்தார். அப்போது வேல்ராஜ் 12 வயது சிறுவனாக இருந்தார். மேஜரானதும் கருணை வேலை கேட்டு மின்வாரியத்துக்கு மனு அனுப்பினார். ஆனால் தந்தை இறந்து 3 ஆண்டுக்குள் விண்ணப்பிக்கவில்லை என்று கூறி அவரது மனுவை 15.7.2000-ல் மின்வாரிய அதிகாரிகள் நிராகரித் தனர். இதை ரத்துசெய்து வேலை வழங்கக் கோரி வேல் ராஜ் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி 13.9.2010-ல் தள்ளுபடி செய்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்து தனக்கு கருணை வேலை வழங்கக்கோரி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய் தார். அந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிரு பாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் தந்தை இறக்கும் போது மனுதாரர் 12 வயது சிறுவ னாக இருந்துள்ளார். அப்போது அவர் கருணை வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தால், 12 வயதுதான் ஆகிறது என்று கூறி அவரது மனுவை அதிகாரிகள் நிராகரித்து இருப்பர். இதனால் மேஜராகும் வரை காத்திருந்து கருணை வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளார். இது சரியானதுதான். பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியரின் குடும்பத்தின் அவநிலை, அவ ரது இளம்வயது மனைவி, குழந்தைகளின் நிலையைக் கருத்தில் கொண்டு கருணை வேலை வழங்கியிருக்க வேண் டும். ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை.
கருணை வேலை கேட்பதற்கு, அரசு ஊழியர்கள் இறந்து 3 ஆண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது சூத்திரம் அல்ல. ஒவ்வொரு விண்ணப்பங் களையும் கோரிக்கையின் உண் மைத் தன்மையை ஆராய்ந்து வித்தியாசமான முறையில் அதி காரிகள் அணுக வேண்டும்.
இந்த வழக்கில் மனு தாரர் மேஜரானதும் விண்ணப்பித் துள்ளார். அவரது விண்ணப் பத்தை ஏற்க வேண்டும்.
தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மனுதார ரின் மேல்முறையீட்டு மனு ஏற் கப்படுகிறது. கருணை வேலை கேட்டு மனுதாரர் அளித்த மனுவை மின்வாரியத் தலை மைப் பொறியாளர் 12 வாரத் தில் பரிசீலித்து உரிய உத் தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். நன்றி tamil.thehindu