Join us on Facebook

Please wait.. 10 Seconds Cancel
இந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது

தங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்

Sep 18, 2015

அட்டைப்பட்டியல் வசூல் பணி நேர உயர்வுக்கு – AESU சங்கத்தின் எதிர்ப்பு கடிதம்

பெறுநர்                                                                                 16-09-2015
செயலாளர்,
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்,
அண்ணாசாலை,
சென்னை – 600 002.
ஐயா,
                                பொருள் : தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் –
                                  அட்டைப்பட்டியல் பிரிவு – வசூல் பணி நேரம் அதிகரிப்பை
                                  அமுல் படுத்திடும் நோக்கத்தினை கைவிடக் கோருதல்.  
                                பார்வை : தங்களது கடித எண் 50539 /A9 / A92/2015-1, நாள் 08-09-2015.

            பார்வையில் காணப்படும் தங்கள் கடித்தத்தில் அட்டைப்பட்டியல் ஊழியர்களின் வசூல்பணிநேரத்தை 1½ மணிநேரம் உயர்த்திடும் நோக்கத்துடன் தொழில் தகராறு சட்டம் பிரிவு 9 A ன் கீழ் தாங்கள் கொடுத்துள்ள முன்னறிவிப்பினை பெற்றுக்கொண்டோம்.
            தங்களது கடிதத்தின் இணைப்பில் குறிப்பிட்டுள்ளது போல அட்டைப் பட்டியல் – பணம் வசூலிக்கும் ஊழியர்களான, கணக்காளர்கள் மற்றும் கணக்கீட்டு ஆய்வாளர்களுக்கு அலுவலக பணிநேரம் காலை 08-30.மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரையும் மதியம் 01.30 முதல் 03.30 மணிவரை ( மதியம் 02.30 மணிக்கு வசூல் மையம் மூடப்படும் ) என்பது தொழில்தகராறு சட்டம் பிரிவு 12(3) ன் கீழ்     24-08-1987 அன்று வாரிய நிர்வாகத்திற்கும், தொழிற் சங்கங்களுக்கும் இடையே ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தில் பிரிவு 25ல் வரையறுக்கப்பட்ட ஷரத்தாகும்.

            மேற்கண்ட ஒப்பந்த ஷரத்து  நிர்வாகத்திற்கும் தொழிற் சங்கங்களுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு சட்டத்தின்படியும், நியாயத்தின்படியும், தேவைகளின்படியும், நிர்வாக நலன், தொழிலாளர் நலன், பொதுமக்கள் வசதி முதலிய அனைத்து அம்சங்களையும் சரிபார்த்து உருவாக்கப் பட்டதாகும். 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கும் இப்பணிநேரம் அனைவருக்கும்  வசதியாகவே  இருந்து  வருகிறது.  எத்தரப்பிலிருந்தும்    இப்பணி
-2-
நேரத்தை மாற்றுவது குறித்து எவ்விதமான கோரிக்கையும், பொதுமக்களிடமிருந்தோ அல்லது அவர்களது கருத்துக்களை பிரதிபலிக்கும் நுகர்வோர் மையங்களிலிருந்தோ நாங்கள் அறிந்து நிர்வாகத்திற்கு வரவில்லை அல்லது ஜனநாயகத்தின் 4வது தூணாக விளங்கும் பத்திரிகைகளிலோ இது பற்றி எதுவும் இதுநாள்வரை எழுதப்படவில்லை.
             ஆனால் அட்டைப்பட்டியல் பணியாளர்கள் மீது தேவையற்ற காழ்ப்புணர்வைக் கொண்ட சங்கம் ஒன்று விவரம் அறியாமல் கொடுத்த  கடிதத்தின் அடிப்படையில்தான் நிர்வாகம் பணிநேர உயர்வுக்கான சட்ட முன்னறிவிப்பை கொடுத்துள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். 
            வாரியத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளன்புள்ள, இணக்கமான சூழ்நிலை தொடர்ந்து இருந்து கொண்டு வருகிறது. இத்தகைய ஒரு அருமையான தொழில் உறவு, வேறு எந்த தொழில் நிறுவனத்திலும் இல்லை என்பதை எங்களால் உறுதியாகக் கூறமுடியும்.
            கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வளவோ சிக்கலான பிரச்சனைகளையெல்லாம் இருதரப்பு, முத்தரப்பு பேச்சு வார்த்தைகள் மூலம் சுமூகமாக தீர்வு கண்டுள்ளோம். தொழில் தகராறு சட்டம் பிரிவு 9 A ன் கீழ் முன்னறிவிப்பு கொடுத்துதான், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.
            வசூல் பணிநேரத்தை 2.30 மணியிலிருந்து 3.30 மணி வரை நீட்டிப்பதற்கு தாங்கள் கூறும் காரணங்கள் போதுமானவையல்ல. கணினி, வசூல் செய்த பணத்தை எண்ணாது. ஆயிரம், ஐந்நூறு, நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் என நோட்டுக்களைப் பிரிக்காது. சில்லறை நாணயங்கள் எவ்வளவு என்று எண்ணாது. ஒவ்வொரு பகுதி ரூபாய் நோட்டுக்களுக்கும் ரப்பர் பேண்டு போடாது. கையிலிருக்கும் பணமும் கணினியில் காட்டும் தொகையும் ஒன்றாக உள்ளதா என்று சரி பார்க்காது. செலான் எழுதாது. பி.ஸி.பி. எழுதாது. வருவாய் மேலாளரிடம் பாதுகாப்பிற்கு பணத்தை ஒப்படைக்காது. வங்கிப் பிரதிநிதி ஒவ்வொரு வசூல் மையமாக சென்று பின்னர் தன் மையத்திற்கு வரும்போது அவரிடம் ஒப்படைத்து கையொப்பம் பெறாது. இவ்வசதி இல்லாத இடங்களில் வங்கிக்கு நேரிடையாக சென்று பணத்தைக் கட்டாது.  இப்பணிகளையெல்லாம் மனித சக்தியால்தான் செய்திட முடியும் என்பதால்தான் வசூல் நேரத்தை 2.30மணியோடு முடித்து இதரப் பணிகள் செய்வதற்கு மேலும் ஒருமணிநேரம் அதாவது 3.30 மணிவரை அலுவலக நேரமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
தாங்கள் கூறுவதுபோல் 3.30மணிவரை வசூல் பணியே செய்துகொண்டிருக்க வேண்டும் என்றால் மேலே காணப்படும் பத்தியில் உள்ள பணிகளை செய்திட கூடுதல் ஒருமணிநேரம் வேண்டாமா? அப்படி மேலும் ஒருமணிநேரம் செய்ய வேண்டுமென்பதாலும், காலை 8.00 மணிக்கே வசூல் துவங்குவதாலும், நடைமுறையில் ஊழியர்களின் பணிநேரம் 6 மணியிலிருந்து 7½   மணிநேரமாக உயராதா? அலுவலகப் பணியாளர்களுக்கு தொழிலாளர்கள் சட்டங்கள் படி  

-3-
6 மணிநேரம்தானே?  அதற்கு மேல் 1½ மணிநேரம் பணிசெய்ய வேண்டுமென்றால் இதற்கு கூடுதல் ஊதியம் தரவேண்டுமல்லவா?
இவ்வளவு விஷயங்கள்,  தாங்கள் உத்தேசித்திருக்கும் பணிநேர அதிகரிப்பு பிரச்சனையில் இருக்கும்போது, இதை எப்படி தொழில் தகராறு சட்டம் பிரிவு 9 A ன் முன்னறிவிப்பு கொடுத்து தீர்வு காணமுடியும்?
எனவே மேற்கூறியவைகளை தாங்கள் சீர்தூக்கிப் பார்த்து
1)    தங்களது 08-09-2015 கடிதத்தில் கொடுத்துள்ள தொழில் தகராறு சட்டம் பிரிவு 9 A ன் முன்னறிவிப்பினை உடனடியாகக் நிறுத்திவைக்குமாறும், 
2)    காலம் காலமாய் பின்பற்றப்படும் வழக்கம்போல, தொழிற்சங்கங்களோடு பேச்சு வார்த்தை நடத்தி, இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணுமாறும் வேண்டுகிறோம்.

                                        தங்கள் உண்மையுள்ள,


                                         பொதுச்செயலாளர்.

நகல் :-     கிளைச்செயலாளர்கள், வட்டச்செயலாளர்கள், மண்டலச்செயலாளர்கள் 
            மற்றும் மத்தியசங்கப் பொறுப்பாளர்கள்.
நகல்   ;-   செய்தி மடல்.  
Post a Comment