தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்வு


தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ம் தேதி முன் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களும் இதன் மூலம் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.
இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு ரூ.366/- முதல் ரூ.4620/- வரையில் சம்பள உயர்வு கிடைக்கும்.  இந்த அகவிலைப்படி 01.01.2015 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இயத உயர்வினால் சுமார் பதினெட்டு லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வின்  காரணமாக அரசுக்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு 1222.76/- கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click