மின் வாரிய வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு சில கருத்துக்கள்

அன்பார்ந்த நண்பர்களே இப்பதிவு வாரிய வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு
இது தொடர்பாக வாரிய ஆணை படித்தாலே பல விடயங்கள் புரிந்திருக்கும் ஆனாலும் தொடர் கேள்விகள் பல வரவே இப்பதிவு
முக்கியமாக வாரியத்தின் அறிவிப்பு என்று வரும் என தெரியவில்லை வந்தவுடன் அனைவருமே பகிர்வார்கள் அதுவரை காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்
01.வாரிய இணையம் மற்றும் முக்கியமான தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் எப்போது எப்படி என்பன பற்றிய அறிவிப்பு பி.ஈயில் பல உள்முக படிப்புகள் எத்தனை சதவீதம் என்பது பற்றி என வெளியிடப்படும் என தெரிய வருகிறது.
02. அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலமாகவே பதியப்படும் என தெரிகிறது
03. அனைத்தும் முடிந்த பிறகு தங்களுக்கான தேர்வு நடைபெறும்
04. தேர்வு பெரும்பாலும் ஒரு கேள்விக்கு நான்கு பதில்கள் அளித்து கோடிங் அல்லது ஷேடிங் முறைப்படி இருக்கும் என தெரிய வருகிறது.
05. சிலபஸ் பற்றி தெரியவில்லை. இருந்தாலும் தங்கள் படித்த பாடம் மற்றும் மின்துறை சம்பந்தமாக கேள்விகள் இருக்கலாம் என தெரிய வருகிறது
06. தேர்வில் 85 மார்க்கிற்கான கேள்விகள்
07.தேர்வில் இருவரும் ஒரே மார்க் எடுக்கும் பட்சத்தில் வாரியத்தில் அப்ரண்டிஸ் முடித்திருந்தால் அவருக்கு முதன்மை அளிக்கப்பட்டு தேர்வாகும் நிலை உள்ளதாக தெரிய வருகிறது
08. பிறகு ஒரு பதவிக்கு 5 பேர் வீதம் நேர்முகத் தேர்விற்கு (வைவா) அழைக்கப்பட்டு அதற்கு 15 மார்க்குகள் என ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிய வருகிறது
09. மற்றும் தமிழக அரசின் உத்திரவின்படி இடஒதுக்கீடு அடிப்படை ஊனமுற்றோர் ஒதுக்கீடு மற்றுமுள்ள ஒதுக்கீட்டின் படி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிய வருகிறது.
10. இன்னும் பல கேள்விகள் இருந்தாலும் வாரியத்தின் அறிவிப்பு முறையாக வெளியிட்ட பிறகே அனைத்தும் தெரிய வரும் (உதாரணம் வயது அடிப்படை பிற விடயங்கள் )

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click