பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்தாலும் ஈட்டிய விடுப்புத்தொகை தர வேண்டும் : ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை : பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்தாலும் அரசு ஊழியருக்கு ஈட்டிய விடுப்புத்தொகையை வழங்க வேண்டுமென ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த டி.வீரவினோதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தஞ்சை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 16.6.1976ல் கிளை மேலாளராக பணியில் சேர்ந்தேன். 2002ல் பொதுமேலாளராக பதவி உயர்வு பெற்றேன். இந்நிலையில் குற்றச்சாட்டின் பேரில் 2010ல் டிஸ்மிஸ் செய்யப்பட்டேன். தொடர்ந்து 34 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். இதனால் எனக்கு மீண்டும் பணி வழங்கும்படி அதிகாரிகளிடம் விண்ணப்பித்தேன். எந்த பலனும் ஏற்படாத நிலையில், 2012ல் எனது பணிக்காலம் முடிந்து விட்டது. எனது பணிக்காலத்தில் 138 நாளுக்கு ஈட்டிய விடுப்புத் ெதாகையாக ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 128 வழங்க வேண்டும். இதை வழங்க வேண்டி விண்ணப்பித்தேன். முறையாக ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே ஈட்டிய விடுப்புத் தொகை வழங்க முடியும் எனக்கூறி என் மனுவை இணைப்பதிவாளர் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். எனவே, எனக்கு வழங்க வேண்டிய ஈட்டிய விடுப்புத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஹரிபரந்தாமன், `அரசு ஊழியராக பணியாற்றும் ஒருவரது ஈட்டிய விடுப்பு, சிறப்புரிமை விடுப்புகளை சேமித்து வைத்து, ஓய்வு காலத்திற்கு பின் வழங்க வேண்டியது அவசியம். அதனால்தான் விடுப்புகளை அரசு ஊழியர்கள் சேர்த்து வைக்கின்றனர். இதேபோன்ற வழக்கில், பணியின் போது அரசு ஊழியர் சேர்த்து வைத்த விடுப்பிற்கான பணத்தை, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததற்காக வழங்க மறுக்க கூடாது என பஞ்சாப் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் மனுதாரரின் கோரிக்கையை இந்த நீதிமன்றம் ஏற்கிறது. ஈட்டிய விடுப்புத் தொகையை வழங்க மறுத்த இணைப்பதிவாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு வழங்க வேண்டிய ஈட்டிய விடுப்புத் தொகையை 6 வாரத்திற்குள் வழங்க வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளார்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=199038

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click