தடையற்ற "நேரடி மின்சாரம்' விநியோகம்: சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடிப்பு ( dinamani )

இந்தத் திட்டம், தமிழகத்தில் முதல்கட்டமாக மதுராந்தகத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதனால் 250 வீடுகள் பயன்பெற உள்ளன. பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் கவுன்சில் உறுப்பினரும், சென்னை ஐ.ஐ.டி. எலக்ட்ரிக்கல் பொறியியல் துறைப் பேராசிரியருமான அசோக் ஜுன்ஜூன்வாலா, சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி மற்றும் அவர்களுடைய குழு இணைந்து இந்த புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.

தற்போது மின் வாரியத்தின் மூலம் மின் நுகர்வோருக்கு விநியோகிக்கப்படுவது மாற்று (ஏசி) மின்சாரம் ஆகும். சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்திருப்பது நேரடி மின்சாரம் மூலமான மின் விநியோகமாகும். இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறியது:
சென்னை ஐ.ஐ.டியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின் மூலம் மின் விளக்குகள், மின்விசிறி மற்றும் செல்போனை சார்ஜ் செய்துகொள்ளக் கூடிய அளவிலான மின்சாரம் மட்டுமே விநியோகிக்க முடியும்.
ஆனால் மின் தேவை அதிகரிக்கும்போது, ஆண்டு முழுவதும் தடையற்ற மின் விநியோகத்தை இத்திட்டத்தால் அளிக்க முடியும்.
தமிழகத்தில் முதல்கட்டமாக மதுராந்தகத்தில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.  தமிழ்நாடு மின்வாரியத்தின் கிரிட்டில் இந்த மின்சாரம் இணைக்கப்பட்டு, மதுராந்தகத்தில் உள்ள 250 வீடுகளுக்கு இந்த மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளது.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click