வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், நவம்பர் 30-ந்தேதி வரை நீட்டிப்பதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில், வருமான வரி தாக்கலை உரிய நேரத்தில் சமர்பிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இன்று வரையிலும் அதில் பல்வேறு வகையான சிக்கல்கள் ஏற்பட்டு வருவதால், இதனை கருத்தில் கொண்டு, இன்றுடன் முடிவடையவிருக்கும் (செப்டம்பர் 30-ந்தேதி) கால அவகாசத்தினை, மீண்டும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே ஜூன் 30, ஜூலை 30, செப்டம்பர் 30 என மூன்று மூறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இனியும் அவகாசம் வழங்கப்படுமா என்பது சந்தேகம் தான். ஆக வருமான வரி செலுத்துவோருக்கு இது மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஒரு வேளை நீங்கள் காலதாமதமாக செலுத்தினால் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.
நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் சூழலில் லாக்டவுனினால் பொருளாதாரம் முடங்கிக் கிடந்தது. இதனால் தொழில் துறையினரும், தனி நபர்களும் தங்களது வருமானத்தினை இழந்து தவித்து வந்தனர். இதற்கிடையில் வருமான வரித் துறையானது மூன்று முறை அவகாசத்தினை நீட்டித்தது. இந்த நிலையில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அதிகரிக்கப்படுவது சந்தேகம் தான். ஆக வருமான வரி செலுத்துபவர்கள் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.ஏற்கனவே 2019 - 20 நிதியாண்டு வரையிலான காலத்திற்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு கடைசி தேதியும் நவம்பர் 30 ஆகும். வருமான வரியை தாமதமாக செலுத்தினால் அபராதம் என்று தெரியும். சரி எவ்வளவு அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன்னர் வெளியிட்டிருந்த அறிவிப்பின் படி, டிசம்பர் 31ம் தேதி வரை தாமதமாக செலுத்தினால், கூடுதலாக 5,000 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்படும். டிசம்பரையும் தாண்டி மார்ச் 31ஆம் தேதி வரை வருமான வரியைத் தாக்கல் செய்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறை கொரோனாவின் தாக்கம் நீடித்தால் மீண்டும் அவகாசம் வழங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Read more at: https://tamil.goodreturns.in/news/cbdt-extends-itr-filing-date-to-november-30-2020-020796.html
No comments:
Post a Comment