முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், தேர்தல் அறிக்கை வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்கான கோப்பில், முதல் கையெழுத்திட உள்ளார் - தினமலா் செய்தி

முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், தேர்தல் அறிக்கை வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்கான கோப்பில், முதல் கையெழுத்திட உள்ளார்.
வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை, மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு, 1 - 100 யூனிட்; 101 - 200; 201 - 500; 500 யூனிட்டுக்கு மேல் என்ற பிரிவுகளில், கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. 

500 யூனிட்டிற்கு கீழ் மின்சாரம் பயன்படுத்து வோருக்கு, 1 யூனிட்டுக்கு, மூன்று முதல், 4.60 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பிரிவு நுகர்வோருக்கு, குறிப்பிட்ட தொகையை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. ஆனால், 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துவோர், மானியம் இல்லாமல் முழு கட்டணமும் அதாவது, 1 யூனிட், 6.60 ரூபாய் செலுத்த வேண்டும். 

தற்போது வீடுகளில், 'ஏசி, பிரிஜ், வாஷிங் மெஷின்,லேப் - டாப்' உள்ளிட்ட மின் சாதனங்களால், மின் பயன்பாடு அதிகம் உள்ளது. இதனால், பல வீடுகளில், இரண்டு மாதங்களுக்கு, 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவதால், பலர் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும், மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும்' என, தேர்தல் அறிக்கையில் அறிவித்தன. 

அதேசமயம், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை யில், 'தற்போதைய கணக்கீட்டு முறைப்படி, 100 யூனிட் மின்சாரம், கட்டணம் ஏதும் இல்லாமல், வீடுகளுக்கு இலவசமாகவழங்கப்படும்' என, 
அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, முதல்வராக ஜெயலலிதா, நாளை பதவி ஏற்றதும், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் கோப்பில், முதல் கையெழுத்து போட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்றதும், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற் கான கோப்பில், முதல் கையெழுத்திட உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. மின் வாரியத்தின் சார்பில், இதுகுறித்த கோப்புகள் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. 

இவை தலைமை செயலகத்திற்கு அனுப்பப் படும். முதல்வர் கையெழுத்திட்டு, அரசாணை வெளியானதும், இத்திட்டம், ஜூன் மாதம் செயல்பாட்டுக்கு வரும். இதன்மூலம், மின் வாரியத்திற்கு, ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் வரை செலவாகும். அதை, தமிழக அரசு மானியமாக வழங்கும்.

- தினமலா்  நிருபர் -

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click