மறைந்த அரசு ஊழியரின் பண பலன்களை 2–வது மனைவியின் வாரிசு பெற உரிமை உள்ளது ஐகோர்ட்டு தீர்ப்பு

மறைந்த அரசு ஊழியரின் ஓய்வூதிய பண பலன்களை பெறுவதற்கு 2–வது மனைவியின் வாரிசுகளுக்கு உரிமை உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இரண்டு திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றியவர் சந்திரன். இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே உள்ள கன்னடஹள்ளி ஆரம்ப சுகாதார மையத்தின் நர்சாக பணியாற்றி வரும் ராணி என்பவரை சந்திரன் 2–வது திருமணம் செய்துகொண்டார். அவருக்கு 2 குழந்தைகள் பிறந்தனர்.இந்நிலையில், கடந்த மே மாதம் சந்திரன் இறந்தார். இதையடுத்து சந்திரனின் ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்களை தனக்குத் தரவேண்டும் என்றும் கருணை அடிப்படையில் தனது வாரிசுகளில் ஒருவருக்கு பணி வழங்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மருத்துவ அதிகாரியிடம் பானுமதிமனு கொடுத்தார். அதேபோல, இரண்டாவது மனைவி ராணியும் மனு கொடுத்தார்.

உரிமை உள்ளது

இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் பானுமதி வழக்கு தொடர்ந்தார். அதில், எனது கணவரின் ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட பலன்களைப் பெற எனக்கும் எனது குழந்தைகளுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதேபோல, ராணியும் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்குகளை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்து பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:–

சட்டவிதிகளின்படி கணவனின் ஓய்வூதியம் உள்ளிட்ட பண பலன்களை பெறுவதற்கு முதல் மனைவிக்கும், அவரது வாரிசுகளும் உரிமை உள்ளது. அந்த உரிமை 2–வது மனைவியின் வாரிசுகளுக்கும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.
எனவே, இந்த வழக்கில் ராணியின் வாரிசுகளுக்கும் தந்தையின் பணப்பலன்களைப் பெற உரிமை உள்ளது.
மகளுக்கும் சம உரிமை
மேலும், தன் மகளுக்கு திருமணம் ஆகி விட்டதால், பணி கொடைகளை மகனுக்கு மட்டும் வழங்கவேண்டும் என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது.
மூத்த குடிமக்கள், பெற்றோர் பாதுகாப்பு சட்டத்தில் பெற்றோரை மகன் மட்டுமல்லாமல் மகள்களும் பராமரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே, மகளுக்கு திருமணம் ஆனாலும் தந்தையின் பண பலன்களை பெற அவருக்கு உரிமை உள்ளது.
அதேநேரம் கருணை அடிப்படையில் யாருக்கு பணி வழங்குவது என்று என்ற கேள்வி இந்த வழக்கில் எழுந்துள்ளது.
உரிமை இல்லை
2–வது மனைவியின் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் பணியைப் பெற உரிமை இருந்தாலும், அவர் நர்சாக அரசுப் பணியில் இருப்பதால் அவரது வாரிசுகள் கருணை அடிப்படையில் பணியைப் பெற உரிமை இல்லை. எனவே, முதல் மனைவி பானுமதியின் வாரிசுகளில் இருவரில் ஒருவர் ஒப்புதலின் அடிப்படையில் மற்றொருவருக்கு வாரிசு வேலையை அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click