அரசு ஊழியரின் 2-வது மனைவியின் குழந்தைகளுக்கு சொத்துரிமை இருப்பதை சுட்டிக்காட்டி, அரசு கருணை வேலை கோர முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.


நெல்லை மாவட்டம் திம்மராஜபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவரின் மனு மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. முத்துராஜ் தனது மனுவில் தூத்துக்குடி மாவட்டத்தில் தனது தந்தை மாலையப்பன் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்ததாகவும், கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் அவர் மரணமடைந்துவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். 


தான் அவரது இரண்டாவது மனைவியின் மகன் என்பதால், தனக்கு கருணை வேலை அளிக்க முடியாது என்று காவல்துறை தெரிவித்து விட்டதாகவும், எனவே தனக்கு கருணை வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தமிழகத்தை பொருத்தவரை 'ஒருவருக்கு, ஒரு மனைவி' என்ற அரசின் கொள்கை மற்றும் விதி நடைமுறை உள்ளதாகவும், சில மதங்கள் பல தார திருமணங்களை அனுமதித்தாலும், அரசு ஊழியராக இருப்பவர் அரசின் முன் அனுமதி இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்தார். 



மேலும் அரசு ஊழியர்களின் இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு சொத்துரிமை இருப்பதை சுட்டிக் காட்டி 'அரசு கருணை வேலை' கோர முடியாது என்றும், கருணை வேலை என்பதும், சொத்துரிமை என்பதும் வெவ்வேறாகும் என்றும் சொத்துரிமையை மேற்கோள் காட்டி இரண்டாவது மனைவி மற்றும் அவரின் குழந்தைகள் கருணை வேலை கோர முடியாது என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click