Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
80 மற்றும் அதற்கு மேல் வயது முடிந்த ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்குவது குறித்து தமிழக அரசு தெளிவுரை
ஊரடங்கு காலத்தில் மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஊரடங்கு காலத்தில் முந்தைய மின் கட்டண தொகை அடிப்படையில் புதிய கட்டணம் நிர்ணயிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் எம்.எல். ரவி வழக்கு தொடர்ந்தார். ஊரடங்கு காலத்தில் 4 மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது அதிக மின் கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கவில்லை என்றும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்ததால் மின் கட்டணம் அதிகமாக இருக்கும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது
புதிதாக மின் கணக்கீடு செய்யப்படும்போது ஏற்கெனவே செலுத்திய தொகையை கழித்துக்கொண்டு புதிதாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த விதிமீறலோ, தவறோ இல்லை என தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அப்போது மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்று நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
தனிப்பட்ட நபர்களுக்கு குறைகள் இருப்பின் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
தமிழ்நாடு மின் குறைதீர்பாளர்களின் தீர்வுகள் ( Ombudsman ) SL.N 013 and 20/2020
விவசாய மின் இணைப்பு வழங்கல் 2020-2021
#விவசாய_மின்_இணைப்பு_வழங்கல்_2020_21.
1.#சாதாரண_முதன்மை_வரிசையில். (Normal) 31.03.2003 வரையிலும்.
2.10,000 ரூபாய் திட்டத்தில் 31.03.2004 வரையிலும்.
3.25,000 & 50,000 ரூபாய் திட்டங்களில் 31.03.2020 வரையிலும்.
4.விரைவு தட்கல் திட்டத்தில் 31.08.2020 வரையிலும் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கும்.
5.அரசு இடஒதுக்கீடு திட்டங்களில்(தாட்கோ, முன்னாள் இராணுவத்தினர்,கைம்பெண், மாற்றுத்திறனாளி,கலப்புத் திருமணம்,பாரா மிலிட்டரி,இராணுவ சிப்பாய்,ST,BC,MBC,DC) பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கும்.
#விரைவில் மின் இணைப்பு வழங்கப்பட இருக்கிறது.ஆகையால்,மேற்கண்ட தேதி களுக்குள் பதிவு செய்தவர்கள். மின்இணைப்பு பெற தயார்நிலை செய்யுமாறும் சம்பந்தப்பட்ட பிரிவு.(அல்லது) செயற் பொறியாளர் அலுவலகங்களை அனுகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
#சாதாரண_வரிசை: 21837விண்ணப்பங்கள்.
#RSFS_10000: 1000 விண்ணப்பங்கள்.
#RSFS_25000: 215 விண்ணப்பங்கள்.
#RSFS 50000: 571 விண்ணப்பங்கள்.
#விரைவு_தட்கல்: 25000 விண்ணப்பங்கள்.
#தாட்கோ: 350 விண்ணப்பங்கள்.
#இதர_அரசு_இட_ஒதுக்கீடு: 1027 விண்ணப்பங்கள்.
#மொத்தம்: 50000 மின்இணைப்புகள்....
வழங்கப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)